ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவுகள் :*
சாக்த வழிபாடு என்பது அம்பிகையை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவது. நம் நிலத்தின் ஆதி வழிபாட்டு முறையான தாய்த் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையது.
ஆதி அன்னையே சகல சக்தியாகவும் திகழ்ந்து சகல உலகங்களையும் காப்பவள் என்பதுதான் இதன் தாத்பர்யம். அன்னையை வழிபடும் விழாக்களில் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
பொதுவாக நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் ஆயுதபூஜைக் காலமான மகாநவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர்.
காலப் போக்கில் அந்த வழக்கம் குறைந்து முக்கியமான நான்கு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கமே உள்ளது.
வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும்.
ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment