Tuesday, July 1, 2025

ஆடலரசனுக்கு ஆனி திருமஞ்சனம் என்ன சிறப்பு

*ஆடலரசனுக்கு ஆனி திருமஞ்சனம் அப்படி என்ன ஸ்பெஷல் வாங்க பார்ப்போம்...?
✨ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் நடராஜ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திற்கு ஆனி திருமஞ்சனம் என்று பெயர். இது ஆனி உத்திரத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.

✨திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். இதுபோன்று பல்வேறு இடங்களில் புகழ்பெற்ற அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு ஆனி உத்திர தினத்தில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் போன்றவை விசேஷமாக நடைபெறும்.

✨ஆனி மாதம் வேனிற் காலம் தொடங்கும் அற்புத மாதமாகும். நாடெல்லாம் நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் ஆனி மாதம் திருமஞ்சன விழா கொண்டாடுவதாக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

✨ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இந்த விழா, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

6 அபிஷேகங்கள்:

✨ஆடல் அரசனான நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஆனி உத்திர திருமஞ்சனமும் ஒன்று. அதாவது நடராஜ பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம், மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். 

✨இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும்.

✨இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

✨இதில் ஆனி மாத வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர். இதை மகாஅபிஷேகம் என்றும் சொல்லுவதுண்டு. அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனத்தின் முக்கியத்துவம்:

💫ஆனித் திருமஞ்சனம், சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை நினைவுபடுத்தும் ஒரு புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. சிவனின் இந்தத் தாண்டவம், ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. 

💫வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

💫அண்ட சராசரங்களின் இயக்கத்திற்குக் காரணமான சிவனை இந்த நாளில் வழிபடுவது, சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிதம்பரத்தின் சிறப்பு:

💫ஆனித் திருமஞ்சனம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்தான். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகப் போற்றப்படும் சிதம்பரம், நடராஜப் பெருமானின் மூல இருப்பிடமாகக் கருதப்படுகிறது. 

💫சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, 10 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நாளில், நடராஜப் பெருமானின் திருமேனிக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் காட்சியைக் காண கூடி, பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்வார்கள்.

நடராஜருக்கு அபிஷேகம் ஏன்?

💫அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.

💫நடராஜப் பெருமானுக்கு செய்யப்படும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை கண்டால், பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.

💫சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் திருமஞ்சனத்திற்கு தேவைப்படும் சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களில் உங்களால் முடிந்ததை வாங்கி கொடுக்கலாம்.

💫சந்தனம், பால், புனுகு, பன்னீர், விபூதி, வில்வம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்.

இந்த நன்னாளில் சிவனை தரிசிப்பதால்..

🙏கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். 

🙏கணவன் மனைவிக்குள் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

🙏குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🙏உடல்நல பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🙏பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு, மோட்சத்தைப் பெறலாம்

🙏அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

🙏ஆடவர்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும். 

🙏நீண்டநாள் பிரச்சனைகள் அகன்று தரிசனத்தால் தனலாபமும், நினைத்த காரியமும் கைகூடும்.

ஓம் நமசிவாய 
திருச்சிற்றம்பலம்...🙏 பார்ப்போம்...?

🙏நீண்டநாள் பிரச்சனைகள் அகன்று தரிசனத்தால் தனலாபமும், நினைத்த காரியமும் கைகூடும்.ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் - 2025-2026 இல் 6 தேதிகள் - சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மகா அபிஷேகம் தேதி
நடராஜர் அபிஷேகத்தின் 6 தேதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2 ஜூலை, 2025 - புதன் - ஆனி திருமஞ்சனம்

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் அபிஷேக நேரம்: ஜூலை 2ம் தேதி ராஜசபையில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை.

ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம்
- ஜூலை 1, 2025 அன்று மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது - செவ்வாய் மதியம்
- ஜூலை 2, 2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு முடிவடைகிறது - புதன்கிழமை மதியம்

குறிப்பு:
- திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் சபாபதி அபிஷேகம் ஜூலை 1ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
- மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், ஸ்ரீ நடராஜர் பிரதோஷ கால அபிஷேகம் ஜூலை 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறுகிறது.

- சிதம்பரத்தில் ஆனைத் திருமஞ்சனம், ஆனி உத்திர தரிசனம் ஜூலை 2ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து கரைசேர்ந்த தலம்

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும், புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற #திருப்பாதிரிப்புலியூர் #பாடலேஸ்வரர் ...