Tuesday, September 6, 2022

வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது ஏன்

🤔 வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது ஏன்?

🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌹

ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியுடன் கைலாய மலைசாரலில் உள்ள ஒரு சோலையில் வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார்.

அன்றைய தினம் ஓர் சிவராத்திரி. வில்வ மரத்தின் மீது இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. அந்த இலைகள், மரத்தின் அடியில் வீற்றிருந்த சிவபெருமான் மீதும், பார்வதிதேவி மீதும் விழுந்து கொண்டே இருந்தன.

இதைக்கண்ட பார்வதிதேவிக்கு குரங்கின் மீது கோபம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான், உமையே! குரங்கின் மீது கோபம் கொள்ளாதே! அது நம் இருவரையும் வில்வ இலைகளால் அர்ச்சிக்கிறது என்று கூறி, குரங்கிற்கு நல்லுணர்வு உண்டாகுமாறு அருளினார்.

உடனே மரத்தின் மீது இருந்த குரங்கு கீழே இறங்கி வந்தது. சிவனை வணங்கியது. அப்பனே! நான் பிழை செய்து விட்டேன்.

என்னை மன்னிப்பீராக! என்று வேஎண்டியது.

அதைக்கேட்ட சிவன், உன்னுடைய செயல் எமக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை வழிபாடாக ஏற்றுக்கொண்டோம். நீ எங்களை வில்வத்தால் பூஜை செய்த பலனாக, சோழ குலத்தில் தோன்றி உலகை ஒரு குடையின் கீழ் ஆளும் சிறப்பை பெற்று வாழ்வாயாக! என்று ஆசீர்வதித்தார்.

வரம் பெற்ற குரங்கு சிவனை வணங்கி, “அய்யனே! அடுத்த பிறப்பிலும் உமது திருவடிகளை மறவாது பூஜிக்க” அருள்புரிவதோடு, அடுத்த பிறவியிலும் குரங்கு முகமே இருப்பதுபோல் சிவபெருமானும் அந்த வரத்தை வழங்கினார்.

அந்த வரத்தின்படி, அந்த குரங்கானது கருவூரில் மாந்ததா என்ற சோழ மன்னனுக்கு மகனாக பிறந்தது. அந்த குழந்தை முசுந்தன் என்று பெயர் பெற்று வளர்ந்து நாட்டின் அரசன் ஆனான். சிவனை மறவாது கருவூர் பசுபதீஸ் வரப் பெருமாள் கோவிலில் திரிப்பணிகள் செய்தான். உலகின் உள்ள பல சிவ தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தான். பகுத்தறிவற்ற குரங்கு பறித்தெறிந்து வில்வம் தனது திருமேனியில் விழுந்ததாக, அந்த குரங்கிற்கு பெரும் சிறப்பு தந்த சிவபெருமானை அன்போடு, பக்தியோடு, வில்வ அர்ச்சனை செய்து பூஜித்தால் நாமும் அது போன்ற பலனை பெறலாம்.

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் ஈசனே 🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான சிவ தந்தைக்கு சிவ ஆத்ம நமஸ்காரங்கள் 🙏

அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...