Tuesday, October 22, 2024

பொன், பொருள் சேர குபேர வழிபாடு...



பொன், பொருள் சேர குபேர வழிபாட்டின் பொழுது தவறாமல் படைக்க வேண்டிய 1 நைவேத்திய பொருள்! குபேரருக்கு பிடித்த இந்த பொருளுக்கு இவ்வளவு சக்தி உண்டா?

தூய்மையான பக்தியுடன் இறைவனுக்கு படைக்கும் ஒவ்வொரு நைவேத்தியங்களும் மகத்துவமான பலன்களை கொடுக்க வல்லது. கிருஷ்ணனுக்கு வெண்ணெய் போல, ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான இஷ்ட பிரசாதங்கள் உண்டு. அது போல குபேரனுக்கு இந்த பிரசாதத்தை படைத்து வழிபடுபவர்களுக்கு பொன்னும், பொருளும் கட்டுக்கடங்காமல் சேரும். அது என்ன பொருள்? எப்படி படைக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாகவே பொன்னும், பொருளும் குவிவதற்கு, செல்வம் சேர்வதற்கு குபேர வழிபாட்டை தவறாது மேற்கொண்டு வருவார்கள். குபேர வழிபாடு மட்டுமல்லாமல், மகாலட்சுமி வழிபாடும் பொன், பொருள் சேர வழிவகுக்கும். குபேரர் ஒரு நாணய பிரியர் ஆவார். நாணயங்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது இவருடைய வழிபாடுகளில் முக்கியமானது ஆகும்.

கிருஷ்ணனுக்கு தவறாது வெண்ணெய் படைத்து வழிபடுபவர்களுக்கு, கிருஷ்ண பரமாத்மா பரிபூரணமாக அருள் புரிவதாக ஐதீகம் உண்டு. மகாலட்சுமிக்கு வெண்தாமரை மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து தவறாது வழிபட்டு வருபவர்களுக்கு 16 செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. அது போல இந்த ஒரு நைவேத்திய பொருள் குபேரருக்கு ரொம்பவும் இஷ்டமானதாக விளங்குகின்றது.

பசுவை கோமாதாவாக நினைத்து வழிபட்டு வருகின்றோம். பசுவிலிருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் தெய்வாம்சம் பொருந்தியதாக காணப்படுகிறது. அத்தகைய பொருட்களில் ரொம்பவும் விசேஷமான ஒரு பொருள் ‘தயிர்’. தயிரை நைவேத்தியமாக படைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும், அவை சுக்கு நூறாக உடைந்து தயிர் போன்ற ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்.

குபேரருக்கு உகந்த பொருட்களுள் ஒன்று தயிர்! தயிரை படைத்து குபேர வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னும், பொருளும் சேர்ந்து கொண்டே செல்லும். ‘தயிர்’ குபேரனுக்கு மட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கும் இஷ்டமான ஒரு பொருளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி குபேரருக்கு ஒரு கப் தயிரை மண் சட்டியில் நைவேத்தியம் படைத்து மனதார குடும்பம் உயர்நிலைக்கு செல்ல வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தால் நிச்சயம் நினைத்தது நடக்கும்.

தயிரை படைத்து சந்திர பாகவானை வழிபடுவதும், மன சாந்திக்கு நன்மைகள் செய்யக்கூடிய ஒரு பலன்களை கொடுக்கும். மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுபவர்களும், குடும்பத்தில் குழப்பங்கள் தீராது உள்ளவர்களும் பௌர்ணமி தோறும் சந்திர பகவானை வேண்டி தயிரை நைவேத்தியம் படைத்து மனதார வழிபட வேண்டும். சந்திரனுக்கு வெள்ளி கிண்ணத்தில் தயிர் படைத்து வழிபட்டால் இன்னும் சிறப்பு.

பௌர்ணமி தோறும் தயிர் தானம் செய்து வருபவர்களுக்கும் பணக்கஷ்டம் தீர்வதாக நம்பிக்கை உண்டு. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தயிர் பாக்கெட்டை தானமாக வழங்கி வந்தால் பொன்னும், பொருளும் மட்டுமல்லாமல் சகல சம்பத்துக்களும் கிட்டும். பசுக்களுக்கு தயிருடன் சர்க்கரை சேர்த்து தானம் செய்பவர்களுக்கு துன்பமில்லாத வாழ்வு அமையும். வியாழன் கிழமை தோறும் குபேரருக்கு ஒரு கப் தயிர் வைத்து பொன்னும், பொருளும் சேர வேண்டி வழிபட்டு வாருங்கள். தொடர்ந்து ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் இது போல வழிபட வேண்டும். எட்டு வாரங்கள் வழிபட, கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். இத்தகைய தயிரை தினமும் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமும் வலுப்பெறும், தீர்க்காயிலும் உண்டாகும்.....

No comments:

Post a Comment

Followers

சிவ தலங்களில் நந்தியம் சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.

 சண்டிகேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள்  சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் க...