Thursday, October 24, 2024

இல்லத்தின் வாஸ்து பிரட்சனைகளையும் தீர்க்கும் அதிசய கோவில்..

போன ஜென்மத்து பாவம் மற்றும் இல்லத்தின் வாஸ்து பிரட்சனைகளையும் தீர்க்கும் அதிசய கோவில்
திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்



முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கிவருங்காலத்தை செம்மைபடுத்த   செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர்அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வதுமிகவும்விசேஷமானதாக கருதப்படுகிறது. திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

ஒரு சமயம், அவ்வாறு பங்குனி விழாவின்போது தனது மனைவி பரவையார் செலவுக்குப் பொன் பெற விரும்பி, சுந்தரர் திருப்புகலூர் வந்தார். 

திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். 

பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார்.

தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகியவெண்பட்டை விரித்துப் படுத்தார். 

துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது,தான்தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக்கண்டுவியப்ப
டைந்து திருப்பதிகம் பாடி வணங்கினார்.

இத்தகைய அற்புதம் நிகழ்ந்ததால், புதியதாக வீடு கட்டுபவர்கள் குடும்பத்துடன் இத்தலம் வந்து இறைவன், இறைவியை வழிபட்டு கோவிலுக்கு உரிய காணிக்கையை செலுத்த வேண்டும். கோவில் சார்பாக பூஜையில் வைத்து மூன்று செங்கல்களை பிரசாதமாகக் கொடுப்பார்கள். 

இந்த செங்கல்களை எடுத்துவந்து ஒரு நல்ல நாளில் முதல் கல்லாக வைத்து கட்டட வேலையைத் தொடங்கினால், எந்தவிதத் தடையும் இன்றி வேலை விரைவில் நல்லபடியாக முடியும்

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்

அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

தல நம்பிக்கைகள்

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவைஅணிந்துவந்ததாக
வும், அந்த பெண்ணையும் குழந்தையையும்மருத்து
வச்சிபோலகாப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

பிறவிப் பலன்

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...