Sunday, October 16, 2022

இலிங்க வகைகள் 17

சிவ சிவ

இலிங்க வகைகள்
*************************
சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக இலிங்கம் வழிபடப்படுகிறது. இந்த இலிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

இலிங்க வகைகள்
**************************

1) சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்

2) தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.

3) காண லிங்கம் - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

4) தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

5) ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

6) இராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

7) தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூசை செய்யப்பட்டு முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த இலிங்கம்

8) அர்ஷ லிங்கம் - ரிசிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய இலிங்கம்

9) அசுர லிங்கம் - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

10) மானுட லிங்கம் / மனுஷ்ய லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்

11) மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

12) தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட இலிங்கம்

13) முக்தி இலிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

14) ஹேம இலிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

இவற்றில் மனுஷ்ய இலிங்கமானது தொன்னூற்று வகையாக உள்ளதென மகுடாகமம் எனும் சைவ ஆகமம் கூறுகிறது.
==================================

1) க்ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.

2) வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் இலிங்கங்கள்.

3) ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் இலிங்கங்கள்.
==================================

பஞ்ச இலிங்கங்கள்
*************************

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். [1] இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

* சிவ சதாக்கியம்

* அமூர்த்தி சதாக்கியம்

* மூர்த்தி சதாக்கியம்

* கர்த்திரு சதாக்கியம்

* கன்ம சதாக்கியம்
==================================

பஞ்சபூத இலிங்கங்கள்
*******************************

நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன இலிங்கங்கள் பஞ்சபூத இலிங்கங்கள் எனப்படும்.
==================================

அப்பு லிங்கம்

தேயு லிங்கம்

ஆகாச லிங்கம்

வாயு லிங்கம்

அக்னி லிங்கம்
==================================
முக லிங்கங்கள்
**********************

ஏக முக லிங்கம்

இரு முக லிங்கம்

மும் முக லிங்கம்

சதுர் முக லிங்கம்

பஞ்ச முக லிங்கம்
==================================

ஆறுவகை இலிங்கங்கள்
**********************************
திருமூலர் தனது நூலான திருமந்திரத்தினுள் ஆறுவகையான இலிங்கள் பற்றி குறிப்பிடுகின்றார், அவையாவன 

அண்ட இலிங்கம், 

பிண்ட இலிங்கம், 

சதாசிவ இலிங்கம், 

ஆத்ம இலிங்கம், 

ஞான இலிங்கம், 

சிவ இலிங்கம் என்பவனவாகும்.

இவற்றில் அண்ட இலிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும், பிண்ட இலிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும், சதாசிவ இலிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும், ஆத்ம இலிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும், ஞான இலிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும், சிவலிங்கம் என்பது பொதுவான இறைவழிபாட்டிற்குறிய குறி.
==================================

பிற இலிங்க வகைகள்
*******************************
1) கந்த லிங்கம்

2) புஷ்ப லிங்கம்

3) கோசாக்ரு லிங்கம்

4) வாலுக லிங்கம்

5) யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம்

6) சீதாகண்ட லிங்கம்

7) லவண லிங்கம்

8) திலாப்சிஷ்த லிங்கம்

9) பாம்ச லிங்கம்

10) கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம்

11) வன்சங்குர லிங்கம்

12) பிஷ்டா லிங்கம்

13) ததிதுக்த லிங்கம்

14) தான்ய லிங்கம்

15) பழ லிங்கம்

16) தாத்ரி லிங்கம்

17) நவநீத லிங்கம்

18) கரிக லிங்கம்

19) கற்பூர லிங்கம்

20) ஆயஸ்காந்த லிங்கம்

21) மவுகித்க லிங்கம்

22) ஸ்வர்ண லிங்கம்

23) ரஜத லிங்கம்

24) பித்தாலா லிங்கம்

25) திராபு லிங்கம்

26) ஆயச லிங்கம்

27) சீசா லிங்கம்

28) அஷ்டதாது லிங்கம்

29) அஷ்ட லோக லிங்கம்

30) வைடூர்ய லிங்கம்

31) ஸ்படிக லிங்கம்

32) பாதரச லிங்கம்

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...