*🙏 இன்றைய ஆலய தரிசனம் 🙏*
*அருள்மிகு சற்குணாம்பாள், நல்லநாயகி உடனுறை பாசுபதேஸ்வரர் திருக்கோவில்*
திருவேட்களம்,
அண்ணாமலை நகர்,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது தலம்.
சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம், இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜூனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அம்மனுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.
ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.
திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது, "வேட்கள நன்நகர்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ என்றும், அம்பிகையை பெண்ணின் நல்லால் என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.
No comments:
Post a Comment