Tuesday, October 18, 2022

திருவதிகையில் கிரிவலம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில்

திருவதிகையில் கிரிவலம் 
பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பழம் பெரும் பாடல் பெற்ற பாரம்பரியம் மிக்க திருத்தலமாக விளங்குவது வீரட்டானேஸ்வரர் கோயில் ஆகும். தேவராம்  முதல் முதலில் பாடப்பட்ட தலமாகும். முதன் முதலாக தேர் பவணி உருவான தளமாகும். . பௌர்ணமி நாளில் அபூர்வ சக்திகள் நம்மை ஆட்கொள்கின்றன.  அதில் ஒன்றுதான் கிரிவலம். கிரி என்ற சமஸ்கிருத சொல் லுக்கு மலை என்ற பொருள். இதில் இறைவன் சிவபெருமான் சார்ந்துள்ள மலையை சுற்றி வந்து  வழிபடுவதால் குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகள் நீங்கி நன்மை பயக்கும். 

மலையில் பல்வேறு மூலிகைகள் இருப்பதால் காற்றின் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. ஆனால் பௌர்ணமி நன்னாளில் திருவதிகை கோயிலில்  நடைபெறுவது கிரிவலம், குறித்து பலருக்கு சரியான பொருள் விளக்கம் என்ன என கேட்கின்றனர். இது குறித்து பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன்  கூறியதாவது. இக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் உன்னதாமான ஒன்றாகும். பறக்கும் சக்தி கொண்ட 3 மலைகோட்டை அசுரர் களான தாருகா ட்சன்,  கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூவரையும் சிவபெருமாள் சம்ஹாரம் செய்தார். 

இதனால் இங்குள்ள சிவபெருமாள் திரிபுர சம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப் படுகிறார். அப்பொழுது கோட்டை அழித்த சாம்பல் இத்திருத்தலத்தில் நிறைந்து  காணப்படுகிறது. இச்சாம்பல் நிறைந்த பகுதியில் கிரிவலம் செல்வது மேலும் சிறப்பாகும். ஏனெனில் திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவதிகையில் வாழ்ந்தால்  முக்தி, திருவண்ணாமலையில் இறந்தால் முக்தி என்பது ஆன்மீக சான்றோர் பெருமக்கள் கூறி வந்த திருவாக்காகும். எனவே இக்கோயிலில் கிரிவலம் செல்வது  மிக சிறப்பாகும். மேலும் திருவதிகையில் கிரிவலம் செல்வதால் திருவதிகையில் வாழ்ந்த முக்தியும் பெறலாம். 

திருவருள் முதன்மையாக அளிப்பது இத்தலமே. கிரிவலம் செல்வதால் 16 பேறும் பெறலாம். குழந்தை பாக்கியம் இல்லாமல் இத்தலத்தில் அர்த்த ஜாம பூஜையில்  கலந்துகொண்டு அபிஷேக பால் அருந் தினால் குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண கோலத்தில் அம்பாள் காட்சியளி ப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்வதால்  திருமண தடை நீங்குவதாக ஐதீகம். இத்திருத்தலத்தில் திலவதியார் அப்பரின் சூலைநோயை தீர்ப்ப தற்காக சிவபெருமானை வேண்டி குளத்தில் இருந்து தீர்த்தம்  கொடுத்து சூலை நோயை தீர்த்தார். இந்த தீர்த்தம் தற்பொது வற்றாமல் இன்றும் வழங்கப்படுவதால் பல்வேறு நோய் தீர்க்கப்படுகிறது. 

இத்திருத் தலத்தில் உள்ள சிவபெ ருமானை தரிசித்தால் கயிலை மலை சென்று கயிலைநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். இக்கோயிலில் கிரிவலம் சென்று  வழிபடும்போது ஆனவம், வன்மம், மாயை ஆகியவற்றை முற்றிலுமாக நீங்கும். இத்தகைய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் கடந்த 2012ம் ஆண்டு சித்திரை  மாதம் பௌர்ணமி அன்று கிரிவலம் துவங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள், சிவனடியார்கள் கிரிவலம் செல்கின்றனர். இதன்  காரணமாக பௌர்ணமி அன்று கட்டுக்கடங்காத கூட்டம் கிரிவலத்தின்போது ஓம் நமச்சிவாய என்ற நாமம் ஒலிக்கிறது.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...