_வெள்ளெருக்கன் பூ ஆன்மிகம்_
ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது எந்த ரூபத்தில், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. நல்ல நேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச தொடங்கிவிடும். அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும் என்றால் அயராத உழைப்பும், விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.
என்னதான் முயற்சிகள் இருந்தாலும், தோல்வி விடாமல் துரத்துகின்றதே இதை சரி செய்ய என்ன செய்வது? என்பதை பற்றி பார்க்காலாம் வாங்க...
கண்ணுக்கு தெரியாமல் நம் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய எதிர்மறை சக்தியிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள இதை செய்தால் போதும். இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த போகும் பொருள் வெள்ளெருக்கன் பூ.
இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும்.
வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவும் வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு சாற்றி வழிபாடு செய்வோம்.
விநாயகருக்கு சாற்றக்கூடிய இந்த வெள்ளெருக்கன் பூவிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரக்கூடிய சக்தி நிறைவாக இருக்கின்றது. இந்த வெள்ளெருக்கன் பூ இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் அண்டாது. கெட்ட சக்திகள் நெருங்காது. வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்தி, கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய தன்மையும் இந்த வெள்ளெருக்கம் பூவுக்கு உள்ளது.
வெள்ளெருக்கன் பூவை முதலில் தண்ணீரில் கழுவி விடுங்கள். அதன் பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து, அந்த தண்ணீரில் இந்த வெள்ளெருக்கன் பூவை போட்டு வீட்டு வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் இதை பத்திரமாக வைத்து விடுங்கள்.
வெள்ளெருக்கன் பூ தண்ணீரில் இருந்தால் வாடாமல் இருக்கும். பூ வாடிய பின்பு டம்ளரில் உள்ள பழைய தண்ணீரையும், பூவையும் மாற்றிவிட்டு மீண்டும் வெள்ளெருக்கன் பூவை புதிய தண்ணீரில் போட்டு வரவேற்பரையில் வைக்கலாம்
வெள்ளெருக்கு பூ கிடைக்கும் போதெல்லாம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய துரதிர்ஷ்டம் தூர சென்று, அதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க தொடங்கும். முடிந்தவர்கள் வீட்டில் வெள்ளெருக்கு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்ய புண்ணியம் பெருகும்.
வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் செய்ய தேவையில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனை பொருட்களை பூசி வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்
No comments:
Post a Comment