Monday, October 27, 2025

சூரனை வென்ற வீரன் முருகன்

 சூரசம்ஹாரம்
சூரனை வென்ற வீரனை வணங்குவோம் 

சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். 

அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிரு ந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறி னார் வீரபாகு. 

சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடி வம் கொண்டு யாவரையும் அழிக்க எண் ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகி ய பானுகோபன், அக்னிமுகாசுரன், தம்பிக ளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனை கள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். 

இறுதியில், மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகை யில் பெரிய மாமரமாக நின்றான். வீறு நிகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத் தை ஏவி விட்டார். 

அம்மாமரம் இருகூறா கச் சிதைந்தது. ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித் தன்மை உண்டு.

சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூர பத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண் மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற் கும் இல்லாத சிறப்பு இதுவாகும். 

அதனால் தான் ""வைதாரையும் வாழவை ப்பவன் முருகன்'' என்று போற்றி வழிபடு வர். கந்தசஷ்டியின் 6 ம் நாளான  நாளை மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாகமாறி ஆறுமுக ப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம். 

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டி யாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது.

முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவா சை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. 

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரி யார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறை யில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருக னை எழுந்தருளச்செய்து, அசுரர்க ளை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார் இதனை நினைவுறுத்து ம் விதமாகவே ஐப்பசி அமா வாசையை அடுத்து கந்த சஷ்டி கொண்டா டப்படுகிறது என்கிறார்.

இரண்டு வடிவங்களில் முருகன்சூரனை சம்ஹாரம் செய்வதற்கு வந்த முருகன், சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் மூலஸ்தானத்தில் அருளுகிறார். இவர் சிவனை வணங்கியபடி, தவக்கோலத்தி ல் உள்ளார். தவிர சண்முகர், பிரதான உற்சவமூர்த்தியாக தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். 

இவருக்கு மூலவருக்குரிய மரியாதை அனைத்தும் செய்யப்படுகிறது. திருமண த்தடை உள்ளவர்கள் இவரிடம் பிரார்த்த னை செய்கிறார்கள். இவரை சுற்றிவர பிரகாரம் இருக்கிறது. ஆனால், மூலவரின் தவம் கலைந்து விடக்கூடாது என்பதால் சுற்றி வருவது இல்லை.

 பாடவேண்டிய பாடல்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...