சிவபெருமானின் அதிசயம்
நந்தியின் குறுக்கே ஏன் செல்லக்கூடாது? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
சிவனுக்கு அபிஷேகம் பலன்கள்
சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்திற்குரிய சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.
சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.
தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.
தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.
சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பான பலன்களை தரும்.
சிவன் கோயிலில் வழிபடும் முறை
முதலில் சிவன் கோயிலை அடைந்தவுடன் "சிவாய நம" என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன்பிறகு கோயிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
அதன்பிறகு நந்திதேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். நந்திதேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் ஜெபிப்பது சிறந்தது.
அதன்பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் "ஓம் நம சிவாய" என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.
சிவபெருமானை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும்.
அம்பாளை வணங்கிய பின்னர் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது.
அதன்பிறகு கோயிலை வலம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோயிலை வலம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் "ஓம் நம சிவாய" என்று மந்திரத்தை ஜெபித்தவாறே வலம் வர வேண்டும்.
நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது ஏன்?
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.
இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.
⚡ ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லாது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர் ஆவார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment