*மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்:*
1. இது 51 சக்தி பீடங்களில் ஒன்று அதாவது பார்வதி தேவியின் *வலது கை விழுந்த இடம்.* இதுவே *தண்டகாருண்யம்* ஆகும்.
2. இக்கோவிலை தொழுதால் பிரம்மஹத்தி தோஷம் அகலும். இங்குதான் *பம்பை* என்ற இசைக்கருவி பிறந்ததாக கூறுவர்.
3. ஆதிகாலத்திலிருந்து இங்கு *மிகப் பெரிய புற்று* ஒன்று உள்ளது.இதை வழிபாடு செய்தால் *நாகதோஷம், ராகு கேது தோஷம் நீங்கி* திருமணம் நடக்கும்.
4. *தல வரலாறு:* முன்பொரு காலத்தில் *ஈசனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன*. ஒருமுறை பார்வதிதேவி ஈசன் என நினைத்து பிரம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினார். இதனால் *பிரம்மாவுக்கு அகந்தை ஏற்பட்டது.* இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிய சொன்னார். சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் பிரம்ம கபாலம் அவர் கையில் கையில் ஒட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது. இதனால் கடும் கோபமுற்ற சரஸ்வதி தேவி என் கணவனின் அகோர நிலைக்கு காரணமான நீயும் அகோர உருவுடன் திரிவாய் என சாபமிட்டார். இதனால் பார்வதி *அங்காளியாக உருவெடுத்து சுடு காட்டில் அலைந்து திரிந்தார் .* பின்பு தேவி திருவண்ணாமலைக்குச் சென்று *பிரம்ம தீர்த்தத்தில்* நீராடி சுய உருவை அடைந்து ஒரு *மூதாட்டி உருப்பெற்று மேல்மலையனூர் ஊரில் வந்து தங்கினார்.*
*சிவபெருமான் சனியின் பிடியில் சிக்கி இருந்ததால்* உணவுக்காக ஊர்ஊராக சென்று பிச்சை எடுத்தார். பின் பிணங்களை சாப்பிட்டு *பிச்சாண்டி* என்று பெயர் பெற்றார்.
சிவபெருமானுக்கு இங்குள்ள அம்பிகை அன்னபூரணியாக மாறி சுவைமிகுந்த உணவை அளித்தார். உணவை உண்ட பிரம்ம கபாலம் சுவையால் மகிழ்ந்தது. அன்னை சிறிது உணவை கீழே சிந்தினாள். *பிரம்ம கபாலம் அந்த உணவை எடுக்க சிவனின் கையில் இருந்து கீழ் நோக்கி சென்று* உணவை சாப்பிட்டது அதற்குள் அன்னை *காளியாக மாறி பிரம்ம கபாலத்தை உடைத்தார்.* இதனால் *சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.*
Monday, June 7, 2021
மேல்மலையனூர் அங்காளம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..
அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....
-
கடலூர் மாவட்டம் ஆற்று திருவிழா அன்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், சிறுகிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொருட்க...
-
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,திருக்கண்டேஸ்வரம் சிவன்கோயில் Thirukandeswaram sivan temple கடலூர்-பண்ருட்டி சாலையில் பத்தாவத...
-
பிறப்பு முதல் இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள் (3 sivan temples secrets) எங்கே இருக்கு தெரியுமா ? உலகுக்கெல்லாம் ஒப...
No comments:
Post a Comment