Sunday, September 4, 2022

ஆன்மீகம் என்பது என்ன❓

#அண்ணாமலை சிவமே
#அருணாச்சல சிவமே.......

** ஆன்மீகம் எனும் வார்த்தை இப்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை ஆன்மீகம் என்றால் கடவுளைப் பற்றி பேசுவது என்று எண்ணுகிறோம்...

 கடவுளைப் பற்றி என்றால் கடவுளிகம் என்றோ கடவுளிசம் என்றோ தானே சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட் பேசுவது கம்யூனிசம் மார்க்சிஸ்ட் பேசுவது மார்க்சிசம். 

* நாம் கடவுளைப்பற்றி பேசுவதை ஏன் ஆன்மீகம் என்கிறோம்? ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பத்திரிகை ஆன்மீக நிகழ்ச்சி என்று எல்லாமே ஆன்மீகம் தான் ஏன்? ஆன்மீகம் என்பது ஆன்மா (உயிர்) பற்றியது ஆன்மாவை மீட்டு எடுக்கும் ஒரு இயல் இகம் ஆன்மீகம் கடவுளைப் பற்றி பேசுவதற்கும் உயிர் எனும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம் ?....

கடவுளை நாம் வணங்குவதோ அல்லது வழிபடுவதோ இந்த ஆன்மா தான் செய்த கர்ம வினைகளை தீர்த்து உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே சொத்து வேண்டும் பணம் வேண்டும் கார் வேண்டும் பங்களா வேண்டும் இன்னும் பிற உலக சுகங்களுக்காக அல்ல.....

* ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ? ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே....

 பெயரை நீக்கி பிணம் என்று பெயரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன? 

* ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும். 

* பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார்...

 அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார்....

 இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரம்மன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்....

* பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும்...

 விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்.

* சூரசம்காரம் செய்யும் முன் தேவர்களுக்கு முருகப்பெருமான் திருசேய்ங்கலூரில் சிவ பூஜை செய்து காட்டினார் அவர் தேவ சேனாபதி அல்லவா ?தலைவர் அல்லவா? அவர் பூஜை செய்த பிறகு தேவர்களிடம் கேட்டார் உங்கள் கஷ்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா ? என்றார் ...

நீங்கள் சிவபூஜை செய்ய மறந்ததால் என்றுகூறி சிவாம்சமான முருக பெருமான் சிவபூஜை செய்து காட்டினார் தலைவன் என்பவன் தான் காட்டிய வழியில் தானே நடந்து காட்ட வேண்டும் என்று தலைவனுக்கான இலக்கணத்தையும் உணர்த்தினார்.... 

* ஆதலால் ஆன்மீகம் என்பதாவது இறைவனை வணங்கி ஆன்மாவை உலகத் தளைகளில் இருந்து மீட்டு எடுக்கும் செயலாகும்.....

#மகேஷ்வரன் அருளோடு ....

#ரமணர் திருவடிகளே
சரணம் சரணம் ....

No comments:

Post a Comment

Followers

திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...

சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்..  ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...