ஏனாதிநாத நாயனார் வரலாறு :::
எயினனூர் எனும் எய்தனூரில் பிறந்து வாழ்ந்தவராவர்.இவர் விபூதி தரிப்பதிலும்.. விபூதி தரித்த சிவனடியார்களை சிவபெருமானாகவே.. கருதி அவர்களிடம் பேரன்பு காட்டியும். . சிவநெறியில் சிறந்தோங்கி விளங்கினார். அரசர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் வாள்வித்தை கற்பித்து.. அதில் கிடைக்கும் வருவாயில் சிவனடியார்களுக்கு கொடுத்தும் தாமும் புசித்து வாழ்ந்து வந்தார்
இவரின் தொழில் திறமையை கண்ட தாயபாகத்தன் அதிசூரன் என்பவன் தனக்கு வருவாய் குறைதலையும் அவருக்கு பெருமை பெருகுவதையும் கண்டு பொறாமையுற்று பெரும் படையுடன் போரிட்டு தோற்றான். இனிமேல் இவரிடம் நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாது என்று எண்ணி வஞ்சனையால் வெல்ல திட்டமிட்டு தூதுவன் மூலம் நேருக்கு நேர் மோதிட மறுநாள் காலை போர்களம் வரசொல்லி தகவல் அனுப்பினான். . அவ்வாறே ஏனாதிநாதரும் போருக்கு செல்ல. . இப்பாதகன் நெற்றியில் நிறைய திருநீறு பூசி கேடயத்தால் நெற்றியை மறைத்து கொண்டே சண்டையிட்டு வீழும் நேரத்தில். . பயந்து கேடயத்தை நீக்க. . நீறணித்த நெற்றியை கண்ட ஏனாதிநாதர் எல்லாவற்றையும் துறந்து அவன் சிவனடியார் என எண்ணி அவன் காலில் விழுந்து கதறினார் . அந்த நேரத்தில் அப்பாதகன் இவரை கொல்ல முற்படுகையில் சுதாரித்துக் கொண்ட ஏனாதிநாதர். . நிராயுதபாணியான என்னை கொன்ற பாவம் ஓரு சிவனடியாருக்கு வரக்கூடாது என்று எண்ணி வாள்கேடயம் ஏந்தி போரிடுவார் போல் நடித்தார். . அப்போதும் அப்பாதகன் இவரை கொல்ல முற்படுகையில் ஆதிபுராதீசர் தோன்றி தன்னடி நிழலில் சேர்த்து கொண்டார்.!!
No comments:
Post a Comment