Thursday, February 13, 2025

மகிமை மிகுந்த மாசி மாதம் மகா சிவராத்திரி மாசி மகம்...

மகிமை மிகுந்த மாசி மாதம்
சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்ப இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலா ன 29 நாள், 48 நாடி, 24 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

🌹இம்மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள்
* மகாசிவராத்திரி
* மாசி மகம், போன்றவை...

🌹மாசி மாத சிறப்புகள்
****************************
◆அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித் ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

◆மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப் படுகிறது.

◆சிவபெருமான் குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராண கூற்று. 

◆பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சக மாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.

◆மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். 

◆மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப் பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

◆மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

◆மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு அதனால் மகா விஷ்ணுவை இம்மாதம் முழுவ தும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழி பட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறை வேறும்.

◆மாசி மகத்தன்று சிவபெருமான், பள்ளிகொ ண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழி பாட்டி னை நடத்தினார். வல்லாள மகா ராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாரா ஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கிறது.

◆மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

◆மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியானவள் தாட்சாயிணி என்ற பெயரி ல் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.

◆மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பெளர்ணமியில்தான்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்டது தான் மாசி மாதம்.

🌹காரைக்கால் அம்மையார் 
**********************************
வைணவத்துக்கு ஆண்டாள்போல, சைவ சமயத்துக்கு காரைக்கால் அம்மையார் திகழ் கிறார். 

கணவனால் புறக்கணிக்கப்பட்ட புனித வதி என்ற காரைக்கால் அம்மையார், "இறை வா! இனி எனக்கிந்த மேனியழகு வேண்டாம்; பேய் உருவம் கொடு!' என்று வேண்டிப் பெற்றவர்.

ஆடல் வல்லானின் அற்புதங்களை நெஞ்சில் நிறுத்தி, "திருவந்தாதி' என்னும் அரிய நூலை அருளினார். 101 பாடல்கள் கொண்ட இந்த நூலில், பத்து பாடல்களுக்கு ஒருமுறை தாம் பெற்ற இறையனுபவத்தைக் கூறியுள்ளார்.

அம்மையாருக்காக சிவபெருமான் நடனம் ஆடி யருளினார். அது ஊர்த்துவ நடனம் எனப்படும். அப்போது இசைக்கப்பட்ட சச்சரி, கொக்கரை, தககை, தகுணச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா, மொந்தை எனப்படும் 12 இசைக்கருவிகளைப் பற்றி தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின் பிறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்க ள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது இம்மாசி மாதத்தில்தான்.

🌹குபேரன் பேறு பெற்ற தலம்!
*************************************
திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள் ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.

ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரி ஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். 

தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிப டும் பக்தர்க ளுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண் டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி.

மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி பிராம்மணர்களுக்கு கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங் கள் செய்வது மிகுந்த புண்ணியமாகக் கருதப் படுகிறது.

இதே மாசி மாதம் பௌர்ணமி அன்றுதான் பன்னிரெண்டு வருஷத்துக்கொரு முறை நிகழும் மஹாமஹம் கும்பகோணத்திலும், ப்ரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் பிரஸித்தமானது. அன்று ஸ்னானம், தானம் விசேஷமானது.

மாசி மாதம் வரும் சிவராத்திரி விரதம் சிவனு க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் வருவது சிவராத் திரி. அன்றைய தினம் விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபுராணம் பாராய ணம் செய்வது நல்லது. 

மாசிமாதம் வரும் மாசிமகவிரதம் சிறப்பானது. மாசி மாதத்தில் பவுர்ணமியும் மக நட்சத்திர மும் கூடிய நாள். இந்நாளில் கடற்கரைக்கும் நதிகளுக்கும் ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு சென்மகஸ்தானம் ஆகும். இச்சமயத்தில் நாமும் புனித நீராடினா ல் புண்ணியம் எனக்கூறுவர்.

🌹மாசி சரடு பாசி படரும் 
*******************************
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளி க்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்க ள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியா கவே அவர்கள் வாழ்வார்கள். இதற்கு மாசி சரடு பாசி படரும் என்ற பழமொழியும் உண்டு. 

இதற்கு விளக்கம் மாசி வெள்ளிக்கிழமையில் கட்டப்படும் மஞ்சள் சரடு பாசி படரும் வரை நிலைத்திருக்கும். அதாவது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பதே இந்த பழமொழியி ன் பொருள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர்.

சிவராத்திரி சிவாலயம் வில்வனேஸ்வரர் திருக்கோவில் திருவைகாவூர் அந்த தலம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்கு செல்லும் சாலையில் தி...