அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில்
திருக்கலிகாமூர்
இந்நாளில் இத்தலம் அன்னப்பன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீர வழிபட வேண்டிய தலமிது.
சீர்காழி வெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இப்பகுதியில் வாழ்ந்து வந்த வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். தென் திருமுல்லை வாயில் சென்று அத்தல இறைவனிடம் வேண்ட, இறைவன் அருளால் வயிற்று வலி நீங்கியது.
பின்பு அவன் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதனை எடுத்து வந்து வழிபட அவனது வயிற்று வலி முற்றிலும் மறைந்தது. இறைவன் அசரிரீயாக இட்ட ஆணைபடி அம்பாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment