விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: 5
***************************************
ஏன் விநாயகப்பெருமானுக்கு வழிபாட்டில் முதன்மையும் முக்கியத்துவம் தருகிறோம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்' என்றும் `மூத்த பிள்ளையார்' என்றும் அறியப்படுகின்றது.
'ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.
🌹பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்.
ஓம் என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர். அவரது திருமேனி யை ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர்.
அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை "முற்றறிவு'' அதாவது `ஞான சக்தி' என்றும், இடது திருவடியை "முற்றுத் தொழில்'' அதாவது `கிரியாசக்தி' என்றும் உணர்த்தப்படுகின்றது.
🌹அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ள வோ, செயலாற்றவோ முடியாது.
எல்லா பொருட்களையும் ஆகாயம் தன்னு ள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்ததொரு பூதம்.
ஆகாயம் போ லவே சகலவற்றையும் உள்ளடக்கியதாக வே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது.
🌹படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களை யும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற் றுகின்றார் எனப்படுகின்றது.
ஐந்து கரு மங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு `ஐங்கரன்' என்ற நாமம் விளங் குகின்றது. அவரை `பஞ்ச கிருத்திகள்' என்றும் கூறுவர்.
🌹அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.
வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு "பாச ஞானத்தையும்` இடது பக்கமுள்ள கொம்பு "பதிஞானத்தையும்` உணர்த்துவதாக உள்ளன.
விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.
🌹அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் `குண்டலினி சக்தியின்' வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரப ஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகி ன்றது.
அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதா னது, உலகிற்கு நிமித்த காரணர் அவர் தாம் என்பதையும் உணர்த்துகின்றது.
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெ னவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணு டைய பெருமை சிவனுக்கே உரியது.
🌹ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்கு மிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும், விநாயகருக்கு `சித்தி', `புத்தி' என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்க ளில் பேசப்படுகின்றது.
🌹விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோத கம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்ப டுகின்றது. துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார்.
🌹செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திரு ப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக் கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலிய னவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.
🌹உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில்முதலாவதாக பிள்ளை யார் சுழி எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர்.
பிள்ளையார் சுழி `ள' என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும். இதற்கு ஒரு தத்துவம் உண்டு, புஜ்ஜியமன வட்டத் தை `0' பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை நாதம் என்றும் கொள்கின்றனர்.
🌹எனவே பிள்ளையார் சுழியை `நாத பிந்து' என்பர். பிள்ளையாருடன் சிவசக்தி யின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.
எந்த ஒரு கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்ன ரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களி டையை காலாதிகாலமாக நிலவிவருகின் றது.
அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய் கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்க ளின் நம்பிக்கை .
விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
No comments:
Post a Comment