Thursday, December 5, 2024

திருமழபாடி கோயில் திருப்பனியை மாமன்னன் ராஜேந்திர சோழன் மேற்கொண்டான்...

திருமழபாடி மகாதேவர் கோயில்.
கல்வெட்டு ஆவணம் காத்த "கங்கைகொண்ட சோழன்."

கயிலைநாதன்எழுந்தருளிய திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய நம்பியாருர ராம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரி னின்று புறப்பட்டு நன்னிலம்,திருவிழிமிடலை, திருவாஞ்சியம், நரையூர்,அரசிற்கரை
புத்தூர் ஆவடுதுறை, இடைமருது, நாகேஸ்வரம் சிவபுரம், கலயநல்லூர் குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், அய்யாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களை வழிபட்டு திருவாலயம் பொழிலை அடைந்து இறைவனை போற்றி அங்கு தங்கி இருந்தார்.

அன்றிரவுஅவர்துயிலும்போது சிவபெருமான் அவர்தம் கனவில் தோன்றி "மழ பாடிக்கு வருவதற்குமறந்தாயோ"
எனவினவிமறைந்தருளினார். துயில் எழுந்த சுந்தரர் காவிரியை கடந்து அதன் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை கண்டு தரிசித்து,

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து 
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே 
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே"

எனத் தொடங்கும் தேவாரமாம்திருப்பதிகத்தை பாடி போற்றினார்.

திருமழபாடி என்னும் திருத்தலம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையிலும் மேற்கரையிலும்திகழ்வது ஆகும். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் இவ்வாறு மழப்பாடி ஈசனார் கோயில் முன்பு வடக்காக திரும்பி உத்தரவாகினியாக பிரவாகிக்கின்றாள். ஆற்றின்கரைமுகட்டிலேயேஆலயம்அமைந்துள்ளது. திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் அரியலூரிலிருந்தும் பேருந்து தடம் வழியே திருமழபாடியை அடையலாம்.

கிழக்கு நோக்கிய ஏழு நிலைகளை உடைய ராஜகோபுரம். இரண்டு திருச்சற்றுக்கள் உடன் கோபுரம் இடபதேவர் திருவுருவங்கள் பலிபீடம் கொடிமரம் ஆகியவை திகழ மூலவர் கோயிலும், அம்மன் சன்னதியும் கலை மிகு கட்டுமான அமைப்புகளுடன் விளங்குகின்றன.

இவ்வாலயம் சோழர் கட்டிடக்கலையின் உச்ச வெளிப்பாடாககாட்சியளிக்கின்றது. மூலவர் திருமேனியை புருஷா மிருகம் பிரதிஷ்டை செய்ததாகவும்மார்க்கண்டேய மகரிஷிக்காக இறைவன் மழு ஏந்தி ஆடியதாகவும் மழபாடி தலபுராணம்உரைக்கின்றது. மழு ஏந்தி ஆடியதால் மலபாடியாயிற்றுஎன்பதும் புராணக் கூற்றாகும்.

பண்டு இப்பகுதியின் குறுநில மன்னர்களான மழவர்களின் பாடி வீடு (படை முகாம்) இங்கு திகழ்ந்ததால் மழபாடி 
என பெயர் வந்ததாகவும் குறிப்பர். தேவாரப் பாடல்களும் ஐயடிகள் காடவர்கோனின் பாடலும் வள்ளலாரின் அருட்பாவும் மழபாடி மாணிக்கத்தின் பெரும் சிறப்பானதாகும்.

இத்தலத்தின் தலமரமாக பனைமரம் முதல் திரு சுற்றிலேயே கருவறை அருகில் திகழ்கின்றது. கோஷ்டச் சிற்பங்களும் கல்லிலேயே வடிக்க பெற்ற இருவகை சோமாஸ்கந்தர்திருமேனிகளும் ,மழு ஏந்தி ஆடுகின்றபரமேஸ்வரனின்எழிலார்கோலசிற்பங்களும் ஆலயத்தை வலம் வருவோர் தவறாமல் தரிசிக்க வேண்டியவை ஆகும்.

இங்கு ஆதித்த சோழன் காலம் தொடங்கிபல்வேறு சோழ அரசர்களின் கல்வெட்டுச்சாசனங்களும், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின்கல்வெட்டுகளும், வீர ராமநாதன், சோமேஸ்வரன் போன்ற போசள அரசர்களின் கல்வெட்டுக்களும், கோனேரிராயன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்துதண்டநாயகர்களின் கல்வெட்டுகளும் இவ்வாலயம் முழுதும் காணப்பெறுகின்றன. இவை திருமழுவாடி அல்லது திருமழபாடி மகாதேவர்கோயிலுக்
கென அளிக்கப்பட்ட கொடைகள் பற்றி விவரிக்கின்றன.

சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டு பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும், ராஜேந்திரசிம்ம வளநாட்டு பொய்கை நாட்டு திருழபாடி என்றும் இவ்வூர் பெயர் குறிக்க பெறுவதோடு,இறைவனின்திருநாமங்களாக திருமழபாடி உடையார், திருமழபாடி ஆழ்வார், திருமழபாடிமகாதேவர்
என்றும்குறிக்கப்பெறுகின்றன.

இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது அவர் கண்டராதித்தம் என்ற பெயரில் மழபாடியோடு இணைந்து திகழ்கின்றது.

திருமழபாடிதிருக்கோயிலில்உள்ளகல்வெட்டுகளிலேயே தலையாய சிறப்புடையது முதலாம் ராஜேந்திர சோழனின் (கங்கையும் கடாரமும் கொண்டவன்) 
14 -ஆம் ஆண்டு 70 ஆம் நாளில்வெட்டுவிக்கப்பட்ட சாசனமே ஆகும்.

அது கூறும் செய்தியோ மிகவும்சுவைப்பயப்பதாகும். அப்பேரசனின்தந்தை முதலாம் இராஜராஜ சோழனின் காலத்தில் திருமழபாடி கோயில் சிதைந்தமையால் அதனை முழுவதுமாக புதுப்பிக்க பேரரசன் விரும்பினான். உடன் கி.பி 1013 ஆம் ஆண்டில் ஒருஆணைபிறப்பித்தான்அதன்படி திருமழபாடி கோயிலின்ஸ்ரீவிமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்க வேண்டி இருப்பதால் அந்த ஸ்ரீ விமானத்தில் உள்ள பழையகல்வெட்டுச் சாசனங்கள்முழுவதையும் படி எடுத்து புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் புதிய கற்கோயில் எடுத்த பிறகுமீண்டும்அக்கல்
வெட்டுகளை அங்கு பொறிக்க வேண்டும் என்பதேயாகும்.

இவ்வாணை ஓலையில் எழுதப்பெற்ற ஒன்றாகும். அதேபோல அதிகாரிகள் படி எடுக்கும் கல்வெட்டின் நகல்களும், ஓலைச்சுவடி கட்டுக்களாக திகழ்ந்த புத்தகத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அரசு ஆணையை பிறப்பித்த மாமன்னன் ராஜராஜன் அடுத்த ஆண்டான கி.பி 1014ல் மறைந்தான்.

திருமழவாடி கோயில் திருப்பனியை மாமன்னன் ராஜேந்திர சோழன் மேற்கொண்டான் ஸ்ரீ விமானம் புதுப்பிக்கும் பணி கி.பி 1026 இல் நிறைவு பெற்றது. உடன் கங்கைகொண்டராஜேந்
திர சோழன் முன்பு தந்தையார் காலத்தில் கல்வெட்டுபடிபுத்தகத்தில் மேற்கூறியவர்களால் பதிவு செய்யப்பெற்ற அவ்வாலயத்து பழைய கல்வெட்டுக்களின் நகல்களை தன்னுடைய தண்டநாயகன் (சேனாதிபதி)உத்தமசோழபிரம்மராயன்மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமண பாடி கோயிலின் நிர்வாக அலுவலரான குளவன் சோழன், அரங்கலமுடையான், பட்டாலகன், திருமழபாடி பிச்சன், ஸ்ரீ கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்து சபையோர்,பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் ஓலையில்குறிப்பிடப்
பெற்ற மாமன்னனின் ஆணைப்படிபல்வேறுபட்ட அலுவலர்களான 14 பேர் முன்பு படி எடுக்கப்பெற்ற பழங்கல் வெட்டுக்களின் நகல்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் மீண்டும் பொறிக்க வேண்டும் என்பதே ஆகும்.

வரலாற்றுச் சிறப்புடைய இந்த கங்கைகொண்ட ராஜேந்திர சோழனின் ஓலை ஆவணம் திருமழபாடி மூலவரின் கருவறை சுவரில் தென்புறம் 83 வரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 73 வரிகள் ராஜேந்திரனின்ஆணையை கூறுகின்றன. 74 ஆம் வரியிலிருந்து 83 ஆம் வரி வரை முன்பு அவன் தந்தை ராஜராஜ சோழன் கல்வெட்டுக்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்து மீண்டும் பொறிக்க வேண்டும் என்றுஅனுப்பியஓலை
யின் நகல் அப்படியே பொறிக்கப்பட்டுள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.

ராஜராஜ சோழன் விரும்பிய வண்ணம் திருமழபாடி கோயில் மீண்டும் கற்றளியாக புதுப்பிக்க பெற்றதோடு அதில் முன்பு திகழ்ந்த கல்வெட்டுகளை படியெடுத்து மீண்டும் அங்கு முறையாக பொறித்துள்ளதை இன்றும் நாம் அங்கு காணலாம்.தர்மங்களையும் வரலாற்றையும் கட்டி காத்த அவர்களின் பண்புக்கு எதை ஈடாக சொல்ல முடியும்.

சுந்தர பாண்டியனுடைய கல்வெட்டுச் சாசனம் ஒன்றில் தைப்பூசத் திருநாளன்று மழபாடி நாயனார்காவிரிஆற்றுக்கு எழுந்தருளியதும், அங்குஆற்றில்திருமண்டபம் இருந்தமையும் அதன் முன்பு பந்தல் இடம் பெற்று ஈசனார்க்கு வழிபாடு நிகழ்த்தவும் அளித்த கொடை பற்றி விவரிக்கின்றது. மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் எதிரிலி சோழ மூவேந்த வேளான் என்பான் கொள்ளிடம் ஆறு உடைப்பெடுத்து ஊரை அழித்தபோதுஅதிலிருந்துஊரைகாப்பாற்றிய
தோடு மீண்டும் ஊரை 
சீர் செய்தமைக்காகவும் திருமழபாடி கோயிலில் பல மண்டபங்களை எடுத்து அமைக்கவும் அவனுக்குதிருமழபாடி
யிலேயே வீடு அளித்து அரசன் கௌரவித்ததை ஒருகல்வெட்டுவிவரிக்கின்றது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மார்கழி திருவாதிரை நடராஜர் வழிபாடு பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ள சிறந்த நாள்.

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள்  மார்கழி திருவாதிரை என்பது நடராஜர் வழிபாட்டிற்குரிய நாளாகும். இந்த நாளில் சிவ...