Monday, July 25, 2022

பெண்களின் வளையல் திருவிழா ஆடி பூரம்

#ஆடிபூரம் (ஆடி 16ஆம் தேதி) ஆகஸ்ட் 1, 2022ல் திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த திருவாடிப்பூரம் விழாவானது கொண்டாடப்படுகிறது ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு  .பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க..

 
#அம்மனுக்குவளைகாப்பு
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது, அந்த அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதாக நினைத்து, அதனால் அம்மன் நமக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று பெண்கள் வழிபடுவது சிறப்பு. அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது, அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை. ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை கலந்துகொண்டோருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் ஆலயங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் என்பது உண்மைதானே.

 ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வளையல் வியாபாரி சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...