நமச்சிவாய வாழ்க
தண்டியடிகள் நாயன்மார் வரலாறு
***************************************
சோழநாட்டில் தலைசிறந்த நகரம் திருவாரூர், ஆரூரில் பிறந்தவர்கள் யாவருமு சிவகணங்களாகவர்.
திருவாரூரில் பிறந்தால் முத்தி காசியில் இறந்தால் முத்தி என்பவர். திருவிடங்கத் தலங்கள் ஏழினுள் முதன்மையாக தலம், திருமகள் பூசித்து பேறு பெற்றதலம் திருவாரூர்.
பல்பிறவிப் புண்ணியத்தால் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் அவதரித்தார். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர். ஆரூர் இறவைரை அக் கண்ணால் வழிபடும் அன்புடையவர் இவர். திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட புண்ணயரைப் பலகாலும் வலம் வருவார்.
திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருப்பணிகள் பல செய்யவார்.
திருக்கோயிலின் மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தை சுற்றிச் சமணர்களுடைய ஆதிக்கம் நிறைந்திருந்தன. இதனால் திருக்குளம் பழுதுபட்டது. கண்ணில்லாத தண்டிணடிகள் குளத்தினை தூர்வாரி சுத்தம்செய்ய முயன்றார், ஆனால் அவரோ கண் பார்வையற்ற நிலையில் குளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற எண்ணத்தில தன் உத்தியை கையாண்டு குளத்தின் நடுவே தறியை ( கொம்பினையும் ) நட்டார்.
குளக்கரையில் மேட்டுப்பகுதியில் ஒரு தறியையும் நட்டார். இரு கொம்புகளக்கும் இடையே கயிறு கட்டினார்.
அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தில் உள்ள மண்ணைக் கூடையில் சுமந்து கரைமேல் கொட்டினார்.
இதனைக் கண்ட சமணர்கள் " மண்ணை வெட்டும்பொழுது சிற்றுயிர்கள் மாண்டுவிடும் ஆதலால் குளத்தில மண் வெட்ட வேண்டாம் " என்று தடுத்தனர்,
தண்டியடிகள் இதனைப் பொருட்படுத்தாமல் திருப்பணியை செய்தார்." கண்ணில்லா உமக்கு காதும் இல்லையா? " என்று எல்லி நகையாடினர் சமணர்கள், " சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? " என்று தண்டியடிகள் கேட்டார். சமணர்கள்
" நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்," என்றனர். அத்துடன் நில்லாது, தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள்
நாயனார் மனம் வெதும்பினார்.
ஆரூர் பெருமானின் முன்னின்று, " அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்." என்று கண்ணீர் சொரிந்து தொழுதார்.
ஆழமான வழிபாடு ஆண்டவரை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கண்ணுதற் கடவுள் அன்றிரவு தண்டியடிகள் கனவிலே தோன்றி, " அன்பனே கவலை விடுக ! நாளை உமது கண்கள் ஒளிபெறும் உமது திருப்பணியைத் தடுத்தவர்கள் கண்களை இழப்பர்," என்றுஅருளிச் செய்தார். அன்றிரவே சோழ மன்னன் கனவிலும் தோன்றி " தண்டியடிகள் நானாரின் குறையை தீர்ப்பாயக " என்று பணித்து மறைந்தருளினார்.
பொழுது விடிந்த உடன் அரசன் தண்டியடிகளிடம் வந்து தான் கண்ட கனவு நிலையைக் கூறி வணங்கினார், தண்டியடிகள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினார்,
மறுநாள் தண்டியடிகளும் மன்னனும் குளக்கைரையை அடந்தார்கள், " சிவபெருமானே பரம்பொருள் அவரது அடிமையாக இருப்பது உண்மையானால் உலகர் முன் என் கண்கள் ஒளிபெறட்டும் " என்று கூறி திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருக்குளத்தில மூழ்கினார் தண்டியடிகள்.
கண் பெற்று எழுந்தார், தேவர்கள் பூமழை பொழிந்தனர். சமணர்கள் கண்களை இழந்தனார். முன்பு ஒப்புக்கொண்டவாறு சமணர்கள் திருவாரூரை விட்டு நீங்கினார்கள். தண்டியடிகள் வழக்கம் போல முக்கட் பெருமானுக்குத் தொண்டுகள் செய்து சிவபதம் நண்ணினார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment