திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே!
திருமலா துருவபேரா என்று பக்தியோடு அழைப்பது நம்ம LORD BALAJI நிற்கும் இடத்தை தான்!
அசையாமல் நிற்கும் வடிவம்!
இந்த அதிசய சிலையை வடிவமைத்த சிற்பி யார் என்பது மர்மம்!
சுயம்பு என்கிறது வரலாறு!
ஆச்சரியம் இரண்டு:-
பெருமாளின் உயரம் சுமார் 10 அடி!
1.5 அடி உயர மேடை மீது கம்பீரமாக நிற்கிறார்!
இந்த நடைமேடையில் தாமரை வடிவம் அமைந்திருக்கும்!
இதன் பொருள் என்ன என்பது "சிலர்" மட்டும் அறிந்த ரகசியம்!
ஆச்சரியம் மூன்று:-
தீர்க்கமான முகம்!
அருள் வீசும் கண்களுக்கு நடுவில் கூர்மையான நாசி!
மார்பின் அளவு : - 36" முதல் 40" !
இடுப்பு அளவு:- 24" முதல் 27"
எல்லாம் குத்து மதிப்பான அளவுதான்!
இதிலே என்ன ஆச்சரியம்!
இருக்கே!
ஆச்சரியம் 4:-
இங்கிருந்து நேரே சிலாதோரணத்துக்கு செல்வோம்!
SILA THORANAM என்பது சந்நிதியிலிருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் இயற்கையான பாறை தோரணம்!
26.2 அடி (அ) 8 மீட்டர் அகலம்!
9.8 அடி அல்லது 3 மீட்டர் உயரம்!
இங்கே உயரத்தை கவனியுங்கள் ! இதே உயரம்தான் பெருமாளின் உயரம்!
இந்த கல் தோரணத்தின் காலம் , பூமி வடிவமாக அமையப் பெற்ற PRE CAMBRIAN காலம்!
அதாவது
பூமியின் GEOLOGICAL HISTORY யும் இந்த தோரணத்தின் தோன்றலும் அருகருகே அமைந்த அதிசயம்!
ஆச்சரியம் 5:-
முதல் முதலாக திருமலையில் கால் வைத்த இடம் SREE VARIPADALU! இன்று கூட நீங்கள் போய் பார்க்க முடியும்!
அடுத்த காலடி 'சிலாதோரணம்'!
மூன்றாவதாக அவர் நின்ற இடம் . இப்போது அருள் பாலிக்கும் இடம் .
இந்த 3500 கோடி வருட தோரணத்திற்கு என்ன சிறப்பு?
ENERGY!
VIBRATION!
பெருமாள் சிலை கல் தான்!
வியர்வை வடியும் முகம்!
ஆனால் முதுகில் ஈரம் கசியும்! 110° வெப்பம்! கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில், கடும் குளிரிலும் வியர்வை!
மர்மம் 6:-
கற்பூரம் கலந்த எதை கலந்தாலும் சாதாரணமான கல் சிலைகள் விரிசல் அடையும்! பெருமாளின் சிலை சகலவிதமான CHEMICAL REACTION னையும் அசால்ட்டாக ஏற்றுக் கொள்ளும்!
அவருக்கு சூட்டப்படும் மாலைகள்/பூக்கள் அகற்றப்பட்டு சிலை அருகில் இருக்கும் நீரோடையில் விட்டு விடுவார்கள்.
இது 20 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் YERPEDU என்னும் ஊரில் மிதப்பதை காணலாம்!
இந்த நீரோடை காரணமாக சிலையின் பின் பக்க சுவற்றில் காது வைத்து கேட்டால் அலையோசை கேட்கமுடியும்!
7வது மர்மம்:-
பெருமாளின் திருமேனி நடுவாக இருப்பது போல தெரிந்தாலும், அவர் வலபுறத்திலிருந்துதான் நம்மை நோக்கி வருவது போல நிற்கிறார்!( அவரது கால்கள் லேசாக மடங்கி முன்னுக்கு வருவது போல இருக்கும்)
8வது மர்மம்:-
அவரது திருமேனி முன்பு எரியும் விளக்கு யாரால் எப்போது ஏற்றபட்டதென்று யாருக்கும் தெரியாது.
ஆனால் எரிந்து கொண்டேயிருக்கும்!
அனந்தாழ்வாரின் கடப்பாறை:-
சன்னதிக்குள் நுழைந்ததும் வலது பக்க வாசல் சுவற்றில் ஒரு கடப்பாரை இருக்கும்.
இந்த இரும்பு கடப்பாரைக்கு சுமார் ஆயிரம் வயது ஆகியிருக்கும்!
கி.பி.1053 ல் பிறந்த ஆனந்தாழ்வார் காலத்தில் நடந்த சம்பவம்! (வருடம் குறித்த பிழையை சுட்டிக்காட்டிய வாசுதேவனுக்கு நன்றி)
ஸ்ரீ ஆனந்தாழ்வாரின் இந்த கடப்பாரைக்கும் பெருமாளின் கீழ் உதட்டில் வைக்கப்பட்டிருக்கும் கற்பூரத்திற்கும் தொடர்பை நீங்கள் பக்தி படங்களில் பார்த்திருக்கலாம்.
திருமலையில் பூந்தோட்டத்தை பராமரிக்கும் பொறுப்பை ஆனந்தாழ்வார் ஏற்று, மனைவியுடன் அங்கேயே தங்கியிருக்கிறார்.
செடிகளுக்கு நீர் ஊற்றும்போது ஒரு சிறுவன் உதவுகிறான். அவனை விலகி போக சொல்லியும் , பிடிவாதம் பிடிக்கிறான் பையன்.
அவனை பயமுறுத்த ,அவன் மீது கடப்பாரையை வீசும் போது உதட்டுக்குக் கீழ் அடி பட்டு இரத்தம் வருவதை கண்டு திடுக்கிட்டு நிற்கும்_
உங்களுக்கு அடுத்த சீன் ஞாபகத்திற்கு வந்திருக்கும்.
பெருமாளின் சிலையிலிருந்தும் இரத்தம்!
அதை நிறுத்துவதற்காக கற்பூரம் வைத்து முயலுகிறார்கள். சிறுவனாக வந்து அடி வாங்கியது பெருமாளைதான்!
அந்த நினைவாக அந்த கடப்பாரை!
"மொட்டை"போடுதல் -
"கலியுகம் முடியும் வரை உங்களை தரிசிக்க பக்தர்கள் வந்து ,முடியை காணிக்கையாக தருவார்கள். அவர்கள் கேட்கும் வரத்தை தந்து அருள வேண்டும்"
👆 இவங்கதான் நீளாத்ரி மலையின் இளவரசி நீளா!
பெருமாள் சயனித்திருக்கும் சமயம் நீளா தரிசனம் செய்ய, அவரது சிகை காற்றில் கலைய, கேசமின்றி சிறு பகுதி தெரிய….
நீளா தன் கூந்தலை பிடுங்கி அங்கே வைக்கிறாள். மன்னிக்கவும், வைக்கிறார் இளவரசி!
மெய் சிலிர்த்த பெருமாள்," எதாவது வரம் கேள்"
"கலியுகம் முடியும் வரை உங்களை தரிசிக்க பக்தர்கள் வந்து ,முடியை காணிக்கையாக தருவார்கள். அவர்கள் கேட்கும் வரத்தை தந்து அருள வேண்டும்"
தனக்காக எதையும் கேட்காத நீளாவுக்கு பெருமாள் கொடுத்த இடம்___
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment