Sunday, October 16, 2022

குரு தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர்.

_ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

*குரு*
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும். 

இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி.

தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். 

*சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள்*

1. ஈசானம், 

2. தத்புருஷம், 

3. அகோரம், 

4. வாமதேவம், 

5. சத்யோஜாதம்  என்பவைகளாகும்.

ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

தத்புருஷ முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

வாமதேவ முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

சத்யோதஜாத முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநாரி ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

*ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு*

தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.

*மூலமந்திரம்*

"ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா"

*தியானம்*

ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.

*துதி*

குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

*காயத்ரீ*

"ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|"

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...