Wednesday, September 28, 2022

ருத்ர-ரூபினி" "திரிபுர-சூலனி"* *எய்தனூர் துர்க்கையை பற்றி நாம் அறியாத சில ஆச்சரியமான தகவல்கள்*

சிவ சிவ 

🔴🔱🔱 👑🔱🔱🔴
 *அளவில்லாத  ஆற்றலையும் மகத்தான மகிமையும் கொண்ட *ருத்ர-ரூபினி"  "திரிபுர-சூலனி"* 
*எய்தனூர் துர்க்கையை பற்றி நாம் அறியாத சில ஆச்சரியமான தகவல்கள்* 

இன்று   நவராத்திரி உற்சவத்தின் மூன்றாம் நாள் சூலினி துர்க்கையின் வழிபாட்டுக்குரியது. இன்று உலகலாம் கொண்டாடப்படுகிற தசரா, நவராத்திரி, துர்க்கா பூஜை போன்றவை இந்தியாவின் வட, வடமேற்கு மாநிலங்களில் மக்கள் அவர்களின் பிரதான விழாவாக 10 நாட்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் சிறப்பாக  கொண்டாடுகிற, இந்த சூலினி துர்க்கையின் உருவாக்க தலம் *அவதாரத்தலம்* எது தெரியுமா? *எய்தனூர்*!😳 
ஆம் சிவபெருமான் திரிபுராந்தகர்களை வதம் செய்ய  திரிபுராந்தக மூர்த்தியாக திரிபுரம் எரிக்க புறப்பட்டபோது, கூடே உருவானவள் தான் இந்த சூலினி துர்க்கை !அவள் அவதரித்த மூலாதார பீடம் இந்த எய்தனூரே ஆகும். திருவதிகையில் கூட இவளுக்கு அந்த உருவமில்லை அங்கு இருக்கக்கூடிய அம்பாளே சூலினியின் வடிவமாக வழிபடபடுகிறள்.

சமீபத்தில் ஒரு பெரிய சிவாலய கும்பாபிஷேகத்திற்கு சென்று இருந்த போது, ஒரு வயதான பெரிய சிவாச்சாரிய பெருமானோடு குழுவாக சில  விஷயங்களில் தெளிவு பெற பேசிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கே வந்த ஒரு பெண்மணி துர்க்கை பற்றி அவரிடம் ஏதோ கேட்க.. அவர் சொன்ன பல விஷயங்களை நமக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நவ துர்கைகளிலே திரிபுர-சூலினி மிகவும் சக்தி வாய்ந்தவள் திருவதிகையிலே கூட அவளுக்கு மூர்த்தம் இல்லை. இவள் சிவ பெருமானுடைய கையில் இருக்கக்கூடிய சூலத்தின் ரூபமாகவே கருதப்படுகிறாள்  இதனால் இவளுக்கு *ருத்ர ரூபினி* என்கிற பட்டமும் உண்டு. தனி ஆலயத்தில் உள்ள துர்க்கையை வழிபடுவதை விட சிவாலயங்களில் உள்ள பஞ்ச கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்களை, துர்க்கையை வழிபடுவதால் மிகச் சிறப்பான பலன்களை பெற முடியும் என்றும் சிவபெருமானின் அருளை அவர்கள் பிரதிபலிப்பார்கள் என்றார். அப்பொழுது நாம் எய்தனூர்  திருவதிகையோடு தொடர்புடைய திரிபுர சம்ஹார தலம் என்றும் தல வரலாற்றை  சொன்ன உடனேயே அவர்  கோஷ்டத்தில் துர்க்கை இருக்கிறாளா? எப்படிப்பட்ட ரூபம் உள்ளவள் என்று கேட்டார்.  அப்போது நாம் ஏதோ ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்த எய்தனூர் துர்க்கை புகைப்படத்தை  அவரிடத்திலே காண்பித்தோம் ஆச்சரியப்பட்டு போனார். "சூலினி பராக்கிரம ஆவஹனாதி" என்ற சமஸ்கிருத சுலோகத்தை சொல்லி *இவளே தான்! இவளே தான்!* என்று  சொல்லி கருணாய ஸந்ததமாக இருப்பதாக சொன்னார் தற்போது எந்த விதமான பின்னம் இல்லாமல் இருக்கிறதா என்று கேட்டார் கட்டைவிரலில் தான் என்றோம் அதில் ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை இதற்கு கவசம் சாற்றி பிம்பசுத்தி செய்து ஓரடி அளவிலான சூலினி துர்க்கையின் எந்திரம் உருவேற்றி உச்சாடனம் செய்து  வையுங்கள் அவள் கையில் வைத்திருக்கிற சூலத்திற்கு பௌர்ணமி தோறும் ஈசன் மீது வைத்து அபிஷேகித்து துர்க்கையை மீது சாற்றினால் மிக மிக விசேஷமாக இருப்பாள் என்றும். உலகெங்கும் இருக்கிற அம்பாள் கோயில்களில்இருக்கும் விக்ரங்களிலே வைக்கப்பட்டு இருக்கிற திரிசூலங்களிலே இவளுடைய சாநித்தியமே எங்கும் பரவியிருக்கும் என்றும், திரிசூலமே திரிபுர சம்ஹாரத்தின் போது இந்த தலத்தில் உருவானது என்றும், அபிஷேகத்தின் பொழுது முட்டாமஞ்சள், சந்தனம் அரைத்து அந்த மஞ்சளை சந்தனத்தை திருமணமாகவர்ள், நோயுற்றோர் குழந்தை பேறு வறுமை நீங்க மக்களுக்கு கொடுத்து உடம்பில் பூசி முகத்தில் பூசி குளிக்க செய்தால் வெகு விரைவில் பலன் கிடைக்கும் என்றும், அவளை வழிபடுவதற்கு முன்பு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அவரின் அனுக்ஞை பெற்று, சங்கல்பம் செய்து பிறகு அவளுக்கு வழிபாடுகள் நடத்தினால் மிக சிறப்பான பலன்களை விரைவில் பெற முடியும்,   என்றும் இதனால் பலனடைந்தவ ர்கள் மூலமாக பலர் தேடி வர ஆரம்பிப்பார்கள் என்றும் குறிப்பாக வடநாட்டில் இருக்கக்கூடிய மக்களும் இங்கே தேடி வருகிற வாய்ப்பெல்லாம் இருக்கிறது என்றும் நிறைய நியமங்களை முறைகளை சொன்னார்கள். அந்தப் பக்கம் வரும் பொழுது கண்டிப்பாக நானும் வந்து தரிசிக்கிறேன் என்றார்கள், சிலரிடம் இதை சொன்ன பொழுது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இருந்தபோதிலும் இந்த பதிவின் மூலமாக இந்த விஷயங்கள்  பலருக்கும் போய் சேரட்டும் என்கிற நல்லெண்ணத்தில் இதை பதிவிடுகிறோம் ! 

🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...