Monday, September 19, 2022

உழவாரப்பணிஎன்னும் தூய்மைப்பணி

🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏

#இது_கலியுகம்

இந்தக் கலியுகத்தில் மனித ஆன்மா பிறக்கும் போது தூய்மையாக தான் பிறக்கின்றது இந்த மனித ஆன்மா வளரும் போது சுற்றியுள்ள
சூழல்கள்
இயக்க அந்த ஆன்மாவை தவறான திசையை நோக்கி மாற்றிவிடுகின்றது

 குழந்தையாக பிறக்கின்ற இந்த ஆன்மா இறக்கும் வரையில் தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் 
நமது குழந்தைகளை சைவ சித்தாந்த முறைப்படி வளர்க்க வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு சித்தர்கள், நாயன்மார்கள், ‌
சார்ந்த தகவல்கள் மற்றும்
திருவாசகம், பாராயணம், 
அடியார் வாழ்வியல் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.

இல்லந்தோறும் திருமுறைகளை ஒலிக்கச்செய்வோம்

நமது அடுத்த தலைமுறை குழந்தைகளை சைவ சித்தாந்த முறைப்படி வளர்ப்போம்...

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...

திருச்சிற்றம்பலம்

தாய்மொழி
தமிழ் மொழி மறவாமல் பேசுங்கள்....

சைவசமயத்தை
மறவாமல்
கடைபிடித்து
போற்றுங்கள்

சைவநெறியை இடைவிடாது
வழுவாது மறவாமல் வாழ்ந்து காட்டுங்கள்....

திருமுறைகளை
வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும்
மறவாமல்
பாராயணம் செய்து
போற்றி ஓதுங்கள்......

சித்தர்கள் நாயன்மார்கள்
வழி பின்பற்றி 
மறவாமல் செல்லுங்கள்....

தங்கள் பிள்ளைகளுக்கு
தூய்மையான தமிழ் பெயர் சூட்டி
மறவாமல்
வாழ்நாள் முழுமைக்கும்
நோயில்லாமல் வாழ வழிசெய்யுங்கள்...

வாரம் ஒருமுறையேனும் பாரம்பரிய உடைகளை உடுத்துங்கள்....

வாரத்தில் இருமுறையாவது பாரம்பரிய உணவை உண்ணுங்கள்....

தினமும் அருகிலுள்ள
 சிவ ஆலயத்திற்கு தவறாமல் சென்று வழிபாடு செய்யுங்கள்....

சிவபெருமான் தந்த இப்புனித உடலை பாதுகாத்து கொள்ளுங்கள்....

வாரம் ஒருமுறையாவது
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவேளையாவது
ஒன்றிணைந்து
உணவு உண்ண முயற்சி செய்யுங்கள்....

எந்நாளும் தினமும் அவரவர் இல்லத்தில் மறவாமல் சிவவழிபாடு செய்து
இல்லத்தை
புனிதமாக்குவீர்...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
**திருச்சிற்றம்பலம்**
 
உழவாரப்படையாளி
தூய்மையின் வழிகாட்டி
எம்பிரான்
அப்பர் பெருமான்
வழிகாட்டுதலோடு

உழவாரப்பணி
என்னும் தூய்மைப்பணி

ஆலயம் தோறும் மரங்கள் இருப்பதாலே

சிறிதளவு 
காற்றுவந்து மழை பெய்கிறது....

அதை பின்பற்றி இல்லந்தோறும்
உயிர்காற்றான
பிராணவாயு ஆக்சிஜன் தரும்
மரக்கன்றுகளை நடுவோம்....

அண்டத்தையும் உழவாரப்பணி செய்வோம்
பிண்டத்தையும் உழவாரப்பணி செய்வோம்

உன்
உடம்பையும் உழவாரப்பணி செய்
உன் மனதையும்
உழவாரப்பணி செய்

ஆலயத்தையும் உழவாரப்பணி செய்வோம்
இல்லத்தையும் 
உழவாரப்பணி செய்வோம்

இல்லந்தோறும்
 மரம் நடுவோம்
நோயற்ற வாழ்வோம்

திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்....

***சிவனார் ஆலயம் தோறும்
மூலிகை அபிடேகம் நடத்துவோம்***

**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
மாதம்  ஒருமுறை சித்தர்கள் நாயன்மார்கள் வழிபட்ட  பழமையான சிவனார்  ஆலயத்தில் உழவாரம்,
திருவாச முற்றோதுதல், தமிழ் முறையில் சிவவேள்வி, திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி, மற்றும் மூலிகை அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
அனைவரும் வருக...
**தற்போது தென்தமிழ்நாட்டில் உள்ள யாரும் அதிகமாக அறியப்படாத சிவனார் ஆலயங்களை நோக்கி எமது வழிபாடுகள் ஆலயப்
பயணங்கள்...

சொக்கநாதா
சொக்கநாதா

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...