Monday, March 3, 2025

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் இடம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்……..!!!
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்

என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்
பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்…..!

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள… 
திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில் தை அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..!

தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும்,

திருநாங்கூர் மணிமாடக் கோயில்
சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், திருநாங்கூர்.

இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.

இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள்.
ஆக மொத்தம், பதினொன்று!

ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.

இதுதான் அந்த திவ்ய தேசங்களின் பட்டியல்:
1. திருக்காவளம்பாடி,  ஸ்ரீகோபால க்ருஷ்ணன்

2. திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்)

3. திருவண்புருடோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள்

4. திருச்செம்பொன்செய் கோயில், ஸ்ரீசெம்பொன்னரங்கர்.

5. திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள்.

6. திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன்.

7. திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள்.

8. திருத்தெற்றியம்பலம், ஸ்ரீரங்கநாதர்.

9. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்.

10. திருவெள்ளக்குளம், ஸ்ரீநிவாஸ பெருமாள்.

11. திருப்பார்த்தன்பள்ளி,  ஸ்ரீபார்த்தசாரதி

ஆகிய பெருமாள்கள் தங்கள் கோயில்களில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..! தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில்  எழுந்தருளி சேவை சாதித்து  சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும் நரசிம்மரை வழிபட்டால் பரமேஸ்வரன்-பார்வதியை வழிபட்டது போன்ற உயர்ந்த பலன் கிடைக்கிறது. சுவாதி நட்...