அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்,
ஓணகாந்தன்தளி,
பஞ்சுப்பேட்டை,
பெரிய காஞ்சிபுரம்-631502 காஞ்சிபுரம் மாவட்டம்.
*இறைவர்: ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர்
*இறைவியார்: காமாட்சி அம்மன்.
*தலவிருட்சம்: வன்னி, புளியமரம்.
*தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்
*வழிபட்டோர்:ஓணன், காந்தன் (இவர்கள் வாணாசுரனின் சேனாதிபதிகளாவர்), சலந்தரன், சுந்தரர் , சேக்கிழார் முதலியோர்.
*காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று. *இங்கு சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். *இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரரின் திருப்பாதம் உள்ளது.
*இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.
மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அதனை அறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார்.
*பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
*இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
*வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
*ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.
இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான்.
இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான்.
*ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன.
*ஓணன், காந்தன் இருவரும் இத்தலத்தில் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன.
சலந்தரன் வழிபட்ட சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது. இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
*காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
*இக்கோயில் காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து சாலையில் (கோயில் உள்ள பகுதி பஞ்சுப்பேட்டை எனப்படும்) உள்ளது.
தொடர்பு :98944 43108
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment