Saturday, November 1, 2025

நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபாட்டின் பலன்கள்

குலதெய்வ வழிபாடு .
         
தீராத கஷ்டங்கள் நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபடலாம் வாங்க.!

குலதெய்வ வழிபாட்டின் பலன்கள் 

நம் குலத்தைக் காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபட வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுகிறதா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் நடத்த முடியவில்லையா? பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதா?  இது போன்று தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதா? அதை சரிசெய்யலாம் வாங்க.

சுப நிகழ்ச்சி நடைபெற கொடுக்க வேண்டிய தானம்:

பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள் வெல்லம்.  மலிவான விலையில் நம்மால் வாங்க முடிகின்ற பொருளில் ஒன்று. அதை உங்களால் முடிந்த அளவு வாங்கி குலதெய்வ கோவிலுக்கு, உங்கள் கையால் தானம் கொடுங்கள்.  குலதெய்வ கோவிலில் நிர்வாகம் இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம். 

பின் இனிப்பான வெல்லத்தில் குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்து வழிபட வேண்டும். குறைந்த அளவு 1 கிலோ வெல்லம் வாங்கலாம்.  அதிகபட்சம் உங்களுடைய விருப்பம்.

எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் வாங்கி வைத்த வெல்லத்தை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும்.

குறிப்பாக, குலதெய்வ கோவில் இருக்கும் இடத்தில் இருந்து வெல்லம் வாங்க கூடாது. நாம் வீட்டில் இருந்து தான் எடுத்து செல்ல வேண்டும்.

முடிந்தால் மாதந்தோறும் வீட்டில் இருக்கும் ஒருவர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லத்தை தானம் செய்து வர,  உங்களுடைய வீட்டு சுப நிகழ்ச்சிகளில் எந்த தடையும் ஏற்படாது.

வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுமே இனிப்பான வெல்லத்தை போல் இனிமையாக நடக்கும்.

தீராத சுமை நீங்க எளிய பரிகாரம்: 

வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது தீராத கடன் சுமை இருந்தாலும், தீராத உடல் உபாதைகள் இருந்தாலும்,  கரைக்க முடியாத கட்டியிருந்தாலும் சில நாட்களிலேயே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போக எளிய முறை ஒன்றை வாங்க பார்க்கலாம். 

குலதெய்வ கோவிலில் குளம் இருந்தால் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே ஒரு கட்டி வெல்லத்தை போட்டு கரைத்து விடுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்த வெல்லம் போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் இருந்தாலும், உடல் உபாதைகளாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் உங்களை விட்டு கரைந்து போய்விடும்.


No comments:

Post a Comment

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...