*இன்று ஒரு ஆன்மீக தகவல்*
பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் திருமாலுக்கு கோவில் ஒன்று எழுப்ப விரும்பினான். பல இடங்களில் தேடியும் அவன் மனதிற்கு ஒப்ப சிலை கிடைக்கவில்லை. மனம் வருந்திய சகாதேவன் தீக்குளிக்க தயாரான போது பெருமாள் சிலை ஒன்று சுயம்புவாக தோன்றியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததால் சுவாமிக்கு *அற்புத நாராயணர்* எனப் பெயர் ஏற்பட்டது. தாயார் *கற்பகவல்லி நாச்சியார்* என்னும் பெயரில் மகா லட்சுமி எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவமான கருவரையில் சுவாமி கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
இரண்டு சந்நிதிகள் இருப்பதால் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. தெற்கில் உள்ள கதவுகள் இல்லாத சந்நிதியின் மரச் சட்டத்தின் ஊடே தக்ஷிணாமூர்த்தி, விநாயகரை தரிசிக்கலாம். கோவில் முகப்பில் உள்ள கல்தூண் ஒன்றில் காவலாளி ஒருவரின் பூத உடல் சிலையாக இருக்கிறது. கோவில் நடைசாத்திய பின்னர் அண்டை நாட்டு மன்னனிடம் கையூட்டு பெற்று கோவிலை திறந்து விட்டு தரிசனம் செய்ய அனுமதித்த காவலாளி அக்கணமே பிணமானான்.
இப் பாடத்தை பொது மக்களுக்கு உணர்த்தவே அவனது உடல் கோவில் முன் சிலையாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் பத்து நாள் திருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் மகாதீபம் ஏற்றப்பட்டு
மறுநாள் வரை எரிந்து கொண்டு இருக்கும். இந்த வைபவத்தை *சங்கேதம்* என அழைக்கின்றனர். *திருக்கடித்தானம்* என்னும் இத்தலம் கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள
சங்கனாச்சேரியில் இருந்து 3.0கி.மீல் உள்ளது.
*ஓம் நமோ நாராயணாய*
🌷🌷
No comments:
Post a Comment