Saturday, October 4, 2025

சோதனைகளை சாதனை ஆக்கும் சிவனின் அருள்.

.🌹இனிய சிவனை வழிபாட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா🌹 இனிய வழிபாடு  அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும். அதனால் சிவ வழிபாடு செய்யுங்கள் என கூறினால், உடனே அட போய்யா, அவரை வழிபட தொடங்கிய பிறகு தான் பிரச்னை பெரிசாகிருச்சு என புலம்புவோர் பலர்.

பலருக்கும் சிவ வழிபாடு துவங்கியதும் ஒரு ஐயப்பாடு எழும். சிவனை வழிபட சொன்னார்கள். ஆனால் அப்படி செய்யத் தொடங்கியதும், இருப்பதை விட அதிக சிக்கல் வருகின்றதே என்று நினைக்க வைக்கும்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

தாயின் அன்புக்கும் தகப்பனின் கட்டுப்பாட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பலரும் அனுபவித்து இருப்பார்கள். சிவன் இந்த உலகத்துக்கான ஈசன் தந்தை. கேட்டதை உடனே கொடுத்து விட்டால் அதற்கு மதிப்பு இருக்காது. எனவே சோதனைகள் செய்துதான் வரம் கொடுப்பார்.

அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் வேண்டி தவம் இருந்தபோது சிவனே வேடன் வேடத்தில் ஒரு காட்டுப்பன்றியை துரத்தி வந்து அர்ஜுனனுடன் கடும் போட்டியிட்டார்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியைக்கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். 

அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. 

இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.

சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிந்தார். 

அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் திருவேட்களம் கோயில் தீர்த்தத்தில் விழுந்தான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்து அருளினார். 

அர்ஜுனன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் அங்கு காணலாம்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

எனவே சிவ வழி பாட்டில் சோதனைகள் வந்தாலும் இறுதியில் சிவனின் அருள் கிடைக்கும். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சோதனைகளை சாதனை ஆக்கும் சிவனின் அருள்.

.🌹இனிய சிவனை வழிபாட்டால் சோதனை துயரம் மட்டுமே வருமா🌹 இனிய வழிபாடு  அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும். அதனால் சிவ வழிபாட...