Tuesday, June 22, 2021

பிரதோச வழிபாடு பலன்கள்


🙏🕉🌺பிரதோஷம்🌺🕉🙏

🕉ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்

🕉: தீராத நோய்களும், கடன் பிரச்சினைகளும் தீர செவ்வாய்கிழமை வரும் பிரதோஷ நாளில் சிவனை விரதமிருந்து வணங்கினால் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக்கொண்டார் சிவபெருமான். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன் திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

🕉சிவ தரிசனம்

🕉பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இப்போது கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வீட்டிலேயே விரதம் இருந்து சிவபெருமானை வணங்கலாம்.

🕉சிவன் நந்தி வழிபாடு

🕉ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉பிரதோஷ நாளில் அபிஷேகம்

🕉ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாவிட்டாலும் சிவனுக்கு பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

🕉கடன் வாங்கக் கூடாது

🕉கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

🕉பிரதோஷ வழிபாடு

🕉சிவனுக்கு சனிப் பிரதோஷம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

🕉கடன் தீர்க்கும் முகூர்த்தம்

🕉நாளைய தினம் ருண விமோசன பிரதோஷம் மட்டுமல்ல கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்த நாளும் வருகிறது. செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. நாளைய தினம் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம். கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு.

🕉இறை வழிபாடு நல்லது

🕉மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். காலையில் எழுந்து குளித்து விட்டு சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

🕉🌺🙏ஓம் நமசிவாய 🙏🌺🕉
🕉🌺🙏சிவாய நம ஓம் 🙏🌺🕉
🕉🌺🙏திருச்சிற்றம்பலம்🙏🌺🕉

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...