Tuesday, October 18, 2022

கோரக்கரின் அவதார வரலாறு

கோரக்கரின் அவதார வரலாறு
பதினென் சித்தர்களின் ஒருவரான மச்சேந்திர நாதர் ஒருசமயம் வடக்கு பொய்கை நல்லுரில் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கும்போது அவ்வீட்டு பெண் அவருக்கு பிச்சை இட்டு தனக்கு குழந்தை இல்லாத குறையை கூறி தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று மச்சேந்திர நாதரிடம் வேண்டிநால்.
மச்சேந்திரர் உடனே அவர் வைத்திருந்த குருமருந்தை விபூதியாக அந்த பெண்னிடம் கொடுத்து அதை சாப்பிட்டால் உனக்கு பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று சொல்லி சென்றுவிட்டார். இந்த விஷயத்தை அந்த பெண் தன் பக்கத்து வீட்டு பெண்னிடம் சொல்ல அவளோ சாமியார்கள் கொடுத்த விபுதியை சாப்பிடாதே அதில் உணக்கு வசியம் வைத்திருக்கலாம் அது உன்னை மயக்கிவிடும் அபாயம் உண்டு என்று எச்சரித்து சென்றுவிட்டாள் இவளோ பயந்து அந்த விபூதியை எறியும் அடுப்பில் கொட்டி விட்டாள்.

பண்ணிரெண்டு ஆண்டுகள் கழித்து மச்சேந்திர சித்தர் மீண்டும் அவ்வூருக்கு திரும்பி அதே வீட்டில் பிச்சைக் கேட்டு நிற்கிறார். பிச்சையிட வெளிவந்த பெண்ணை பார்த்து என்னை அடையாளம் தெரிகிறதா எங்கே உன் பிள்ளை நான் பார்க்க வேணடும் என்று கூற, அந்த பெண் சித்தரின் காலில் கோரக்கர்விழுந்து என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கள் அளித்த விபூதியை சாப்பிடாமல் அதை அடுப்பில் எரிந்துவிட்டேன் என்று நடந்ததை கூறி, எனக்கு இன்று வரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று அழுது நின்றாள். மச்சேந்திரர். அப்பெண்னிடம் அடுப்பில் எரிந்த விபூதியின் சாம்பலை எங்கே போட்டாய் என்று கேட்டார் அவள் கோரைபுற்கள் நிறைந்த ஒரு குப்பைமேட்டை காண்பித்தாள் உடனே மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கி கோர்க்கா என்று கூவி அழைத்தார், உடனே அக்குப்பை மேட்டிலிருந்து 12 வயது பாலகனாக ஒரு குழந்தை வெளிவந்தது. அக்குழந்தையை கட்டி அனைத்து ஆசிர்வதித்து அப்பெண்னிடம் கொடுத்தார். இதுவே கோரக்கரின் அவதார வரலாறு.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...