Saturday, July 26, 2025

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார்

*பகவானின் எல்லா அவதாரத்தில் சக்கரத்தாழ்வார் வருவாரா?* 
எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து நேரடியாகவோ மறை முகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர்.

 மச்சாவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர். கூர்மாவதாரத்தில் மந்திர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த் தெடுத்தனர்; எம்பெருமானுடைய வராக அவதாரத்தில் அவருடைய கோரைப்பற்களாக அவதரித்தவர். 

நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர். வாமனா வதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர். பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர்.

 ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர். பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர். பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர். மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால்தான் நடந்தது.

*மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார் மந்திரம்!* 

சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜயந்தித் திருநாள். என்றபோதும் மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வேதசத்சங்கம்

எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர். அரங்கனைத் தரிசித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதேபோல், அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு இருக்கும்.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் விளக்கேற்றி, இன்றைய ஜயந்தி நன்னாளில், ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். தினமும்

ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.

மார்கழி சித்திரை நட்சத்திர நன்னாளான இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்!
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆடி மாத தரிசனம்.திருவக்கரை வக்கிரகாளி அம்மன்..

ஆடி மாத அம்மன் தரிசனம். திருவக்கரை வக்கிரகாளி அம்மன்  பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் ...