_அதிசய மூன்று பைரவர் திருத்தலங்கள்..._
காசி நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார்.
காசியில் பைரவருக்கு பூஜைகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது ஐதீகமாகும். கால பைரவர் சில சிவன் கோவில்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருவார், ஆடைகள் ஏதுமின்றி 12 கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண கோலத்தில் காட்சி தருவார். கால பைரவர், சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர் காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.
ஆதி பைரவர் தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம்....
வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான். தனியாக முருகப்பெருமான் கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத் தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
*கடன் தீர்க்கும் பைரவர்*
திருப்பூர் மாவட்டம் நல்லூர் என்ற இடத்தில் விஸ்வேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள பைரவர் விசேஷமானவர். இந்த பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. பைரவரின் இடது மற்றும் வலது காதுகளில் புணுகு சாத்தி வழிபாடு செய்தால், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment