உத்திரட்டாதி நட்சத்திர கோயில்🙏🙏
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
தீயத்தூர், புதுக்கோட்டை .
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்ப தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
உத்திரட்டாதி நட்சத்திரக் கோவில் தீயத்தூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில், அமைந்துள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் ஆவுடையார்கோவில் வழியாக 21 கி.மீ. செல்லும் போது தீயத்தூர் வருகிறது. மதுரையில் இருந்து அறந்தாங்கி வழியாக திருப்புவனவாசல் பஸ் மூலம் தீயத்தூரை அடையலாம்.
நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை,
கோவிலின் சிறப்பம்சம்:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment