Saturday, April 26, 2025

அமிர்தகடேஸ்வரர்/ கோடிக்குழகர் கோடியக்காடு கோடியக்கரை..

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்/  கோடிக்குழகர் திருக்கோயில்   கோடியக்காடு 614807, கோடியக்கரை, வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்           
*மூலவர்:
அமுதகடேஸ்வரர்/ குழகேஸ்வரர்.

*தாயார்:
அஞ்சனாட்சி, மைத்தடங்கண்ணி.

*தல விருட்சம்:
குராமரம்

*தீர்த்தம்:
அக்கினி தீர்த்தம் (கடல்), அமுத தீர்த்தம்.

*பாடல் பெற்ற தலம். சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியுள்ளார்.    

*வழிபட்டோர்
 இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர்.           
*குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் ‘கோடிக்குழகர்’ என்ற பெயர் பெற்றது.       

*குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு என்றும், கடல் உள்ள இடம் கோடியக்கரை என்றும் வழங்கப்படுகிறது.        

*கோடியக்காடு 
காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்புக்காக "காடு கிழாள்" என்ற வனதேவதையின்  சந்நிதியும் கோயிலின் முன்மண்டபத்தில் உள்ளது.       

*திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவர் உலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தல வரலாறு கூறுகிறது.       

*இங்கே விழுந்த அமுதத்துளிகளில் சிலவற்றை முருக பெருமான் ஏந்தினார் என்பதால் இங்குள்ள முருக பெருமானுக்கு அமிர்த சுப்ரமணியர் என்று பெயர்,  இங்குள்ள விநாயகருக்கு அமிர்த விநாயகர் என்று பெயர், மற்றும் இக்கோவிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.              

*இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு, தன் இடது கையில் அமுதக் கலசத்துடன் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவற்றை ஏந்தியவாறு உள்ளார். இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. 

*இத்தலம் அருணகிரி நாதரின் "திருப்புகழ்" பெற்றத் தலமுமாகும். 

*நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளதால் இத்தலம் கோளிலித் தலம் எனப்படுகிறது. 

*அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்துக்கு வரும் வழியில் ராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் ராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.   

*கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. 

*தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதப்படுகிறது. 

*கூழகர் கோயில்  சோழர்களால் கட்டப்பட்டது.   சோழர் காலத்தைச் சேர்ந்த  கல்வெட்டுகள் உள்ளன.           

*கல்கி எழுதிய  பொன்னியின் செல்வன் நூலின் இரண்டாம் பாகம் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளன. 

*வேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி வழியாக தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்க வேண்டும்.                           ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ராஜராஜ சோழனின் வியக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயில்

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது  1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்க...