Friday, February 7, 2025

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_

நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய கனவாகஇருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல வேலை நல்லசம்பளத்தோடு, நமக்கு சவுகரியமான வேலை கிடைப்பது என்பதுகுதிரை கொம்பாக உள்ளது. ஆகவே ஏற்கனவே ஒருவேலையில் இருப்பவர்கள், திருப்திகரமாக அந்த வேலையை செய்யுங்கள். 

மனசாட்சிக்குவிரோதம் இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய வேலையை செய்யுங்க. நிச்சயம் உங்களுக்கு நிறைவான வருமானம் கிடைக்கும். நல்ல வேலை இல்லையா. இருக்கின்ற வேலையில் நிம்மதி இல்லையா. ரொம்பவும் பணப்பிரச்சினையாக இருக்கிறது, இன்னும் கொஞ்சம் உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைத்தால் நல்லா இருக்கும் என்ற சூழ்நிலை உங்களுக்கு உண்மையாகவே இருக்கிறது எனும் பட்சத்தில், அந்த வேலையில் இருந்துமாறுவதற்கு, புது வேலையை தேடுவதற்கு முயற்சி செய்யலாம்.
 
அதைவிடுத்துசும்மா சும்மா வேலையை மாற்றிக்கொண்டே இருக்காதீங்க அது எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. வேலையே இல்லாதவர்களுக்கு வேறு வழியே இல்லை கிடைத்த வேலைக்கு கட்டாயம் போகணும். சம்பாதிக்கணும். சரி, வேலை கிடைக்கணும் சம்பாத்தியம் பெருகனும் என்றால் முருகர் வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சொல்லும் எளிமையான வழிபாடு இது.


*நல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு:*

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் முருகர் பாதங்களில் விழுந்து வழங்கினால் நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை காலை 6:00 மணியிலிருந்து 7:00, மதியம் 1:00 மணியிலிருந்து 2:00, இரவு 8:00 மணியிலிருந்து 9:00 இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு எது சௌகரியமோ அந்தநேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலேயே முருகர் படத்திற்கு முன்பாக ஒரு பித்தளை தாம்பூல தட்டை வைத்து அதில் இரண்டு கைப்பிடி துவரம் பருப்பை போட்டு, அதன் மேலே இரண்டுமண் அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு விளக்கு ஏற்றி ‘முருகா எனக்கு நல்ல வேலை அமைத்து கொடு’ என்று வழிபாடு செய்யுங்கள். முருகரை முழுமையாக நம்பி இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வருபவர்களுக்கு வேலையில் இருக்கும் பிரச்சனை நீங்கும். 

வேலையே இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர்ந்த சம்பளம் உயர்ந்த பதவி தேவை என்பவர்களுக்கும் அவை எல்லாம் கிடைக்க முருகப்பெருமான் அருள் பாவிப்பர். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்துசேரும். இந்த பரிகாரத்தை செய்துவிட்டுசில வேலைகளுக்காக தேர்வு எழுதினீர்கள் என்றால் அந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பிரார்த்தனையில் நம்பிக்கை வையுங்கள். முருகப் பெருமானிடம் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய உழைப்பிலும் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையோடு போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு அடுத்த நாள் புதன்கிழமை அந்த துவரம் பருப்பு எல்லாம் எடுத்து வழக்கம் போல நீங்கள் சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதிலிருந்து ஒரு பிடி துவரம் பருப்பைமட்டும் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பசுமாட்டிற்கோ அல்லது காக்கை குருவிகளுக்கு இரையாக போடுங்கள் நன்மை நடக்கும். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_ நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல...