பஞ்ச சபைகளில் இரண்டாம் சபை தாமிர சபை
"ஏனைவெண் கொம்பொடு மெழில் திகழ் மத்தமு
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனினில் ஐந்துசந் தாடுவார் பாடுவா ரருமறைகள்
தேனில் வண்டமர்பொழிற் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே"
என திருஞானசம்பந்த பெருமானால் பாடபட்ட தாமிர சபை
இந்த சபை நெல்லையப்பர் கோவிலுனுள் இருப்பதாக சொல்லபட்டாலும் அது உண்மையில் அமைந்திருக்குமிடம் அங்கிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் செப்பறை எனும் ஆலயத்தில்
ஆம் குற்றாலத்தில் சித்திரசபை தனித்தே இருப்பது போல் தாமிர சபையும் தனியே செப்பறை எனும் தலத்தில் தனித்து நிற்கின்றது
அந்த ஆலயம் உருவான வரலாறு சிவனருள் ஒன்றாலே நடந்தது சிவனே தான் நடராஜ கோலத்தில் தன்னை நிறுத்திய தலம் அது
அந்த வரலாற்றினை அறிதல் அவசியம்
நெடுங்காலத்துக்கு முன் சோழநாட்டு பக்கம் ஆண்ட சிங்கவர்மன் எனும் மன்னனுக்கு சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட மன்னனுக்கு சிதம்பரம் நடராஜருக்கு  விக்ரஹம் செய்யும் ஆவல் எழுந்தது, உடனே தன் பிரதான சிற்பியிடம் பொறுப்பை கொடுத்தான்
அவன் மாபெரும் பக்தனாய் இருந்ததாலும் அந்நாளில் இந்த காரியங்கள் அவசியம் என்பதாலும் அதை செய்விக்க முனைந்தான்
நடராஜ தத்துவம் என்பது அகத்தியர், காரைக்கால் அம்மையார், பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் என எல்லோருக்கும் தென்னகத்தில் தமிழகத்தில் காட்டபட்ட பெரும் அதிசயம், அவர்கள் நடராஜ கோலம் எனும் ஆடல் கோலத்தை கண்டதே இந்த மண்ணில் என்பதால் எப்போதுமே இங்கு அந்த அதிசயத்தினை சிலையாக்கி வைப்பதில் எல்லா பக்தர்களுக்கும் ஆர்வம் அதிகம்
மன்னன் என்பதால் வாய்ப்பு அதிகமாயிற்று, செலவுகளை அவனே செய்வான் மேலாக எல்லாவற்றுக்கும் உத்தரவிடும் அதிகாரம் அவனிடமே இருந்தது
இதனால் ஒரு நடராஜ சிலை செய்ய உத்தரவிட்டான், ஐம்பொன்னால்  சிற்பி அப்படி  ஒரு சிலை செய்ய அது தாமிர சிலைபோலே காட்சியளித்தது
மன்னன் திருப்தி கொள்ளமால் இன்னொரு சிலை சுத்த தங்கத்தால் செய்ய மறுபடி உத்தரவிட்டான், பொன்னம்பலத்தில் பொன்னால் ஆன சிலை இருக்க வெண்டும் என கருதினான், சிற்பி அவ்வாறே செய்தும் கொடுத்தான்
அனால் மன்னன் கண்ணுக்கு அதுவும் தாமிர சிலைபோலானது,  தங்கமாக மின்னாமல் தாமிரமாக மின்னிய சிலையினை கண்டவன் ஆத்திரமடைந்து சிற்பி தன்னை ஏமாற்றியதாக  அவனை சிறையிலிட்டான்
மன்னன் கனவில் வந்த எம்பெருமான், இரண்டாம் சிலை சிதம்பரத்தில் இருக்கும்படியும் முதல் சிலையினை சிற்பியிடம் கொடுத்துவிடும்படியும், அது இருக்கவேண்டிய இடத்தை நாமே முடிவு செய்வோம் என சொல்லி மறைந்தார்
மன்னன் மனம் தெளிந்து இரண்டாம் சிலையினை சிதம்பரத்தில் வைத்தான், முதல் சிலையினை சிற்பியிடமே கொடுத்தான்
சிற்பி அதை என்ன செய்வது என தெரியாமல் திகைத்தபோது சிவனே கனவில் வந்து அந்த சிலையினை சுமந்து தெற்கு நோக்கி செல்லும்படியும், எங்கே அது மிக கனமாக இருக்குமோ அங்கே ஸ்தாபிக்கும் படியும் உத்தரவிட்டார்
அச்சிலை ஒருவர் எளிதில் சுமக்குமளவு பஞ்சு மூட்டை போலிருந்தது, சிற்பி சிவன் உத்தரவின் படி தெற்கு நோக்கி வந்து தாமிரபரணி கரையோரம் அமர்ந்தபோது அது கனத்தது, பின் அங்கே ஸ்தாபிக்கபட்டது
அதனை ஸ்தாபித்தவர் ராமவர்ம பாண்டியன் எனும் பாண்டிய சிற்றரசன், இவன் அரசவல்லிபுரம் அல்லது ராஜவல்லிபுரத்தில் தங்கி சிற்றரசனாக ராஜபரிபாலனம் செய்து கொண்டிருந்தான், பாண்டியன் என்பதால் மாபெரும் சிவபக்தன்
எந்த அளவுக்கு சிவபக்தன் என்றால் நெல்லையப்பரை தரிசிக்கமால் உணவு தொடாத அளவு மகா உன்னதமான சிவபக்தன்
அந்த மன்னனுக்கு சிவன் இட்ட உத்தரவில் இந்த ஆலயம் அமைக்கபட்டது, மன்னன் அந்த சிலையினை கண்டபோது சிவன் சிலம்பொலி எழுப்பி அங்கீகரித்தார் என்பது மெய்சிலிர்க்கும் செய்தி
இப்படி மிக மிக பழங்காலத்திலே அது தாமிர சிலையாக அது சிவனருளால் ஸ்தாபிக்கபட்டு தாமிர சபையாகவே நிலைத்தது
இந்த காலம் யுகங்களுக்கு முன்பானது மிக மிக பழங்காலத்தில் நடந்த திருவிளையாடல் அது
1221ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இந்த சிலை அடித்து செல்லபட்டது, ஆனால் சிவபெருமான் ஆரைஅழகப்ப முதலியார் எனும் அடியார் மூலம் அதை மீட்டெடுக்க செய்தார்
பின் சிதம்பரத்தில் தங்க தகடுகள் போல இங்கு செப்பு தகட்டு கூரை அமைக்கபட்டது, இன்று அது தாமிர சபையாக வீற்றிருக்கின்றது , பாண்டிய மன்னன் வீரபாண்டியன் இங்கு பல திருப்பணிகளை செய்துள்ளார்கள்
இன்னும் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் முதல் எல்லா பாண்டியர்களும் அங்கு வணங்கியிருக்கின்றார்கள்
இந்த ஆலயம் அகத்திய முனி, திருமால், அத்திரி மகரிஷி என ஏகபட்டோர் வந்து வணங்கிய தலம் தாமிர சிலை நடராஜர் ஆடும் காட்சிமிக்க தலம் என்பதால் தாமிர சபையாயிற்று
பின் வந்த ஞானியரும் ரிஷிகளும் நாயன்மார்களும் அதை இன்னும் இன்னும் தங்கள் ஞானவழிபாட்டால் சக்திமிக்கதாக்கினார்கள்
உலகின் மிக மிக அழகான உருக்கமான நடராஜர் திருமேனி இங்குதான் உண்டு, அப்படி ஒரு வசீகரமான உருவம் அது, சிவனை மனதில் காட்டி உருக்கும் மாய திருமேனி அது
இந்த தலமேதான் தாமிர சபை, நெல்லையப்பர் கோவிலில் இருப்பது பஞ்ச சபைகளில் ஒரு வடிவமே அன்றி தாமிர சபை என்பது இதுதான், இந்த செப்பறை ஆலயம்தான்
சரி ஏன் தாமிர சபை என ஒன்றை சிவனருளால் ஏற்படுத்தினார்கள்? ஏன் சிவனே அப்படி ஒரு சபை அருள திருவுளமானார்? ஏன் தாமிரசிலையினை கொடுத்து இங்கே தாமிர சபையினை உருவாக்கினார் சிவன்
இந்த ஞானதாத்பரியம் கொஞ்ச்ம ஆழமாக் பார்க்கவேண்டியது
சித்திர சபை என முதலில் சொல்லபட்ட குற்றால தலத்தின் தத்துவம் ஞான தேடலின் தொடக்கம், அது சித்திரம் எனும் எளிதில் கலைய கூடிய அழிய கூடிய தன்மையினை சொன்னது
திரையோ , சுவரோ அங்கே எழுதபடும் சித்திரம் விரைவில் கலையும் ஆனால் தாமிர தகட்டில் எழுதபடும் எழுத்தோ சித்திரமோ பாதுகாக்கபடும்
செப்பேடு என்பது அதுதான்
இந்த இடத்தில் இருந்துதான் இந்த தாமிர சபையின் தாத்பரியத்தை அதன் ஞானத்துவ போதனையினை அறிந்து கொள்ளல் அவசியம்
தாமிரம் என்பது பாதுகாப்பை கொடுப்பது, தாமிரத்தின் தாத்பரியமே பாதுகாப்பு என்பது. அது உறுதியானது தன்னோடு சேர்வதையும் உறுதியாக்கும் தன்மை கொண்டது, வெண்கலம் அப்படித்தான் உருவாகும்
அக்காலத்தில் நீரை தாமிர பாத்திரத்தில்தான் பருகினார்கள், உணவுகள் கூட தாமிரம் கலந்த உருக்கு பாத்திரத்திலே சமைக்கபட்டது, அதுதான் உணவுக்கு நீருக்கு பாதுகாப்பு என அன்றே சொன்னார்கள் முன்னோர்கள்
எந்த அதிர்வையும் கடத்திவிடும் இயல்பு கொண்டது தாமிரம், எல்லா அதிர்வையும் தாக்கத்தையும் அது கடத்திவிட்டு அந்த சூழலை காப்பாற்றும் , இடிதாங்கியில் இருப்பதும் இந்த தத்துவமே
அப்படியான தாமிரம் என்பது உறுதியினை கொடுப்பது , உறுதி கொடுக்கும், காவல்  கொடுக்கும் விஷயமாக அறியபடுவது
அந்த தாமிரம் ஜோதிட ரீதியாக செவ்வாயோடு தொடர்புடையது , அதாவது நில தத்துவம் அல்லது எதையும் தாங்கி நிற்கும் தன்மை
உறுதியளிக்கும் தன்மை அதாவது காவல்
இப்பொது இந்த தலத்தின் தாத்பரியம் எளிதில் விளங்கும் அது சிவபெருமான் இங்கு காத்தல் தொழிலை செய்கின்றார் என்பது
ஆம் சிவனுக்குரிய ஐந்து தொழில்களில் காத்தல் என்பது முக்கியமானது, எல்லா உயிர்களையும் காப்பது அவர் தொழிலகளில் ஒன்று
"கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் ஈசன்" என்பது அதுதான்
அப்படியான ஈசன் இங்கே காத்தல் தொழிலை செய்கின்றார், பஞ்ச சபைகளில் தாமிர சபை என சொல்லபடும் இந்த சபையின் தத்துவம் அதுதான்
சித்திர சபையில் ஆத்மா ஞானத்தை தேட துவங்க்கின்றது, அந்த தேடலை இந்த தாமிர சபை அடுத்த நிலைக்கு உயர்த்தி ஒரு உறுதியினை காவலை கொடுக்கின்றது
சித்திர நிலை என்பது மனதில் இருந்து மானுடன் ஞானம் தேடும் தொடக்க நிலை, இறைவனை உணர தொடங்கும் தொடக்க நிலை
தாமிர சபை என்பது அடுத்தகட்டத்துக்கு அந்த தேடலை நகர்ததும் வரத்தை அருள்வது, காவலை தருவது. ஞானத்தேடலோ ஆத்ம ஈடேற்றமோ எளிதில் நடக்காது
புளியம்பழ ஓடு இலகுவாக பிரிவது போல் எளிதாக ஞானம் கிடைக்காது , அங்கே கடும் போராட்டம் உண்டு, பெரிய பெரிய சறுக்கல் உண்டு, நம்பிக்கையின்மை முதல் பல இழப்புகள் வரை நிறைய உண்டு
அங்கே ஒரு வைராக்கிய தன்மை, உறுதி தன்மை அவசியம், காவல் அவசியம், உறுதிபாடு அவசியம் அதைத்தான் இந்த தாமிரசபை வழங்குகின்றது
சிவன் இங்கே திருதாண்டவம் ஆடுகின்றார் என்பது நம்பிக்கை, திருதாண்டவம் என்பது சீரான இயக்கத்துக்கான ஒரு அசைவு
எல்லாம் சரியாக இயங்குகின்றது என்பதற்கான ஒரு குறியீடு, அப்படி சரியாக இறைசக்தி ஞான தேடலையும் காவலாக அழைத்து செல்கின்றது என்பதற்கான ஒரு அடையாள சொல்
பிரபஞ்ச இயக்கத்தை சொல்லும் காட்சி அது
(திருதாண்டவ நடனம் என்பது உலோகங்களில் உள்ள அணுக்களின் இயக்கம், பிரபஞ்ச கோள்களின் சீரான இயக்கம்
இந்த இயக்கத்தை ஒரு சக்தி சீராக செய்யும், அணுக்கள் உள்ளே இயக்கம் குழம்பினால் உலோகமே குழம்பி சிதையும், பிரபஞ்சத்தில் கோள்கள் இயக்கத்தில் சிக்கல் என்றால் எல்லாம் மொத்தமாக சிதறும்
அந்த பிரபஞ்ச இயக்கமே திருதாண்டவம்
இதனை முனிதாண்டவம் என்றும் சொல்வார்கள், முனி என்றால் தனித்து நின்று காப்பவர்கள் என பொருள், சிவன் தவகோலத்தில் நின்று காவல் செய்யும் நடனமிடுவதால் இந்த நடனம் முனிதாண்டவமாயிற்று
உடலின் செல்கள் சீராக பிரியும் வரை இயக்கம் சரி, எப்போது செல்களின் இயக்கம் கோளாறுகின்றதோ அப்போதுதான் உடல் சிக்கலாகின்றது
சீரான இயக்கத்துக்கு ஒரு சக்தி உதவுமல்லவா அதுதான் காத்தல் தொழில்)
இந்த உலகை சிவன் காக்கின்றார், இந்த உலக அசைவை உலக உயிர்களை எல்லா படைப்புக்களையும் அவரே இயக்கி காக்கின்றார் என்பது அந்த தாமிர சபையின் போதனை
தன்னை தேடும் ஆன்மாவினை அந்த இறைசக்தி காக்கின்றது, அந்த ஆத்மாவின் தேடலுக்கு சறுக்கல் வராமல் சிக்கல் வராமல் அது காக்கின்றது என்பது அங்கே கிடைக்கும் வரம்
ஆம் தாமிரசபை என்பது காவல் தரும் இடம்,அந்த சபைக்கு சென்று வணங்கும் ஒவ்வொருவருக்கும் சிவனின் காவல் கிடைக்கும்
ஆத்ம தேடல் அடுத்த கட்டத்துக்கு செல்லும், அந்த ஞானதேடல் முக்திக்கான தேடல் உறுதியாகும், வலுக்கும்
இந்த ஆலயம் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான வாமதேவா முகத்தை குறிப்பது, அது பாதுகாவலை கொடுக்கும் முகம்
இந்த செப்பறை ஆலயம் அந்த வாமதேவ முகத்தை பிரதிபலிப்பது, அது உலகின் நல்லன எல்லாம் பாதுகாக்கும் காவல் முகம்
நெல்லையப்பர் ஆலயம் செல்வோர் மறக்காமல் இந்த செப்பறை (செம்பு அறை) ஆலயம்செல்லுங்கள், அழகிய கூத்தர் ஆலயம் என அதற்கு பெயர்
நீர் தத்துவம் அந்த ஆலய பஞ்ச பூத தத்துவம், அதனாலே நீர்வளம் கொண்டதும்,  வற்றாத நதியுமான தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ளது.
உலகின் அதி அற்புதமான தாமிர நடராஜபெருமான் சிலையினை, மிக மிக அழகான சிலையினை அங்கேதான் காண்பீர்கள்
உலகின் மகா தொன்மையான நடராஜர் சிலை அதுதான்
காத்தல் தொழிலை செய்யும் சிவன் அங்கே சகல சக்தியோடு வீற்ற்ருக்கின்றார், உலகை காத்து இயக்கும் அந்த பரம்பொருள் அங்கே காக்கும் கடவுளாக தாமிர சபையில் காவல் இருக்கின்றார்
வாமதேவர் உலகில் உள்ள நன்மைகளை நலல் விஷயங்களை காப்பவர், அப்படியே நல்லவற்றை  காக்கும் கடப்பாட்டை போதிக்கவும் செய்பவர்
அங்கு சென்று அவரை கைகூப்பி தொழுது அடைக்கலம் தேடுங்கள், அந்த வல்ல பரம்பொருள் எல்லா காவலையும் உங்களுக்கு தந்து காவல் செய்வார்
ஞானம் தேடும் ஆத்மா என்றால் அது வழுவாமல் தன் தேடலை தொடர, தவறிவிடாமல் சறுக்கி விடாமல் நிலைக்க எல்லா காவலையும் சிவன் அருள்வார்
அந்த சபையில் சென்று வணங்கி "ஓம் நம சிவாய" எனும் மந்திரத்தை ஓதி பிரார்த்தியுங்கள், 
நெல்லையப்பர் ஆலயம் இதே தத்துவம் கொண்டது, 
நெல்லை  மழைவெள்ளத்தில் வேலியிட்டு
சிவன் காத்தார் என்பது காவல் தொழிலை மிக அழகான தத்துவமாக சொல்வது
நெல் என்றால் ஆதாரம் என பொருள் , வாழ்வின் முக்கிய ஆதாரம் என பொருள. சிவன் நெல்லை காத்தார் என்பது ஒவ்வொருவர் வாழ்வையும் சிவன் காத்து தருவார் என்பது
ஆம், அது காவலை வழங்கும் ஆலயம், அந்த நெல்லையப்பரை வணங்கிவிட்டு செப்பறை ஆலயம் செல்லுங்கள்
நெல்லையில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள் அந்த ஆலயம்தான், செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்தான் தாமிர சபை , அங்கு செல்ல மறவாதீர்கள், செப்பறை ஆலயத்தை வணங்காமல் முழுபலன் நெல்லையில் கிடைக்காது
செப்பறை தாமிர சபை எனப்து காத்தல் வரம் அருள கூடியது, சிவனே தன் அடியார் மூலம் நடராஜ பெருமானாக அதுவும் சூட்சும அடையாளமான தாமிர அடையாளத்துடன் வந்தமர்ந்த தலம்
காத்தல் தொழில் நானே, உறுதியும் ஆரோக்கியமும் தருவது நானே வலுவான காவல் எல்லோருக்கும் தருவது நானே, ஆத்ம ஞான பயணத்தில் வைராக்கியம் தருவது நானே, ஆபத்தை களைவதும் நானே என வந்தமர்ந்த தலம்
அங்கு எக்காலமும் சிவன் உண்டு , திருதாண்டவம் எனும் முறையான சீரான காவலை ஒழுங்கை செய்யும் நாதனாக அவன் உண்டு
அங்கே சரணடையுங்கள், நீர் தத்துவம் கொண்ட ஆலயத்தில் பணிந்து பாவமெல்லாம் கர்மாவெல்லாம் களைந்து, முழு காவலை அடைவீர்க்ள் இது சத்தியம்
இந்துக்கள் என்பவர்கள் மாபெரும் ஞானசமூத்தின் வாரிசுகள், அந்த முந்தைய மகா ஞான சமூகம் ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்புகளால் கொடுத்துவிட்டு சென்றது, அதை ஆழ தோண்டினால் மிக அணுக்கமாக ஆராய்ந்தால் மாபெரும் ஞானமும் தத்துவமும் சூட்சும ரகசியங்களும் கொட்டும்
அப்படி கொட்டிகிடப்பதுதான் தாமிரம் எனும் உலோகத்தை கொண்டு பெரும் தத்துவமும் மாபெரும் சிவனருளும் கொட்டிகொண்டிருக்கும் செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்
"காண்தகு மலைமகள் கதிர்நிலா
முறுவல் செய்து அருளவேயும்
பூண்டநா கம்புறங் காடு அரங்
காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீது எழ கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 
No comments:
Post a Comment