Tuesday, October 11, 2022

_சர்க்கரை நோயை போக்கும் கோயில் திருவாரூரில் அருகில் உள்ள திருவெண்ணியூர்..._

_சர்க்கரை நோயை போக்கும் கோயில்    திருவாரூரில் அருகில் உள்ள திருவெண்ணியூர்..._


திருவெண்ணியூர் கோயில்வெண்ணி

மூலவர் : வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)
  அம்மன்/தாயார் : அழகிய நாயகி (சவுந்தர நாயகி)
  தல விருட்சம் : நந்தியாவர்த்தம்
  தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்
  ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்
  புராண பெயர் : திருவெண்ணியூர், கோயில்வெண்ணி
  ஊர் : கோயில்வெண்ணி
  மாவட்டம் : திருவாரூர்
 மாநிலம் : தமிழ்நாடு
 
 பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்
     
திருவிழா: 
    நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.  
     
தல சிறப்பு: 
    பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்: 
     கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். கருவறை அகழி அமைப்புடையது.

தலபெருமை: 
     மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது.

இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.

சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.

கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.

இந்த பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம்.

தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.

தல வரலாறு: 
     
 முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர். அப்போது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள். அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர்.
இறைவன் அசரீரியாக தோன்றி,""எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்,'என்றருளினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் ஆனது. தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது.

சர்க்கரை நோயை போக்கும் கோயில்  சர்க்கரை வியாதியை போக்கக் கூடிய கோயிலாக உள்ளது திருவாரூரில் அருகில் உள்ள திருவெண்ணியூர் உள்ள வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்.தற்போது கோவில்வெண்ணி என்று அழைக்கப்படுகின்றது திருவாருரில் இருந்து 28 கிமி தூரம் தஞ்சாவூர் சாலையில் உள்ளது இந்த கோவில் அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

 

உலகில் மிக அதிகமானோர் பாதித்திருக்கும் நோய் சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோய்.

இன்சுலின் எனும் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து மருந்துவர்கள் கொடுக்கும் மருந்து சாப்பிட்டு வர அதை கட்டுக்குள் வைக்கலாம் என்கின்றனர்.

மருத்துவர்களை தாண்டி உள்ளது தான் கடவுள் மீது உள்ள நம்பிக்கை. அந்த வகையில் திருவெண்ணியூரில் உள்ள வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது.திருவெண்ணியூர்  சம்பந்தர் பதிகம் பாடல் வரிகள் 

அமைந்திருக்கும் இடம்:

திருவாரூர், நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

மூலவர்: வெண்ணிகரும்பேஸ்வரர்

நாயகி: அழகிய நாயகி (சவுந்தர நாயகி)

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 5-8 மணி வரை

1000-2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பழமையான புராதான கோயிலாக உள்ளது.

இந்த தலத்தை நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

காளி தேவியால் வெல்ல முடியாத திருமாந்தம்குன்னு கோயில் புராணம் மற்றும் வரலாற்று சிறப்புகள்!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பிரகாரத்தை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் தூவினால், சர்க்கரையை மட்டும் எறும்புகள் திண்றுவிட்டால், அவர்களுக்கு உடனே சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படைத்து தன் நேர்த்திகடனை தீர்க்கின்றனர்

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...