Sunday, September 25, 2022

வெவ்வேறு வடிவில் 4 நந்திகள்.. சிறு குழியுடன் லிங்கம்..

வெவ்வேறு வடிவில் 4 நந்திகள்.. சிறு குழியுடன் லிங்கம்..!!
                அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

🌻 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🌻 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் என்னும் ஊரில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌻 கோயம்புத்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் ஒண்டிப்புதூர் என்னும் ஊர் உள்ளது. ஒண்டிப்புதூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒண்டிப்புதூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌻 இத்தல நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. லிங்கத்தின் மையத்தில் சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது.


🌻 மூலவரின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில் தண்டத்துடன் ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார்.

🌻 இத்தலத்தில் மூலவர், இறைவி, ஞான தண்டாயுதபாணி ஆகியோர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளனர்.

🌻 நீலகண்டேஸ்வரர் மீது மாலை பொழுதில் சூரிய கதிர்கள் பட்டு சுவாமியின் திருமேனி ஒளிர்வது சிறப்பம்சமாகும்.

🌻 இத்தலத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

🌻 இத்தலத்தில் நவகிரகங்கள் தனிச்சன்னதியில் அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள 4 நந்திகளும் வௌ;வேறான வடிவமைப்பில் காட்சியளிக்கின்றன.


🌻 மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் இங்கு உள்ளது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு ஆகியவற்றின் மூலமாக இவ்வூரின் பெருமையை அறிய முடிகிறது.

🌻 இத்தலத்தில் பிரம்மதேவன் அமர்ந்த கோலத்திலும், மீனாட்சியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர்.

🌻 தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சௌந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌻 ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்ஹார விழா இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

🌻 தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌻 ராகு தோஷம், மாங்கல்ய தோஷம், திருமணத்தடை ஆகியவை நீங்க இத்தல சுயம்வர பார்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌻 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...