Thursday, September 15, 2022

_சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று._*

🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏

*_சிவபெருமானிடம் இருந்து வாங்கக்கூடாத ஒன்று._* 

நமக்கு என்ன தேவை என்று நம்மை விட நன்றாக அறிந்தவர் சிவபெருமான். ஆயினும், நாம் உருகி கேட்டால், இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குபவரும் சிவபெருமான் தான்.

 இதை தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "வேண்டத்தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று போற்றுகிறார்.

பேதம் போற்றாத பெருங்கருணை கொண்ட சிவபெருமான் தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து வழிபடுவோர் ஈசனிடமிருந்து வாங்க கூடாத ஒன்று "பின்வாங்குதல்". 

ஈசனிடமிருந்து எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருபோதும், எவர் வற்புறுத்தலுக்கும் பயந்து பின்வாங்க கூடாது. 

நான் படும் துயரங்கள் மலை அளவு இருப்பினும், இந்த இடர்களை களைந்து எம்மை ஆனந்தமாக வாழ வைக்க, எம்மை படைத்து காக்கும் சிவபெருமான் இருக்கிறார் என்று தன் மனதுக்கு சொல்லிக் கொடுங்கள். ஈசன் அருளால் உங்கள் மனம் பக்குவப்படும். 

பக்குவப்பட்ட மனம் ஒருபோதும் சிவ வழிபாட்டில் இருந்து பின்வாங்குவதில்லை. 

ஈசனை விட்டு பின்வாங்காதே. பின்வாங்கி வாழ்வை இழக்காதே

 நற்றுணையாவது நமச்சிவாயவே.

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய வாழ்க!

🌷🌷

சொக்கநாதா
சொக்கநாதா

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...