Friday, September 30, 2022

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்* 🌷 *எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்* (சம்பந்தர்)

⚜️ *தெய்வங்களும் பிறரும் சிவ பூஜை செய்து பெற்ற பொருட்கள்* .
வானலோக உயிரினங்களான தெய்வங்களுக்கும் அவதாரங்களுக்கும் இன்னார் என்று அவர்களைக் காட்டும் அடையாளமாக இருப்பவை கரத்தில் உள்ள ஆயுதங்களே, பொருட்களே. ⚜️ *வானகத்து அமரர் தாயே போற்றி* (திருவாசகம்) என இந்த ஆயுதங்கள் பொருட்கள் அனைத்தும் அவர்கள் தமக்கு அப்பனும் அம்மையுமாக உள்ள மெய்க்கடவுள் ஒரே மெய் யன்னையான சிவ பரம்பொருளைப் பூஜை செய்து சிவனருளால் கிடைக்கப் பெற்றவையே* . தெய்வம் அசுரர் மனிதர் என எல்லோருக்கும் கடவுளாய் யார் வேண்டி வழிபட்டாலும் *இல்லை என்று சொல்லாமல் அப்புறம் பிறகு என்று சொல்லாமல் உடனே அருள் புரியும் சர்வேஸ்வரனது அளவற்ற கருணையை*
🌺 *எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்* (சுந்தரர்)
🕉️ *தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம் பின்னை என்னார்* (அப்பர்)
🔯 *வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்* 🌷 *எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்* (சம்பந்தர்)
என்று திருமுறைகள் போற்றுகின்றன.
⚜️ *எல்லார்க்கும் தான் ஈசன்* (திருவாசகம்)
🙏 *எல்லோரும் தொழும் ஈசரே* (சம்பந்தர்)
என பரம சிவன் ஒரே மெய்க்கடவுளாய் எல்லோருக்கும் இறைவனாக சர்வேசுவரனாக அத்தனாக அன்னையாக இருப்பதால் தெய்வம் அசுரர் மிருகம் பறவை என எல்லோருக்கும் அருள் புரிகிறார். தெய்வங்களின் கையில் உள்ள ஆயுதங்களும் *எல்லை யில்லாத பேரருளை எட்டு குணங்களில் ஒரு குணமாக உடைய பரமேசுவரன் அருளியவையே* . அசுரர், அவதாரம் ஆகியோர் கையில் உள்ளவையும் பராபரன் அருளியவையே.
🔯 *திருமால்* திருவீழி மிழலையில் ஆயிரம் சிவ நாமம் ஓதிப் பூஜை புரிந்து சுதர்சனம் என்ற சக்கரத்தைப் பெற்றார். திருமால்பூரில் (திருமாற்பேறு) சிவ பூசை செய்து அதைத் தாங்கும் வல்லமை கொண்டார். திருச் சங்கமங்கை என்ற தலத்தில் சங்க நாதரைப் பூசை செய்து சங்கினைக் கைக்கொண்டார். சீர்காழியில் பிரம்ம புரீசரைப் பூசித்துச் சட்டை நாதரிடமிருந்து கதாயுதம் பெற்றார். முந்தைய ஒரு திருமாலின் தோலைச் சட்டையாக அணிந்து அருளியவர் சட்டை நாதர். சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை மயூர நாதர் கோயில், வைதீசுவரன் கோயில், திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்ப ஹரேஸ்வரர் கோயில் ஆகிய சிவத் தலங்களில் கதாயுதம் தாங்கிய சட்டை நாதரைக் காணலாம்.
🌷 *பிரம்மன்* ஞான தட்சிணா மூர்த்தியையும் யோக தட்சிணா மூர்த்தியையும் பூஜித்து வேதம் ருத்திராட்சம் கமண்டலம் பெற்றுக் கொண்டார். 🕉️ *சரஸ்வதி* வீணாதர தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வீணாபாணி ஆனாள்.
🌷 *லட்சுமி* பல தலங்களில் சிவ பூஜை செய்து ஐஸ்வர்யேஸ்வரரை வழிபட்டு சங்க நிதி பதும நிதி ஆகிய அட்சய செல்வம் பெற்றாள். 💥 *முருகன்* திருச்செந்தூரில் சிவ பூஜை செய்து ஞான வேல் உட்படப் பன்னிரண்டு ஆயுதங்களைப் பெற்றான். கீழ் வேளூரில் சிவ பூஜை செய்து எடுக்க எடுக்கக் குறையாத அட்சய ஆயுதங்களைப் பெற்றான். பார்வதிக்கு எந்த ஆயுதமும் கிடையாது. பார்வதிக்கும் முருகனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதோமுக மூர்த்தியின் நெறிக் கண்ணிலிருந்து பிறந்து வந்த முருகனுக்குத் தாயும் சிவனே தந்தையும் சிவனே. *முருகன் உக்கிர குமாரப் பாண்டியனாகப் பிறந்த போதும் வேலோடு வளை செண்டு ஆகியவற்றை அருளியவர்* தாயாகிப் பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய *அன்னையும் அப்பனுமாக உள்ள சுயம்பு லிங்கச் சொக்க நாதரே*. சிக்கல் தலத்தோடு முருகன் வேலுக்கு சம்பந்தம் இல்லை. அம்மன் முருகனுக்கு வேல் கொடுத்தாள் சம்பந்தருக்குப் பால் கொடுத்தாள் ஓசை கொடுத்தாள் என்பவையெல்லாம் *எப்போதும் எல்லோருக்கும் பொய் கொடுக்கும் அஞ்ஞானிகளின் வடிகட்டிய நாடகக் கட்டுக் கதையே*.
🙏 *துர்கை* மகிஷாசுரனை வெல்லும் வரம் வேண்டித் திருக் கோவலூரில் தன்னைப் படைத்த பரமேஸ்வரனைப் பூஜை செய்தாள்.
🔱 *அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி* (சம்பந்தர்)
🔱 *சூலத்தால் கோத்துத் *துதித்து அங்கு அவன் இருக்கும் வண்ணம் அருள் கொடுத்து அங்கு ஏழேழ் பவம் அறுத்த* பாவனைகள் போற்றி (நக்கீரர்)
என அந்தகாசுரனைத் திரி சூலத்தில் கோர்த்து *முக்தி அளித்து சிவ கணமாக்கி சிவலோகத்தில் வாழ வைத்த* வீரட்டேஸ்வரரைப் பூஜித்துத் தொழுத துர்கைக்குத் திரி சூலத்தையும் வெற்றி வரமும் சூலபாணி அருளினார்.
⚜️ *ஜமதக்கினி முனிவரது மகன் இராமன்* கேரளம் முழுவதும் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பரமேஸ்வரனிடமிருந்து பரசு என்ற மழுவாயுதம் (கோடரி) பெற்றுப் பரசு ராமன் ஆனார்.
🔴 *இராவணன்* ஈசனை இசையால் துதித்துத் தேரும் வாளும் மூன்று கோடி வாழ்நாளும் அதாவது எண்பத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழு ( 81967) ஆண்டு இரண்டரை மாதம் ஆயுளும் பெற்றான்.
⚜️ *சம்பந்தரைத்* தோடும் குழையும் அணிந்த இருபாலீசராய் அம்மை யப்பனாய் நந்தி மேல் வந்து எடுத்து மடி மீது அமர்த்தித் *தங்கக் கிண்ணத்தில் பசும்பால் சாதம்* ஊட்டி ஆட்கொண்ட பிரம்மபுரீஸ்வரர் அவர் எதுவும் வேண்டாமலேயே கேட்காமலேயே *யாரும் இயக்காமல் பாடலுக்கு ஏற்றவாறு தானே ஒலிக்கும் தெய்வீகத் தாளம்* , முத்துப் பல்லக்கு, ஊது குழல், முத்துப் பந்தல், அட்சய ஆயிரம் பொன் முடிப்பு, படிக்காசு அருளித் தொடர்ந்து அருள் மழை பொழிந்தார்.
இவ்வாறு இன்னும் பலப் பல. தெய்வங்களின் கரத்தில் உள்ள பொருட்களும் தேவர் அசுரர் முனிவர் சித்தர் அடியார் தொண்டர் மற்றும் *பிறர் வாழும் வாழ்வும் சிவ பூஜையால் சிவனருளால் உண்டானவையே*. எல்லையில்லாத சக்தி உடைய ஈசன் கருணையால் பெற்றவையே.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...