Sunday, August 25, 2024

கிருஷ்ண ஜெயந்தி : பூஜை, விரதம் வழிபாடு முறைகள்....

கிருஷ்ண ஜெயந்தி : பூஜை, விரதம் வழிபாடு செய்வது எப்படி❓
கிருஷ்ண ஜெயந்தி அபிஷேக, அலங்காரம் செய்வது எப்படி? கண்ணா, கிருஷ்ணா, கோவிந்தா, கோபாலா, மாதவா, கேசவா, முரளீதரா, முரளி மனோகரா என பெயர்களால் அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணுவின் 8வது அவதாரமான கிருஷ்ண அவதாரம்.

பல அசுரர்களை அழிக்கவும், மகாபாரத யுத்தத்தின் மூலம் நீதியை நிலை நாட்டி, தர்மம் தான் எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்தக் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.

கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் அவர் அற்புத நாளில் நாம் செய்ய வேண்டிய அபிஷேக, அலங்கார, பூஜை முறைகளைக் குறித்தும், விரத முறை குறித்து இங்கு பார்ப்போம்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரதம் : Krishna Jayanthi Viratham
எப்போதும் விரதம் இருப்பதைப் போல கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் தொடங்கலாம்.

அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

இந்த தினத்தில் மூன்றே முக்கால் நாளிகையாவது அதாவது (ஒரு நாளிகை 24 நிமிடம்) ஒன்னரை மணி நேரமாவது விரதம் இருப்பது நல்லது.

இதனால் நாம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கி, நல்லருள் சேரும். குடும்பத்தில் குறையாத செல்வங்கள் பெற்றிடலாம்.

விரத நாளில் எடுத்துக்கொள்ளக்கூடியவை :

விரத தினத்தின் போது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் அரிசியால் செய்ததைத் தவிர பழங்கள், பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.

கிருஷ்ணர் பாதம் :

கிருஷ்ண ஜெயந்தி என்றால் நம் நினைவுக்கு வருவது குட்டி கிருஷ்ணர், குட்டி ராதை. அன்றைய தினம் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் மூலம் கிருஷ்ணர் பாதம் வைக்கலாம். பெரியவர்களாக இருந்தால், நாமே கிருஷ்ண பாதம் வடித்து வீட்டில் கிருஷ்ணர் வருவது போல கிருஷ்ண பாதம் வைக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை முறை : How to do Krishna Janmashtami Puja at Home

கிருஷ்ணர் பிறந்த போது மூன்று நபர்கள் மட்டும் விழித்திருந்ததாகக் கூறப்படுகிறது. வசுதேவர்- தேவகி மற்றும் சந்திர பகவான். இதனால் கிருஷ்ண ஜெய்ந்தி வழிபாடு, பூஜை சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் செய்வது சிறந்தது.

அதிகாலையில் குளித்துவிட்டு நாம் விரத சடங்குகளைத் தொடங்க வேண்டும்.

முடிந்தால் நீங்களே களிமண்ணால் கிருஷ்ணர் சிலையை செய்து வழிபடுவது சிறந்தது.

கிருஷ்ண பூஜைக்காக ஒரு பலகையில் சிவப்பு நிற துணியை விரிக்கவும்.

பிறகு அந்த பீடத்தில் பகவான் கிருஷ்ணரின் சிலை அல்லது புகைப்படத்தை நிறுவ வேண்டும்

பூஜை தொடங்குவதற்கு முன்னர் கிருஷ்ணருக்கு முன் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மீது சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மீது ஒரு வெண்கல குடம் நிறைய நீருடன் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, தேங்காயைக் கலசம் போல வைக்கவும்.

கலசத்தின் வலது புறம் மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். பின்னர் அந்த கலசத்திற்கும் பிள்ளையாருக்கும் திலகம் இடவும், பூக்கள், மாலைகள் இடவும்.

கோகுலாஷ்டமி பூஜை செய்வது எப்படி ? - Janmashtami Pooja

பூஜை தொடங்குவதற்கு முன் கிருஷ்ணரின் சிலையை நிறுவிய பின், இரண்டு குத்து வைத்து, நெய் விளக்கை ஏற்றி, தூபக் குச்சிகளை ஏற்றவும்.

நெய் விளக்கேற்றி அதன் முன் பூஜை பொருட்களைவைத்து பிள்ளையாரையும், கிருஷ்ணரையும் வணங்கி பூஜையை தொடங்கலாம். தடை ஏதும் இல்லாமல் பூஜை நிறைவேறவும்.

பூஜை தொடங்கும் முன் விநாயகர் வழிபாடு செய்து

“ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்.”

என்ற கணபதி காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, பூஜையைத் தொடங்க வேண்டும்.

கலசத்திற்கும், கிருஷ்ணருக்கும் தீப, தூப ஆராதனை செய்ய வேண்டும். கிருஷ்ண துதி, மந்திரங்களை உச்சரித்து வழிபடவும்.

குறைந்தது கிருஷ்ணர், ராதைக்கான காயத்திரி மந்திரமாவது கூறுங்கள்

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் : Krishna Gayatri Mantra

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,

வாசுதேவாய தீமஹி,

தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

ராதாவிற்கான காயத்ரி மந்திரம் : Radha Gayatri Mantra

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,

கிருஷ்ணப்ரியாயே தீமஹி,

தந்நோ ராதா ப்ரசோதயாத்.

இதை உச்சரித்து கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.

கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்து “ஸர்வம் க்ருஷணார்ப்பனம்” என்ற உச்சரித்து, கிருஷ்ணா நீங்கு எழுந்தருளி தன்னுடைய அலங்காரம், பூஜை, வழிபாட்டை ஏற்றுக் கொள்வாயாக என கூறி பூஜையை தொடங்கவும்.

கிருஷ்ணரை வழிபாட்டிற்கு அழைத்த பிறகு, கிருஷ்ணருக்கு பஞ்சாமிர்தத்தால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யவும்.

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்த பின், கங்கை அல்லது ஏதேனும் புண்ணிய நதியின் நீரால் அபிஷேகம் செய்யவும். நீங்கள் கிருஷ்ணரின் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்தால், அதன் மீது கங்கை நீர் மற்றும் பஞ்சாமிர்தத்தைத் தெளிக்கவும்.

இப்போது முடிந்தால் கிருஷ்ணருக்கு மஞ்சள் ஆடை அணிவிக்கவும். இல்லையெனில், உங்களிடம் உள்ள சுத்தமான துணியையும் அணிவித்து, அலங்காரம் செய்யுங்கள்.

கிருஷ்ணரின் அலங்காரம் முடிந்ததும் தீப, தூபத்தைக் காட்டுங்கள்.

பிறகு வெளியில் சென்று சூரியனை வணங்குங்கள்.

திலகம்

கிருஷ்ணருக்கு அஷ்டகந்தா, சந்தனத் திலகம் அல்லது குங்குமத் திலகத்தை இடவும்.

துளசி இலை அர்ச்சனை:

பூஜைக்கு எது இருக்கிறதோ இல்லையோ, துளசி இலையை வைத்திருப்பது அவசியம்.

நம்முடைய வழிபாட்டின் போதும், மந்திரங்களை உச்சரித்து, துளசியால் அர்ச்சனை செய்வது நல்லது

பலகாரம்: கிருஷ்ணருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் : How To Do Krishna Jayanthi Recipes

கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், துளசி, சீடை, முருக்கு அல்லது உங்களால் செய்ய முடிந்த இனிப்பு வகைகளும், நாவல் பழங்கள், விளாம்பழம் உள்ளிட்டவற்றைவைத்து பூஜையை தொடங்கலாம். பூஜை தொடங்குவதற்கு முன், கிருஷ்ணருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் வைத்து வணங்கவும். உங்களால் எந்த பலகாரமும் செய்ய முடியாவிட்டாலும் குறைந்தது சிறிது வெண்ணெய்யும், அவல் வைத்தல் நல்லது.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரதம், வழிபாடு செய்யும் போது கிருஷ்ணரின் விக்ரகத்தை, குழந்தை வரம் வேண்டும் பெண், தன்னுடைய மடியில் வைத்து தாலாட்டு பாடலாம். அவருக்கு வெண்ணெய், பலகாரம் கொடுப்பது போல செய்யலாம்.

பூஜை முடிந்த பின்னர் கிருஷ்ணருக்கு முன் வைத்திருந்த கலசத்தை வலது புறமாக நகற்றி வைத்து, கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்திய பலகாரங்களை, பூஜைக்கு வந்திருப்பவர்களுக்கும், அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பின்னர் நீங்களும் எடுத்து சுவைக்கலாம்.

கிருஷ்ண பூஜை முடிந்த பின்னர் சந்திரனை பார்த்து வழிபாடு செய்யவும். ஏனெனில் வசுதேவருக்கு பின் கிருஷ்ணரை வழிபாடு செய்தது சந்திர பகவான் மட்டும் தான்.

கிருஷ்ண ஜெயந்தி தானம் 

கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் ஏழை, சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, உடை, கல்விக்காக உங்களால் இயன்ற அளவு உதவி செய்யுங்கள். அப்படி செய்தால் நம் வாழ்வில் உள்ள எல்லா மனக்குறைகளையும் நீக்கி, மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றுவார்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... க

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...