Saturday, July 10, 2021

தில்லை காளி

தில்லை காளி திருக்கோயில்  
சிதம்பரம் கடலூர்

நான்குமுக அம்மன் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளியால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள்.

இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில் பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனி சிலை வடிக்கப்பட்டுள்ளது.

சிவனுக்கும் சக்திக்கும் இடையே தங்களில் யார் சக்திமிக்கவர் என்று விவாதம் ஏற்பட்டது பார்வதிதேவி, சக்தி தான் பெரிது என்று கோபத்துடன் வாதிட்டாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த, அவளை உக்கிரகாளியாக மாறும்படி சிவன் சபித்து விட்டார். மனம் வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன், அரக்கர்களால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ காளியாக இருந்து அவர்களை அழிக்க வேண்டும். பின்பு, தில்லையில் (சிதம்பரம்) என்னை நோக்கி தவம் இரு. நான் வியாக்ரபாதர், Mபதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய், என்றார். அவ்வாறே அவள் செய்தாள். அவள் கோப சக்தியாக, தில்லைக்காளி என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை எல்லைக்காளி என்றும் சொல்வர். சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் அருள்பாலிக்கும் தில்லைக்காளியையும் தரிசிக்கிறார்கள்.

#சிறப்பம்சங்கள்

பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் வீணை வித்யாம்பிகை என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தக்ஷண ரூபிணி என்ற பெயரிலும் அருளுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் இவர்களுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

ஓம் சக்தி
Temples360.in

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

அர்ச்சுனேஸ்வரர்


அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் - கடத்தூர் - கோயம்புத்தூர்

மூலவர்:- அர்ச்சுனேஸ்வரர் (மருதவனஈஸ்வரர், திருமருதுடையூர், மருதீசர்)
அம்பாள் :- கோமதி அம்மன்

தல சிறப்பு:

இத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்:
கன்னி மூலையில் தல விநாயகரான வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதியும், வாயுமூலையில் சுப்பிரமணியருக்கும் அதனருகில் சண்டிகேசுவரருக்கும் தனி சன்னதியும் ஈசான்ய மூலையில் சண்டிகேசுவரருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

சிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிவ ன் கருவறையின் தெற்கு பக்கம் பளிங்கு கல்லால் ஆன தட்சிணாமூர்த்தியும், மேற்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் மகா விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சன்னதி முற்றத்தில் கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது.

தலபெருமை:

கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம். அத்துடன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கம். அமராவதி ஆறு மேற்கிலிருந்து வடக்கு பாகமாக வலம் வந்து கிழக்கு நோக்கி செல்கிறது. சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமராவதி நதிக்கரையில் மொத்தம் 11 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இதில் கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியைக் கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும். சிவன் கோயிலிலிருந்து அம்மன் கோயில் வலது பாகம் தனியாக பிரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டு தனித்தனி ஆலயங்களாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன் இரண்டுக்கும் தனித்தனி முற்றங்கள், தனித்தனி வாசல்கள், தனித்தனி மடப்பள்ளிகள் என எல்லாமே தனித்தனியாக அமைக்கப் பட்டுள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகில் இடது பக்கம் அரளிச்செடியைப்பற்றி பெரிய புற்று லிங்கம் வளர்ந்து வருகிறது.

சைவ வைணவ பேதமின்றி கருவறையின் மேற்கு பக்கம் விஷ்ணுவிற்கும் ஒரு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. கடத்தூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் முக்கியமாக பஞ்ச பாண்டவர்கள் தங்களது வன வாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்ததாகவும், அவர்களைக் கண்டு பிடிக்க இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச்சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும் அதனாலேயே இந்த இடம் காரைத் தொழுவு என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கடத்தூர் ஆனது என கூறுகிறார்கள்.

தல வரலாறு:
விக்கிரமசோழன் என்பவனது காலத்தில் காரத்தொழுவு எனும் கிராமத்திலிருந்து கொங்கேல சங்கு எனும் கிராமத்திற்கு நாள்தோறும் 60 குடம் பால் சென்று கொண்டிருந்தது. இதில் ஒவ்வொருநாளும் ஒரு குடம் பால் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிந்திக்கொண் டிருந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து ரத்த ஆறாக ஓடியது. காரணம் அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் வெட்டப்பட்டிருந்தது தான்.இந்த வெட்டப்பட்ட பகுதியை நாம் இன்றும் கூட காணலாம். உடனே தான் இந்த சுயம்பு  லிங்கத்தினை வழிபடும் வழக்கம் ஏற்பட்டு, பத்தாம் நூற்றாண்டில் விக்கிரமசோழ தேவன் காலத்தில் கோயில்கட்டப்பட்டது.

சிறப்பம்சம்:
இத்தல இறைவன் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும்.

விஞ்ஞானம் அடிப்படையில்: சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அருள்மிகு கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்
108 திவ்யதேசங்கள் - பதிவு 24 

தெற்கு நோக்கி அமைந்துள்ள இரண்டாவது திருத்தலம்!!! இங்கு தான் குழந்தை வடிவில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்!!!  

அருள்மிகு கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்:-

திருச்சிறுபுலியூர்

மூலவர்: சலசயனப்பெருமாள், அருள் மாகடல்

தாயார்: திருமாமகள்நாச்சியார், தயாநாயகி

உற்சவர்: கிருபா சமுத்திரப் பெருமாள்

கோலம்: சயனத் திருக்கோலம்

திசை: தெற்கு

விமானம்: நந்தவர்தன விமானம்

துர்த்தம்: மானச புட்கரணி, அனந்தஸரஸ்

ஆகமம்/பூஜை: பாஞ்சராத்ரம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: சலசயனம்,  பாலவியாக்ரபுரம்

மாவட்டம்: திருவாரூர்

மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

 திருச்சிறுபுலியூர் :-

108 திவ்யதேசங்களில் தெற்கு நோக்கி அமைந்துள்ள திருத்தலங்கள் இரண்டே இரண்டுதான். முதல் தலமானது ஸ்ரீரங்கம். மற்றொன்று "திருச்சிறுபுலியூர்" ஆகும். 

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப்பெரிய வடிவில் சயனத்தில் இருப்பார். ஆனால், இங்கு பாலகனாக சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிப்பது  சிறப்பு.  

இங்கு நடராஜப்பெருமானை வணங்கும் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலத்தில் முனிவர்  "கன்வருக்கு" பெருமாள் அனுகிரகம் புரிந்துள்ளார்.  

இங்கு ஆதிசேஷனுக்கும் தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் இங்கு மட்டும்தான் குழந்தை வடிவில் சயனநிலையில் உள்ளார்.

ஒருசமயம் வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் இவரை "சிறுபுலியூர்" சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். 

இவரும் அங்கு சென்று பெருமாளை வேண்ட பெருமாளும் இவருக்கு முக்தியை கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகிலே வைத்துக்கொண்டார். 

இந்த நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும்(ஆதிசேஷன்), வியாக்ரபாதர் இருவரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

 மங்களாசாசனம் :-

"கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா

பெருமால் வரையுருவர பிறவுருவர

நினதுருவா திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்

சலசயனத்து அருமா கடலமுதே உனது அடியே

சரணாமே!".

                 "திருமங்கையாழ்வார்.

ஶ்ரீ தயாநாயகித் தாயார் ஸமேத ஶ்ரீ க்ருபாஸமுத்ரப் பெருமாள் ~ திருச்சிறுபுலியூர்.

கருமா முகிலுருவா ! கனலுருவா ! புனலுருவா !
பெருமால் வரையுருவா ! பிறவுருவா ! நினதுருவா !
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து,
அருமாகடலமுதே ! உனது அடியே சரணாமே.
~ பெரிய திருமொழி. 7.9.9

 பிரார்த்தனை:-

இங்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.  மாங்கல்யதோஷம், காலசர்பதோஷம், செவ்வாய்தோஷம், திருமணத்தடை, பாலாரிஷ்டதோஷம், நவக்கிரக பரிகாரம் செய்ய இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

தீராதநோய், மனநலபாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வதால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

தரிசனம் பெற்றவர்கள் :-

இந்த பெருமாளின் திருமேனியானது புஜங்க சயனம். தெற்கே இவரது திருமுக மண்டலம் உள்ளது. இவரை புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர்" என அழைக்கப்படுகிறது. 

இங்கு வியாசர், ஆதிசேஷன், வியாக்ரபாதர் ஆகியோர் வந்து தரிசனம் செய்துள்ளனர்.

 தலவரலாறு:-

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகைமை நீங்க ஆதிசேஷன் இத்தலத்திற்கு வந்து பெருமாளை நோக்கி தவமிருந்தார். 

இவருடைய தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம் வளர்பிறையில் ஏகாதசியன்று ஆதிசேஷனுக்குக் காட்சி கொடுத்தார். 

இந்த பெருமாள் அத்துடன் ஆதிசேஷனை அனந்தசயனமாக மாற்றிக்கொண்டு, குழந்தை வடிவில் சயனக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

 வழித்தடம் :-

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.  கொல்லுமாங்குடியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.  கொல்லுமாங்குடி இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு சலசயன பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு திருமாமகள் நாச்சியார் திருவடிகளே சரணம்.

 நாளைய பதிவில் :-

அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில் - திருத்தலைசங்க நாண்மதியம் (தலைசங்காடு) திவ்யதேசத்தை தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நமஹ"

#இராமானுசநூற்றந்தாதி
#எம்பெருமானார்
#உடையவர்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் இராமானுசா என்னும் நாமம்

29. கூட்டும்விதியென்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னைத் * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

Thiruvirunjipuram


திருவிரிஞ்சிபுரம் 
#மார்க்கபந்தீஸ்வரர் கோவில்..

ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம்.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள் திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.

#தல சிறப்பு..

மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது. 

இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், 
மார்க்க சகாயர், வழித்துணைநாதர். 

இறைவி    : மரகதாம்பிகை. 

தல மரம்   : பனை மரம் 

தீர்த்தம்     : பாலாறு, சிம்மதீர்த்தம்

இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

#பிரம்ம உபதேச தலம்..

சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம். 

#தல பெருமைகள்..

இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை. 

இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 

மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார். 

அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் “பார் வேட்டை” என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

#அழகிய தோற்றம்..

இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்து பைரவர்கள் பற்றி தனியே ஒரு பதிவு வெளியிடப்படும். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

#தல மரம்..

இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.   

மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள். 

அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர். 

நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. 

மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம். 

#போக்குவரத்து வசதி..

தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். 

பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். 
பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன...

Temples360.in

*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

கள்ளப்பிரான் கோவில்


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற வைகுண்டநாதர் கோவில்  ஸ்ரீவைகுண்டம்...

 ஸ்ரீவைகுண்டம்
இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது

பெயர்: திருவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்..

மூலவர்: வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)..

உற்சவர்: கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்

தாயார்: வைகுண்டவல்லி, பூதேவி

உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி

தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி

கோவில் அமைப்பு...

9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.

உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.

தல புராணம்...

பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.

பெயர்க்காரணம்....

உற்சவர் சோரநாதன், கள்ளபிரான் என அழைக்கப்படுவதற்கும் காரணம் தரும் மரபுவழிச் செய்தியும் உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்துவந்த காலதூஷகன் என்ற திருடன், வைகுண்டநாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான். ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான். காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார். அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார். திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பு....

இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.

திருவிழாக்கள்...

இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.

அமைவிடம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது...
*For More Spiritual Content*

*Visit our YouTube Channel*
https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA

*Visit our Instagram Page*
https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link

*visit our Facebook page*
https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/

*Visit our Blogger*
http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html

பசுபதேஸ்வரர்


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*தினம் ஒரு சிவ ஆலயம்*

*அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாமூர்,* *கடலு}ர்*

இங்கே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். சைவ சமயத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈனின் அருளும் கிடைக்கும். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. ஊரைச்சுற்றிலும் கழனிகள் அதிகம். நாவுக்கரசர் பாடிய ஒரு பாடல், குழந்தைகளும் கற்றுக்கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈன் எந்தை இணையடி நீழலே.

நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கி.பி.7ம் நு}ற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நு}ற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பர் சுவாமிகள் பரம்பரையினர் பக்கத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பர் சுவாமிகள் பங்குனிமாதம் ரோகினியில் அவதரித்ததாகக் கொண்டு அன்றைய நாளிலும், அவர் இறைவனடி கூடிய சித்திரைச் சதயத் திருநாளிலும் அப்பருக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வருகின்றனர். தவிர விசேஷ நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.

சிறப்பம்சங்கள் :
★ சிவனது தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம்.


Temples360.in


*For More Spiritual Content*


*Visit our YouTube Channel*

https://youtube.com/channel/UCzyuoCjvB15KPJjIL9HGNHA


*Visit our Instagram Page*

https://www.instagram.com/p/CQX0u7Nhyxh/?utm_medium=copy_link


*visit our Facebook page*

https://www.facebook.com/100104942230621/posts/128135026094279/


*Visit our Blogger*

http://temples360dotin.blogspot.com/2021/06/namakal-narasimmar.html


யுகங்கள் கடந்த திருக்கண்டேஸ்வரம்

*திருக்கண்டீஸ்வரம்-நெல்லிக்குப்பம் - கடலூர் மாவட்டம்*

திருக்கண்டீஸ்வரம் என்னும் ஒரு திருத்தலானது பண்ருட்டி கடலூர் சாலையில்  நெல்லிக்குப்பம் நகருக்கு  ஒரு இரண்டு கிலோமீட்டருக்கு  முன்னால் அமைந்துள்ளது. *ஶ்ரீ ஹஸ்த தாளாம்பிகை சமேத ஶ்ரீ நடன பாதேஸ்வரர்*  என்னும்  இந்த சிவத்தலம்  மிக மிகப் புராதனமானது. இந்தக்கோவிலுக்கு தல புராணம்  என்று  ஒன்று இல்லாவிட்டாலும், இக்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகள்  யுகங்களைக் கடந்தவை .

இந்த  ஊர் ,வழக்கத்தில்   திருக்கண்டேஸ்வரம், என்றும்  மேலும்  திருக்கண்ணீஸ்வரம் திருவடுகூர்,  திருமுண்டீஸ்வரம் என்னும் பல  பெயர்களால்  அழைக்கப்படுகிறது. "கண்ணி"என்றால்  "வலை "  என்றும் "சுரம்" என்றால்  காடு என்றும்  பொருள் படும். முற்காலத்தில்  இப்பகுதி  உள்ளே நுழைந்தால் வெளியே செல்லமுடியாத  அளவு ஒரு பெரும் காடாக  இருந்ததை  இப்பெயர்  குறிப்பிடுகிறது. சிவபெருமானின்  துவாரபாலகர்களான  "திண்டி", "முண்டி" இருவருள்   முண்டி வழிபட்ட தலமாகும் இது. 

சிவபெருமான் "நடன பாதேஸ்வரர்", " ஆடும் அடிகள்", "" மன்றில் குனிக்கும் பெருமான் ""
,"பழி இல்  புகழாளர் " என்னும் பெயர்களாலும், அம்மை 'ஹஸ்ததாளாம்பிகை" ,""கைத்  தாளமிட்ட அம்மை ", "காணார்குழலி" ,"தளரும் கொடியிடையாள் " என்னும்  பெயர்களாலும்  அழைக்கப்படுகிறார். 

ஆகையால்   சுவாமி , அம்மையை "ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடன பாதேசுவரர் "என்று  வட மொழியிலும்,  "தளரும் கொடியாள் உடனுறை  ஆடும் அடிகள் ""   என்று  நற்றமிழிலும்  அழைக்கலாம். 

கோவில்  சற்றே  சிறிய கோவில்தான்.  கோவிலுக்கு ராஜ கோபுரம் போன்ற  அமைப்புகள் கிடையாது. . சுவாமி  இங்கு  மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு  நோக்கியும் தனித்தனியாக  அமர்ந்துள்ளனர்.ஆனால்  அந்த சந்நிதிகள் நேர்கோட்டில்  இல்லை.  இப்படி  சுவாமியும் அம்பாளும்  ஒருவரை ஒருவர்  பார்த்தபடி இருப்பது   *அபிமுகம்* "என்னும்   அபூர்வ அமைப்பாகும்.  இந்த அமைப்புக்கு  அனுக்கிரக  சக்தி மிக அதிகமாகும்.  அம்மன் சந்நிதிக்கு எதிரே  ஒரு  புஷ்காரிணி  அமைந்துள்ளது. 

இந்த திருக்கோவிலில்  மற்ற கோவில்களில் இல்லாத  சில  அபூர்வ  அமைப்புக்கள் உள்ளன. 

முதலில்  சுவாமி  சுயம்பு  மூர்த்தியாவார். சுவாமி  கிருத யுகத்திலிருந்தே  இங்கு  அமர்ந்துள்ளார்.  அவ்வளவு  பழைமையான லிங்கம்  இந்த ஆடும் அடிகள். 

சுவாமி விமானத்தில்  மேற்கு பார்த்தவாறே  யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார்.  சிவன் கோவிலில்  ஏன் நரசிம்மர்  இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனிக்கதை  உள்ளது. அது கடைசியில்  வருகிறது. அதே விமானத்தில்  கிழக்கு  பார்த்து இந்திரன்  அமர்ந்துள்ளான். கௌதம முனிவரால்  சபிக்கப்பட்ட  இந்திரன் தன உடலில்  இருந்த  ஆயிரம் கண்கள் மறைய  இறைவனை  பிரார்த்தித்து  நலம்பெற்ற தலம் இது. பிறகு இழந்த  தன் இந்திரா பதவியையும்  பெற்றுக்கொண்டான். 

இந்தக்கோவிலில்  உள்ள  துர்கை  ""சாந்த  துர்கை "" ஆகும். துர்கையில்  பாதங்களின் கீழ்  மகிஷம் கிடையாது. 

 கன்னி மூலையில்  விநாயகர்  ஒரு   கையில்  சிவலிங்கத்துடனும்  மறுகையில்  ஒரு நீலோத்பல  மலருடனும்  அமர்ந்துள்ளார். இங்கு விநாயகர் "மூலாதார கணபதி"யாக அமர்ந்துள்ளார். 

தக்ஷ யாகத்தில்  வீரபத்திரரால்  பற்கள்  உடை பட்ட  சூரிய பகவான்  இத்தலத்தில்   சுவாமியை  வழிபட்டு  தன் அழகிய  பற்களை  திரும்பப்பெற்றான். 

இங்கு பைரவர் ஆறு கரங்களுடன்  இருக்கிறார். இது போன்ற அமைப்பு  காசியில்  உள்ளது. 

இது  மயன் , அருச்சுனன்  வழிபட்ட  தலம். மற்றும் மாந்தாதா மன்னர் வழிபட்ட தலம். 

 ஒரு காலத்தில்  ஐந்து தலைகள்  கொண்டிருந்த  பிரம்மன்  ஆணவத்தால்  இறைவனை  அவமதிக்க இறைவன்  அவனது  ஒரு தலையை  கொய்த  போது , பிரம்மன்  மயங்கி  விழுந்து  பிறகு  தன்  உணர்வு வரப்பெற்று  இறைவனை வணங்கி   தனது  சிருஷ்டி  தொழிலை  மீண்டும்  துவங்கிய  இடம்  இது. 

கோவலன் , மாதவியின்  மகளான  மணிமேகலை ,ஒரு அமுத சுரபியின் உதவியால்  "காய சண்டிகை " என்னும் பெண்ணின்   பசி தீர்த்த  கதையை நாம் அறிவோம். அந்த  அமுத சுரபியை    மணிமேகலைக்கு  வழங்கியவர்  விருச்சிக முனிவர் ஆவார். அவர் வாழ்ந்த  தலம்,இத்திருத்தலம்.  

இங்கு சுவாமி அகத்தியருக்கு தனது  நடன கோலத்தை  காட்டியருளியதால் அவர் நடன பாத ஈஸ்வரர் ஆகிறார். அச்சமயம்  அம்பிகை   கைத்தளமிட்டு  இறைவனின் நடனத்தை  ரசித்ததால்  "கைத்தாளமிட்ட அம்மை "என்னும்  பெயர் சூட்டப்பட்டது.

அந்தக்காலத்தில் அம்பிகையின் சந்நிதியில்  பெண்கள் மட்டுமே   வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.  மேலும்  பரிசாரகம்,  மே ள வாத்தியங்கள் இசைப்பது, மற்ற குற்றேவல்கள்  புரிவது அனைத்தும் பெண்களே. ஆனால் 1905  க்குப்பின்  வழிபாட்டு   சமஉரிமையை  நிலை நாட்ட சிலர் சட்டத்தின் துணையை நாட,தற்போது  ஆண்களும்  வழிபாடு  செய்ய ஆரம்பித்துள்ளனர்.  தற்போது குருக்களாக  இருக்கும்  ஸ்ரீ சேனாதிபதி  குருக்களின்  கொள்ளுத்தாத்தா  காலம் வரை  அவரது கொள்ளுப்பாட்டி தான்  பூஜைகள் செய்வாராம். 

இந்தக்கோவில்  முதல் பராந்தக சோழனால்  கட்டப்பட்ட கோவில். பிறகு ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன், இரண்டாம் ராஜராஜன்  போன்ற  தமிழ் மன்னர்களால்  திருப்பணிகள்  செய்யப்பட்டுள்ளன.  மேலும் சாளுக்கிய  பொறையன் ஆகவமல்லன், சாளுவ நரசிம்மன் ,ஆந்திர தளபதி  நரசிம்மய்யா  போன்றவர்களாலும் திருப்பணிகள்  செய்யப்பட்ட  கோவில்  

மனிதர்கள்  வாழ்க்கையில்  பல்வேறு  துன்பங்களுக்கு  ஆளாகும்போது, மீள முடியாத  சில சந்தர்ப்பங்களில்  முடிவில்  அவர்கள்  நாடுவது  இறைவனை. அப்படி இந்தக்கோவிலுக்கு வருவதால் என்னென்ன வரங்களை  இறைவன் வழங்குகிறார் என்று பார்ப்போம். 

பிரம்மனின் மயக்கத்தை  தீர்த்ததால், *கோமா* நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் மீண்டு வர  சுவாமி அருள் புரிகிறார். இதற்கு சாட்சியாக  பலர் உள்ளனர். 

திருமணத்தடை  நீங்கும். சந்தான பாக்கியம்  உண்டாகும். வாராக்கடன்  வந்து சேரும். வழக்குகளில்  வெற்றி கிட்டும். எலும்பு, மஜ்ஜை  பிரச்சினைகள்  தீரும். 

இனி யோக நரசிம்மர்  இங்கு வந்த  கதையை பார்ப்போம். 

நரசிம்ம அவதாரம் எடுத்து  மஹாவிஷ்ணு  ஹிரண்யக சிபுவை  அழித்து  தனது  கடும் சீற்றம்  குறையாமல் நிற்க ,அவர் அருகே செல்ல  மகாலட்சுமியே  அஞ்சி நிற்க , சிறுவன் பிரஹலாதன் அவர் அருகே சென்று  சாந்தமாகுமாறு  பிரார்த்தனை செய்கிறான்.  தனது பக்தனுக்கு  இரங்கி   பெருமாளும்  சீற்றம் குறைத்து  பிரகலாதனுக்கு  அருள் வழங்குகிறார். அப்போது   பிரஹலாதன்   நரசிம்மரிடம்  ஒரு கேள்வியை  முன்  வைக்கிறான்  " சுவாமி , என் தந்தை  "ஹரி எங்கே  ஹரி எங்கே "என்று கேட்கும் போது  நான் நீங்கள்  இருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்தேன்.  அவரும்  அந்த  தூணை  பிளக்க   நீங்களும்  அந்த தூணிலிருந்து  வெளிப்பட்டு என்தந்தையைக் கொன்றீர்கள். "என்ன   இருந்தாலும்  ஹிரண்யகசிபு  நம் பக்தன்  பிரகலாதனின் 
தந்தை தானே  என்று  நீங்கள்   என் தந்தைக்கு கருணை  காட்டவில்லை. இந்த செயலின் மூலம்  பெற்ற தந்தையைக்  கொலை செய்ய உங்களைத் தூண்டி விட்டதால் ,  பித்ருஹத்தி பாவத்தை நான்  சுமக்க வேண்டியதாகி விட்டதே ""என்று 
கண்ணீர் விட , நரசிம்மர்  அவனைத்  தேற்றுகிறார். "கவலைப்படாதே  ப்ரஹ்லாதா.உன் பாவத்தை  நான் சுமக்கிறேன் "என்று சொல்லி  திருக்கண்டீசுரத்து   சிவனை வணங்கி  யோகத்தில் ஆழ்ந்து விடுகிறார். இந்த தலம் அப்படி நரசிம்மராலேயே  கிருதயுகத்தில்  வழிபடப்பட்ட  தலம் என்றால் இதன்  பெருமையை  என்னவென்று  சொல்வது, இதன் காரணமாகத்தான்  யோக நரசிம்மர்  கோவில்  விமானத்தில்  வீற்றிருக்கிறார். 

 மேலும் அவர்  ப்ரஹ்லாதனுக்கு  ஒரு வரம் அளிக்கிறார்  "இனிமேல்  நாம் உன் வம்சத்தில்  யாரையும்  கொல்ல மாட்டேன் ""  என்று வாக்குறுதியும்  அளிக்கிறார். கதை  இத்துடன்  முடியவில்லை. 

ப்ரஹ்லாதனுக்குப்பின் அவனது மகன் விரோசனனும்  அதன் பின் அவன் மகன் மஹாபலியும்  ஆட்சி செய்கிறார்கள். அப்போது மஹாபலி  இந்திர பதவி அடைய  ஒரு யாகம் செய்கிறான். அந்த யாகத்தை  தடுக்க  மஹாவிஷ்ணு  சிறுவன்  வாமனராக
வந்து மூன்றடி நிலத்தை  தானமாக  கேட்கிறார். வந்திருப்பது  மஹாவிஷ்ணு என்று தெரிந்தும் , தனது  குலகுரு  சுக்ராச்சாரியார்  தடுத்தும் கேட்காமல்   மஹாபலி  வாமனாருக்கு  மூன்றடி  நிலம் தானமாக  தர ஒத்துக்கொள்கிறான். வாமன்ராக வந்த  விஷ்ணு  விசுவ ரூபம் எடுத்து இரண்டு அடிகளில்   எல்லா  உலகங்களையும் அளந்து  மூன்றாவது அடிக்கு   இடம் கேட்க , மஹாபலி தன் தலையை தருகிறான். விஷ்ணு  அவன் தலை மேல் கால் வைக்கிறார். அப்போது  பிரஹலாதன்   மறுபடி அவர்  முன் தோன்றி  "சுவாமி  நீங்கள்  செய்தது ஏமாற்று வேலை அல்லவா. வந்த  கோலம் ஒன்று  எடுத்த கோலம் ஒன்று என்று  நீங்கள்  செய்தது  சரி அல்ல. இது  பாவம் அல்லவா.  இனிமேல் 
 இந்த பூவுலகத்தில்  யாரும் உங்கள் செயலால் பயந்து தானம் செய்யவே முன் வர மாட்டார்கள் அல்லவா. மேலும் தானம்  வாங்கும் பிராம்மணர்கள்  தானம் கொடுப்பவர்களுக்கு  ஏதேனும்  திரும்ப  தர வேண்டும் அல்லவா. அப்படி  நீங்கள்  என்  பெயரனுக்கு  என்னே செய்தீர்கள் "என்று  கேட்கிறான். அப்போது வாமனர் ப்ரஹ்லாதனிடம் "  உன் தந்தை  பிரம்மனிடம்  சாகா வரம் கேட்டான். அவனுக்கு அது  கிடைக்கவில்லை. நீ என் பக்தன் ஆனாலும்  உனக்கும்  நான் அந்த வரம்  தரவில்லை. உன் மகனுக்கும்  அந்த  வரம் தரவில்லை. ஆனால்  தன்னையே  எனக்கு தானமாக  தந்த  மஹாபலிக்கு நான் விதி விலக்காக சிரஞ்சீவித்துவம் வழங்குகிறேன் "என்று  ஆசி வழங்குகிறார். ஆனால்  ஏமாற்று  வேலை செய்த பாவத்தை  போக்க  இத்தலத்து  இறைவனை  வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. 

இவ்வளவு பெருமை மிக்க இந்த  திருத்தலத்தை   இனிமேலும் பார்க்காமல்  இருக்கலாமா . உடனே கிளம்புங்கள்...

View about temple
https://youtu.be/k_421sdGsfc


Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...