Tuesday, October 22, 2024

சாஸ்தா யார்? அய்யனார் கோயில் அமைப்பு எப்படி❓



சாஸ்தா என்ற சொல்லுக்கு உலகங்களை ஆள்பவர் என்றும் ஆணைசெய்பவர் என்றும், மக்கள் மனங்களில் ஊடுருவியவர் என்றும் பொருள்கள் கூறப்படுகின்றன.

"சாஸ்தா ச சர்வத்ர லோகே" என்பது சாஸ்திர வசனம் "எல்லா உலகிற்கும் கட்டளை இடுபவர்" என்பது இதன் பொருள்.

ஐயனார் பதினாறு பேதங்களை உடையவர் என்று தியானரத்னாவளி என்ற நூல் கூறுகிறது. ஐயனாரின் பதினாறு பேதங்கள் : 
1. மதகஜசாஸ்தா, 
2. மோகினிசாஸ்தா. 
3. அமிருத சாஸ்தா, 
4. கிராமசாஸ்தா, 5.உக்ரசாஸ்தா, 
6.வீரசாஸ்தா, 
7. லக்ஷ்மீசாஸ்தா, 
8. பாலசாஸ்தா, 
9 மதனசாஸ்தா, 
10. பீஷண சாஸ்தா,
11. ருத்ரசாஸ்தா, 
12. வரதசாஸ்தா, 
18. அசுவசாஸ்தா, 
14. சௌந்தரசாஸ்தா, 
15. புவனசாஸ்தா, 
18. மகாசாஸ்தா ஆகியனவாம்.

மலைகளில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவைப் பதினாறு கைகள் உடையவராகவும், காட்டில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவைப் பத்துக் கைகள் உடையவராகவும், நகரங்களில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை எட்டுக்கைகள் உடையவராகவும், கிராமங்களில் பிரதிஷ்டிக்கப்படும் சாஸ்தாவை இரண்டு கைகள் உடையவராகவும் பிரதிஷ்டை செய்விக்க வேண்டுமென்று ஸ்ரீமத் சிவாகமம் கூறுகிறது.

சாஸ்தாவின் மனைவியர் சௌகந்திகன் என்ற அரசனுடைய புதல்வி பூரணாதேவியும், அம்பாராஜனுடைய புதல்வி புஷ்களாதேவியுமாகிய இருவராவர்.

சாஸ்தாவின் பரிவாரங்கள் மகாகாளன்,கோப்தா, பிங்களாக்ஷன், வீரசேனன், சாம்பவன், திரிநேத்திரன், சூலிதக்ஷன், பீமரூபன் முதலியோராவர்.

சாஸ்தாவின் வாகனம்: குதிரை, யானை ஐயனார்கோயில் வாயிலில் இவ்விரு வாகனங்களும் விளங்குவதைக் காணலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.... 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...