*#விநாயகர்_சதுர்த்தி_விரதம் #இருப்பது_எப்படி?*
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளைத் தான் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இந்த விநாயகர் சதுர்த்தி விரதம்.
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட்டு தலைவாழை இலை ஒன்றைப் விரித்து வையுங்கள். இலையின் நுனி, வடக்கு பக்கம் பார்த்து இருக்கட்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். களிமண்ணாஅல் செய்த பிள்ளையார் தான் விசேஷம். அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றை பிள்ளையாருக்கு சாத்துங்கள். பின், சந்தனம், குங்குமம் வைத்து, விளக்கேற்றி, ஊதுபத்தியைக் கமழச் செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரிந்த விநாயகர் துதிகளைச் சொன்னபடியே வசதிக்கு ஏற்ற நிவேதனப் பலகாரங்களைச் செய்யுங்கள். பலகாரங்கள் தவிர, அவல், பொரி, கடலை, தேங்காய், விளாம்பழம், நாவற்பழம் போன்றவையும் விநாயகருக்கு விருப்பமானவை தான். நல்ல நேரத்தில் பிள்ளையாருக்கு தூப, தீபம் காட்டி, தெரிந்த துதிகளைச் சொல்லி பூஜித்து நிவேதனம் செய்யுங்கள்.
*அன்று இரவு அவசியம் மறக்காமல் வானத்தில் சந்திரனைப் பாருங்கள். சதுர்த்தி நாட்களில் நிலவைப் பார்ப்பது கூடாது என்பார்கள். ஆனால் பிள்ளையார் சதுர்த்தியன்று மட்டும் அதில் விதிவிலக்கு உண்டு. அன்றைய தினம் சந்திரனைப் பார்த்தால் தான் விநாயகர் வழிபாட்டின் பூரண பலன்கள் கிட்டும் என்கிறது பார்க்கவ புராணம்.* தும்பிக்கையுடையவனை நம்பிக்கையுடன் துதித்தால், அவன், நீங்கள் வேண்டுவன யாவும் கிட்டச் செய்வான்.
No comments:
Post a Comment