Thursday, October 24, 2024

இறைவனுக்கு சூட்டும் மலர்களின் பலன்கள்..

இறைவனுக்கு சூட்டும்  மலர்களின் பலன்கள்

*1. ஆணவத்தை அழிக்கும் செவ்வந்தி பூ:*

செவ்வந்திபூ, மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும் மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகுக்கு அழைத்து செல்கிறது. 

கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும். ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை. 

செவ்வந்தியின் தனித் தன்மை யாதெனில் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே மற்ற மலர்களை மறு உருவாக்கம் செய்ய முடியும். இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது. செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற்போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

மேலும் செவ்வந்திபூ இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் மணம் வீசும். தான் வருந்தி வாடினாலும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது. 

இது இயற்கையாகவே மட்கும் பொருள் என்பதால் சுற்று சூழல் பாதிப்பு கிடையாது. காற்று மாசுபடுதலை குறைக்கிறது என்பதை நாசா ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து இருக்கிறார்கள்.

*2. கடன்களை தீர்க்கும் அரளிப்பூ:*

சிவந்த அரளிப்பூ எங்கும் எத்தகைய நிலையிலும் வளர கூடிய ஓரடுக்கு மலராகும். பெரும்பாலான பக்தர்கள் விரும்பி வாங்குவது செவ்வரளிதான். மகாவாராஹிக்கு உரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது

இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக காற்றில் உள்ள கார்பனின் அளவைக் குறைக்க கூடிய ஆற்றல் உண்டு. அதனால் தான் தேசிய நெடுஞ்சாலை களிலும், நாற்சாலைகளிலும் அதிகமாக இந்த மலர் செடி வளர்க்கப்படுகிறது. 

அம்மனை வழிபடும் போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால் குடும்ப சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்பித்து விட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும். வேதனை மிகுதியால் சஞ்சலப் படுபவர்கள் வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

இத்தகைய பெருமை மிகுந்த அரளிப்பூ அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

*3. கோடி புண்ணியம் தறும் மகிழம் பூ*

மகிழம் பூ மரத்திற்கும், ஆன்மீகத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. மகிழம் என்பது 'வகுளம்'என்ற தமிழ் சொல்லை மருவி வந்தது. 

பச்சை வான்வெளி போன்ற மரத்தில் லேசான வெண்ணிறத்தில் சின்னஞ்சிறு நட்சத்திரங்களாக பூத்திருக்கும் இப்பூக்கள் கண்ணுக்கும், நாசிக்கும் ஒரு சேர இன்பமளிக்கின்றன. சங்கஇலக்கியத்தின் குறிஞ்சி பாட்டு (பாடல்_70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24), ஆகிய மூன்றில் 'வகுளம்' என குறிப்பிடப் பட்டுள்ளது. மகிழம்பூ 15 முதல் 20 நாட்கள் வரை மணம் குறையாமல் இருக்கும் தன்மை உடையது.

பெண்கள் விரும்பி சூடும் மகிழம்பூ காயக்காய மணம் கூடுமே தவிர குறையாது. அம்பிகைக்கு ஆரமாகச் சூட்டினால் கோடி புண்ணியம் கிடைக்குமாம். அம்பாளுக்கு பாவாடையாக சாத்தினால் கோயிலின் நாற்புறமும் நறுமணம் வீசும். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது ஒரு புனித மரம். 

திருவொற்றியூர் கோயிலின் உள்ளே நுழைந்தால் முதல் தரிசனம் மகிழ மரமே ஆகும். மனதை மயக்கும் மகிழம்பூ ஆன்மீகத்தோடு  தொடர்புடையது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. எனவே மகிழம் மலர்களை மனதில் நிரப்பிக் கொண்டு எண்ணங்களை தூய்மை ஆக்குவோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...