அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோயில்,
ஆக்கூர் அஞ்சல்,
தரங்கம்பாடி தாலுக்கா,
மயிலாடுதுறை மாவட்டம்,
தமிழ்நாடு - 609301.
*மூலவர்:
தான்தோன்றியப்பர்.
*தாயார்:
வாள்நெடுங்கண்ணி.
*தல விருட்சம்:
சரக்கொன்றை
*தீர்த்தம்:
குமுத தீர்த்தம்
*சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது.
*இது கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்.
*இது காலசம்ஹார மூர்த்தி உருவான தலம்.
மூலவர் தான்தோன்றியப்பர் சுயம்புநாதராக சிரசு பிளந்த நிலையில் உள்ளார். இந்தப் பிளவு இறைவன் திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்யத்தோன்றிய போது ஏற்பட்டதாக வழங்கப்படுகிறது.
*இக்கோயிலில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. இறைவனுக்கு வலதுபுறம் இறைவி சந்நிதி உள்ளதாலும், அகத்தியருக்கு திருமணக்காட்சி அளித்த தலம் என்பதாலும் இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக விளங்குகிறது. மேலும் இது மகப்பேறு அளிக்கும் பரிகாரத்தலமாகும்.
*இது சிறப்புலி நாயனார் அவதரித்தத் தலம்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறப்புலி நாயனார் சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு அறுசுவை உணவு படைப்பது வழக்கம்.
ஒரு சமயம் 1000 அடியார்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 999 அடியார்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மனம் கலங்கி, இறைவனிடம் முறையிட்டார். அப்போது இறைவன் தானே வயதான ஒரு சிவனடியாராக வந்து சிறப்புலி நாயனாரின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தார். இறைவன் அந்த ஆயிரம் அடியார்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார்.
*இங்கு சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.
*அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இக்கோயிலின் முருகப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
*இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன.
*ஆக்கூர் என்னும் இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி வழித்தடத்தில் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment