Sunday, October 6, 2024

மதுரை வீரன் காவல் தெய்வங்களின் முக்கியமானவர்.....

_மதுரை வீரன் சுவாமி  வழிபாடு:_

மதுரை வீரன் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நதி காணப்படுகிறது. மதுரைவீரன் தனித்தும், அல்லது அவருடைய இரு மனைவியருடனும் வணங்கப்படுகிறார்.
மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய திருவாளுடனும் முறுக்கிய மீசையடனும் காட்சியளிக்கின்றார். வலது புறப்புறத்தில் வைரவரும் இடது புறத்தில் பரியும் காணலாம்.
வழிப்பாடு
மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், பாலி, இலங்கை, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிப்பாடு என்ற கூற்றை இல்லை என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். உண்மையில் சிவன், ஏசு, புத்தன், முருகன், ராமன், க்ருஷ்ணனை போல் மக்களை காக்க நீதி, சத்தியம் மற்றும் தர்மம் ஆகியவற்றை மண்ணில் நிலை நாட்ட அவதரித்த ஒரு தெய்வ பிறவிதான் மதுரைவீரன் என்று கருதுகின்றனர். மதுரை வீரன் வழிப்பாடு என்பது முறையான சைவ வழிப்பாடாகும். அவர் ஒரு காவலர் என்ற ஒரு காரணத்தினால் ஆதியில் பாமரமக்கள் அவரையும் காவல் தெய்வங்களில் ஒன்றாக இணைத்து பூஜைமுறைகளையும் அப்படியே நிறைவேற்றினர். இவர் தன் வாழ்நாளில் சாதி எதிர்ப்பையும் தன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டு போராடி இருந்ததால், அவர் மறைந்த பின் சாதி வெறியர்கள் அன்னை மதுரை மீனாட்சியின் ஆணையையும் மீறி ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தினுல் வீரனுக்கு சிலை வைப்பதை தவிர்த்து மாறாக அவர் தாழ்ந்த இனத்தவர் தெய்வம் என்றும் ஒதுக்கி விட்டனர். ஒன்றும் அறியாத பாமரமக்கள் அவர் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததை கருத்தில் கொண்டு அவரையும் மற்ற காவல் தெய்வங்களோடு ஒருவராக்கி விட்டனர் எனவேதான் அவர் காவல் தெய்வமானார். உண்மையில் அவருக்கும் காவல் தெய்வங்களான முனிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கருமுனி, செம்முனி, வால்முனி, ஜடாமுனி, கும்பமுனி, கங்கை முனி, நாதமுனி, மச்சமுனி, சிவமுனி, தவமுனி என இன்னும் பல முனிகள் இருப்பினும் மதுரைவீரன் என்று பெயர்வகையில் மாறுப்பட்டு நிற்பதிலேயே கண்டுக்கொள்ள இயலும். இன்னும் சொல்லப்போனால் வரலாறு கொண்ட காவல் சரித்திர நாயகர்கள் என்றால் அது மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பன் மட்டும்தான். ஆனால் தொடக்க புள்ளியில் இருந்தே காவல் தெய்வங்கள் அனைவரையும் மக்கள் ஒரே கோட்டின் கீழ் நிறுத்தி சகோதரர்களாக வரிசை படுத்தி வணங்கினர். நாளடைவில் காவல் தெய்வ சக்திகள் யாவும் ஒரே சக்தியாய் வடிவம் பெற்றதை ஆன்மிகவாதிகள் ஒப்பு கொள்கின்றனர். எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது.
இல்ல வழிப்பாடு
உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு. நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம். இல்லவழிப்பாட்டிற்கோ ஆலயவழிப்பாட்டிற்கோ முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவேண்டும். பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு "என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும். சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும்.சுருங்க கூரின் நாம் நம் தாய்க்கோ தந்தைக்கோ கால் பிடித்து விட்டால் எவ்வளவு அன்பாக செய்வோம். நம் நாட்டு ஜனாதிபதிக்கு எடுபிடி வேளை செய்தால் நாம் எவ்வளவு மரியாதையுடனும் கவனத்துடனும் செய்வோம். எல்லாம் முடிந்து அவர் நமக்கு பதக்கம் குத்தி விட்ட பின்பு நாம் எவ்வளவு அடக்கமாக பணிவாக கூனி குறுகி பின் நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விடை பெறுவாம். அதே அன்பும் மரியாதையும்தான் பக்தியின்(பூஜையின்) போது நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்தல் வேண்டும். நேரே வந்த ஆண்டவனிடத்தில் நாம் எப்படி பேசுவோம், என்னென்ன கேட்ப்போம், எப்படி அடிப்பணிவோம் அதையெல்லாம் அங்கே அன்பாக செய்ய வேண்டும். பூஜையின் இடைஇடையே ஆத்மார்த்தமான பாடல்கள் பாடி பஜனை செய்தல் மிக சிறப்பாகும். இரு கரங்களையும் மேல் உயர்த்தி பக்தி பரவசத்தோடு உடலை அங்கும் இங்கும் அசைத்தவாறு அல்லது ஆடியப்படி “வீராயநம ஓம் வீராய நமஹா வீராயநம ஓம் நமசிவாய” என்று கோஷமிடலாம். இதையே ஆயலயத்தில் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் மெய் மறந்து செய்யும் பொழுது அவர்களோடு ஸ்ரீ வீரரும் சேர்ந்துக்கொள்வார். பூஜையின் துவக்கத்திலும் இறுதியிலும் உறுமிமேல வாத்தியங்கள் வாசித்து அவரை மகிழ்ச்சி படுத்தலாம். உறுமிமேல இசையால் அவரை இன்புர செய்யலாம். பஜனை செய்து பக்தி பரவசத்தால் நம் ஜீவாத்மாவை தூய்மைபடுத்தி அந்த பரமாத்மாவோடு ஒன்றிணைக்கலாம். எனவேதான் இங்கு பஜனை மிக மிக அவசியமான ஒன்றாதாகிறது.
எண்ணவழிப்பாடு
முதலில் நாம் ஸ்ரீ வீரனை நேசிக்க பழகி கொள்ள வேண்டும். நாம் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அவரோடு பேசுவது போன்று விளையாடுவது போன்று நம் எண்ணங்களால் அவரோடு உறவாட வேண்டும். அல்லது அவருடைய சரித்திரத்தை படித்து அதில் அவர் செய்யும் வீர சாகசங்களை அவருடைய பெருமைகளை நாம் நமது எண்ணத்திரையில் ஒரு திரைப்படத்தை காண்பதை போல் காணவேண்டும். உதாரணத்திற்க்கு ஒரு திருமணமானவனின் குழந்தை இரண்டு வயதை எட்டியதும், அது பேசும் கொஞ்சும் மழழையை கேட்டு அது செய்யும் சுட்டிகளை கண்டு அதனோடு விளையாடவே அவன் மனம் ஏங்கும். எப்பொழுது மணியாகும் எப்பொழுது வீட்டிற்க்கு போகலாம் என மனம் துடிக்கும். சதா அக்குழந்தை நினைவாகவே மனம் லயித்திருக்கும். எண்ணி எண்ணி ஆனந்தத்தில் திளைத்திருக்கும். இந்த உறவும் தொடர்பும்தான் நாம் ஸ்ரீ வீரனிடத்தில் கொண்டிருக்க வேண்டும். உணவுக்கு முன் “அய்யனே, அப்பா வீராண்டவரே எமக்கு இவ்வேளை உணவருளியமைக்கு மிக்க நன்றி என் தேவனே. வீரவா, தாங்கள் தயவு செய்து இதுப்போலவே என்தன் வாழ்வின் இறுதி நொடிவரையிலும் குறைவல்லாது உணவருளவேண்டும் எம்பெருமானே ,ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா" என்றும், உறங்குவதற்க்கு முன் “ஐயனே, அப்பா பரமாத்ம தேவனே பரலோக நாயகனே பாராலும் மன்னவனே, ஸ்ரீமஹா மதுரை வீராண்டவனே, அப்பா தாங்கள் எமக்கு இந்நிம்மதியான உறக்கம், இந்நிம்மதியான தருணம், இந்நிம்மதியான சூழ்நிலையினை அருளியமைக்கு மிக்க நன்றி என் அய்யனே ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்றும், துயில் களைந்ததும் “அய்யனே என் தேவ பெருமானே, இந்த பொழுது எமக்கு இன்பமான நலமான அதிர்ஷ்ட்டமான வெற்றியான பொழுதாக அமைய எல்லாம் வல்ல வீரவரே தாங்கள் தயவு செய்து எமக்கு அருள் புரியவேண்டுமப்பா, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமோ நமஹா” என்றும் பிரார்த்திக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக உணவருந்துவதற்க்கு முன். இது இரண்டு மணி நேரம் பூஜை செய்வதற்க்கு ஒப்பாகும். எண்ணத்தால் உரையாடுவதும் உறவாடுவதுமே எண்ணவழிப்பாடாகும். எண்ணங்களின் பிறப்பிடமே மனம். மனம் ஒரு கோவில் எனப்படும். ஒரு கோவிலை தங்கத்தால் கட்டினாலும் அக்கோவில் சுத்தமில்லை எனில் அங்கே தெய்வங்கள் குடியிருக்காது. ஆக, இங்கே செய்ய வேண்டிய முதற்க்காரியம் நம் மனத்தை தூய்மை படுத்துவதே.
எப்படி தூய்மை படுத்துவது?
ஸ்ரீஇராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு முறை தன் சீடர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் வணிகர் ஒருவர் மிக செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். அதை கட்டிப்போட்டு துன்புறுத்த கூடாதென அதை தன் வீட்டிற்க்குள் சுதந்திரமாக விட்டிருந்தார். இவர் இரவு வீடு திரும்பும் போதெல்லாம் அந்த நாய் இவர் மீது பாய்ந்து பாய்ந்து விளையாடும். மிகவும் களைப்பில் இருக்கும் அவருக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவர் வீடு திரும்பும் போது அது பாய்ந்து விளையாடுவதால் அதனை உதறி உதறி தள்ளினார். பின்பு ஒருநாள் அது தன் எஜமானரை பார்த்தப்படி தொலைவிலேயே அமர்ந்திருந்தது. இப்படிதான் நம் மனத்தை தூய்மை படுத்த வேண்டும். இந்த எண்ணவழிப்பாடு சற்று கடினமான ஒன்று. ஆனால் அதுதான் நம்மை ஸ்ரீவீரரோடு பேசவும், விளையாடவும், கட்டிதழுவி அன்பை பறிமாறிக்கொள்ளவும் செய்யும். நாளை நிகழபோவதை இன்றே அறிவித்துவிடும். முதல் அறிமுகத்தின் போதே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை திரை போட்டு காட்டிவிடும். நம் மீது கொண்ட பொறாமையினால் நம் பின்னால் யாரேனும் சூழ்ச்சியோ சூனியமோ எது செய்தாலும் அது நம்மை துளியும் அணுக முடியாது. மாறாக, கயவர் யார் என்பதை நமக்கு காட்டி கொடுத்து அவரின் தோல்வியையோ அழிவையோ மிக விரைவிலேயே நம் விழிகளுக்கு முன்நிலையில் கொண்டு வரும். நாம் ஒன்றை நோக்கி அடி எடுத்து வைத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவோம். மனத்தை தூய்மை படுத்துவது கடினமான ஒன்று என்றாலும் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறுவதுப்போல் நாம் முழுமூச்சுடன் செயல்ப்பட்டால் நிச்சயம் நம்மால் இயலும். மனத்தை தூய்மை படுத்துவது என்றால் என்ன? நாம் யாரையும் தாழ்த்தவோ புறம்பேசவோ கூடாது. மற்றவர் நம் மனதை காய படுத்தியபோதும் நாம் அவர் மனம் நோகாது பேச வேண்டும். மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், ஸ்ரீ வீரரின் பெயரில் தானங்கள், கோவில்களில் தொண்டுகள், இயலாதவர்களுக்கு உதவிகள் செய்தல், மற்றும் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின் இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில் காட்டுதல், இமயத்தின் உச்சத்தில் கோபம் இருப்பினும் கர்வம், கௌரவம் எதையும் பார்க்காமல் மன்னித்தல், தாய் தந்தையரை கண் போல் காத்து முதியோர்களுக்கு பணிந்து போதல், காமம் கண் மறைக்கும் நொடியில் அறிவுக்கு வேலை கொடுத்து மனத்தை அடக்குதல், செல்லும் வழியில் கர்பிணியையோ, விபத்தையோ, நாய் பூனை காகம் எலி முதலிய பிராணிகள் இறந்து கிடப்பதையோ, சவ ஊர்வலத்தையோ கண்டால் உடனே சில நொடிகள் உறுக்கமாக பிரார்தனை செய்ய வேண்டும். அசுர கோபத்திலும் மன்னிக்கும் குணம் வேண்டும் , கொச்சை மொழி பேசுவதை தவிர்க்கவும், நம் பார்வயை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். வருடத்தில் குறைந்தது ஒருமுறையாவது உடல்குறைப்பாடுகள் உள்ளவர்களின் இல்லதிற்க்கு/அநாதை இல்லங்ளுக்கு சென்று பணமோ,சமையலுக்குண்டான பொருட்களோ அல்லது சமைத்த உணவோ வழங்குதல் மிக மிக நன்மை பயக்கும். ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெற்றதும் ஆயிரம் வெள்ளி சம்பளம் என்றால் அதில் குறைந்தது பத்து வெள்ளியாவது கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும். காமம், கேடு, சூது, வஞ்சம் போன்ற எண்ணங்களை வேரோடு அறுக்க வேண்டும். வேளைக்கு செல்லும் பொழுதும் சரி வரும் பொழுதும் சரி ஸ்ரீவீரரின் நாமத்தை “ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய நமோ நமஹா” என்று எண்ணுதல் சிறப்பு.
மதுரை வீரன் கதை
16 நூற்றாண்டில்,துளசிங்க மகராஜன் என்ற ஒரு அரசருக்கும் கற்ப்பகவள்ளி என்ற அரசிக்கும் மகனாக பிறக்கின்றார் . ஆனால் குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறக்கவே மன்னர் மந்திரிகளின் ஆலோசனைகளை நாட, குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான் என்றால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அந்த குழந்தையை கொள்ள மனமில்லாமல் வெகுதூரம் இருக்கும் ஒருக்காட்டில் சென்று விட்டு விடும்படி கட்டளை இடுகிறார். குழந்தையை சுற்றி சிங்கம், புலி, கரடி, யானை அனைத்தும் மண்டியிட்டு வணங்க நாகம் தலைக்கு மேல் குடைவிறித்திருந்தது. அந்த நேரம் சின்னான் செல்லி என்ற தம்பதியினர் அவ்வழியே செல்ல அக்காட்சியை கண்டு பிரமிப்படைந்தனர். சிறிது நேரத்தில் அந்த விலங்குகள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள் அந்த குழந்தையை எடுத்து வீரன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். மதுரை வீரன் என்பவர் உண்மையாக வாழ்ந்த ஒரு மண்ணின் மைந்தர். இவர் அரசபரம்பரையை சேர்ந்தவராவார். ஒரு சிறந்த பெரிய போர் வீரனான அவர் எப்போதும் தன் மக்களை போராடி பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில்.மதுரை நாயக்கரால் ஆழப்பட்டு வந்த மதுரை நகரம் மற்றும் மக்களை, ஒரு வெல்ல முடியாத போரினில் மூலம் சங்கிலி கருப்பர் அச்சிறுத்தி வந்தார். இறுதியாக, மதுரை வீரன் அந்த போரில் கலந்து சங்கிலி கருப்பரை தோற்கடித்து மதுரையை மீத்தார்.
சங்கிலி கருப்பரை தோற்கடித்தப்பின், மதுரை வீரன் திருமலை நாயக்கரின் கீழ் தளபதிகளில் ஒருவராக மதுரை வீரன் பொறுப்பெடுத்தார். திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் அருந்ததியினர் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை ஏற்ற வீரன் பொம்மிக்கு காவல் செல்கிறார். வீரனின் உயரமான நிமிர்ந்த தோற்றத்தையும், விரிந்த மார்பையும், பெரிய கட்டான தோள்களையும், முரட்டு கைகளையும், உருதியான கால்களையும், துடுக்கான பேச்சும், கழுகின் பார்வையும், முரட்டு மீசையும், கலையான சிரிப்பையும் கண்ட பொம்மிக்கு யார் இந்த வீரன்? என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் உண்டாயிற்று. இன்னும் சொல்லப்போனால் புதிதாய் பூத்த செந்தாழம்பூவான பொம்மியை பெரிதாய் கவர்ந்ததே வீரனின் நடைதான். அரசனிடம் நன்மதிப்பு பெற்ற காவலர்களில் ஒருவரான சின்னான் என்பவரின் மகன்தான் இந்த வீரன் என்பதை பொம்மியின் தோழி ஒருத்தி சொல்லக்கேட்டு பொம்மி ஐயம் தெளிந்தாள். பொம்மி ஜன்னலின் ஓரம் நின்று மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தாள். பின் இருவரும் சரளமாக உரையாட ஆரம்பித்தனர். வீரன் காவலுக்கு வராத நாட்களில் பொம்மி வீரனின் வரவை எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைவாள். சின்னான் காவலுக்கு வர இயலாத நாட்களில்தான் வீரன் காவலுக்கு வருவார். அது ஒரு மழைக்காலம் என்பதால் சின்னானுக்கு குளிர்காய்ச்சல் ஏற்ப்பட்டது. ஆகவே சிலநாள் காவலுக்கு வீரன்தான் சென்றார். ஒருநாள் காவலின் போது பெருமழை தூரவே காவலில் இருந்து விலக முடியாமல் வீரன் அங்கேயே நின்றார். பொம்மி தன் குடிலுக்குல் வரச்சொல்லி உத்தரவிட்டும் வீரர் காவலிலிருந்து பின்வாங்கவில்லை. “யாரும் இளவரசியார் குடிலுக்குள் செல்லாதப்படி காவலிருப்பதே எனக்குண்டான அரசக்கட்டளை. நானே அதை மீறலாகுமா?" என்றார். அத்தோடல்லாமல் தன் தந்தையின் மேல் மன்னர் வைத்திருக்கும் நன்மதிப்பும் தந்தை தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பாழாகும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். எனவே காவல் நேரம் முடியும் வரை அவர் அங்கிருந்து ஓரடிக்கூட அகல வில்லை. இரவு முழுதும் மழையில் நனைந்ததால் மறுநாள் வீரன் காவலுக்கு செல்ல இயலவில்லை. தொடர்ந்து ஒருசில நாட்கள் வீரன் வராததைக் கண்டு வீரனைக் காண ஆவல் கொண்ட இளவரசி நேரே வீரனின் குடிசைக்கு சென்றாள். மாறுவேடத்தில் மறுத்துவச்சியாக. பொம்மியின் வருகையினால் சினனானும் செல்லியும் அச்சமுற்றனர். இளவரசியாரின் தேற்றலால் அவர்கள் சாந்தமாகினர். பொம்மியின் அளவற்ற காதலால் வீரனின் மனமும் தளர்ந்தது. இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் .இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அந்த சமையத்தில் மதுரை வீரர் ராஜாவின் அரண்மனையில் பணிபுரியும் ஒரு பணிப்பெண்ணை காதலித்து வந்தார். இவரின் வீரத்தைக் கண்ட தொட்டிய நாயக்க இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் அருந்ததியர் இனம் என்று எண்ணி, உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக சக்கிலியர் சமூகமும் திருமலை நாயக்கரும் மதுரை வீரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எண்ணினர். மதுரை வீரரை போன்ற ஒரு பெரிய வீரரை மோதுவது இயலாத காரியம் என்று இருந்த போதும், மதுரை வீரரை உடல் அங்கங்கள் தனி தனியாக வெட்டி எறிய உத்தரவித்தார். ராஜாவின் உத்தரவை மீற முடியாதலால், அந்த தண்டனை மதுரை வீரருக்கு வழங்கப்பட்டது.
மதுரை வீரரின் மரணத்துக்கு பிறகு, திருமலை நாயக்கர் காணவில்லை. சில நாட்களுக்கு பிறகு, அவரின் உடல் ஒரு கிணற்றில் காணப்பட்டது. அதிலே அவரின் சகாப்தமும் முடிந்தது.
பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் . ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் அதற்கு தகுந்த வரலாற்று சான்றுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. மதுரை வீரன் காட்டில் ஆதரவற்ற குழந்தையாக தான் கண்டெடுக்க பட்டார் என்பது வரலாற்று பதிவுகளின் அடிப்படையிலும், மதுரை வீரன் கதைப்பாடல்களின் அடிப்படையிலும் மற்றும் அருந்ததியர் இனத்து மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்கப்பட்டு, கூறப்படும் செவிவழி செய்தியின் அடிப்படையிலும் உண்மையாக கருதப்படுகிறது.
பிரசன்னம் சொல்ல : மதுரை வீரன் சக்கர பூஜை
நடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என பிரசன்னம் கேட்போர் விடைக்கும் வண்ணம் பிரசன்னம் கூரிட , மதுரை வீரன் இறங்கி அருள்வாக்கு சொல்லிட , உங்களை கண்ட மாத்திரத்தில் துஷ்ட சக்திகள் விலகிட மதுரை வீரன் உபாசகன சக்ர பூஜை .
ஆன்மீக தேடல் உள்ளவர்களும் , உண்மை தீட்சை பெற்றஉபாசகர்கள் மட்டுமே பலன் அடைய முடியும் . குருமார்களை சோதிப்பது , மந்திரங்களையும் , பூஜா விதிகளையும் உரிய குரு ஆசீர்வாதத்தின் மூலமே பயிற்சி கொள்ளவேண்டும் . இல்லை எனில் சித்திபெற முடியாது . எதிர்மறையான பலனை அடைய வேண்டிவரும் .
செவ்வாய் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை குளித்து தலை முழுகி வேட்டி அணித்து விபூதி , குங்குமம் வைத்துக்கொண்டு , கிழ்கண்ட சக்கரத்தை ஒரு தாமிர தகட்டில் வரைந்து , ஒரு ஆசன பலகையில் கிழக்கு முகமாக வைத்து .
அதற்க்கு விபூதி சந்தானம் குங்குமம் சார்த்தி நல்ல வாசனை பூக்கலால் அலங்காரம் செய்து , அதன் எதிராக வாழையிலை வைத்தது வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் அவுல் கடலை , புனாதி லேகியம் , சுருட்டு , புழுங்கல அரிசி சாதம் , மாமிசம் , கருவாடு , முட்டை , முருங்கைக்காய் , கீரை , புண்ணாக்கு இவைகளை படையல் செய்து , கள்ளு , மது , பானகம் ஆகியவைகளுடன் வத்தி , சாம்பிராணி , கற்பூரம் தூபம் காட்டி , படையலை வைக்க வேண்டும் .
மூல மந்திரம் , மால மந்திரம் இவைகளை 1008 உரு , முப்பது நாளுக்கு ஜெபிக்கு சக்கரம் சித்தியாகும் . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...