Friday, February 7, 2025

பாதாளேசுவரர் அரதைப்பெரும்பாழி, அரித்துவாரமங்கலம் திருவாரூர்...

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில், அரதைப்பெரும்பாழி,                    
அரித்துவாரமங்கலம் 612802
திருவாரூர் மாவட்டம்.  

*மூலவர்:
பாதாளேசுவரர், 
பாதாள வரதர்

*தாயார்:
அலங்காரவல்லி

*தல விருட்சம்:
வன்னி மரம்

*தீர்த்தம்:
பிரம்ம தீர்த்தம் 

*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருஞானசம்பந்தர்.                           

*மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண பூமியில் துவாரம் ஏற்படுத்தியதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது.     
*மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்ற பெயர் வந்தது.           

*வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால், சிவபெருமானின் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். 
வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். 

*இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும ரகசியமாகும்.    

*வராக அவதாரமெடுத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்ட திருத்தலமாகும் இது.        

*சிவனுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி  அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். 
அம்பாள் அலங்கார வல்லி என்ற திருநாமத்தோடு  நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். 

*அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. 

*அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.   

*இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இவரை வழிபட்டால் நவகிரக தோஷம்  நீங்கும்.        

*இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பின் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.     

*இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.                இந்த ஐந்து "வனத்" தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம்.

1)உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும், 

2)காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும்,      

3)உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும், 

4)சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும், 

5)அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும்.

*இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. 

*தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும்   அரித்துவாரமங்கலம்  உள்ளது.  கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.                                    

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_ நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல...