Saturday, October 1, 2022

ராம ராம ராம ராம !!ராம் என்கிற வார்த்தை ஒரு மந்திரமாகும்,

ராம ராம ராம ராம !!
ராம் என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும்,
அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்புடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும்.

தாரக மந்திரம் என்கிற ஒரு சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லச்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும்

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.  
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.

ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்  
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.  
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

ராம நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து. நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.

பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.  
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.

நாமத்துக்கு விலக்கு இல்லை.  
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்  
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.

நாமம் தாய்-தந்தை போன்றது.  
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.  
பவரோக அருமருந்து நாமம்.

சாஸ்திரங்களின் முடிவு நாமம்.  
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.

நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.  
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.

நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்  
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.  
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.

நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.  
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.

நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.  
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்  
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.

நாமத்தால் அடைய நாமமே சாதனம்.  
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.  
நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.

ராமநாமம் நினைப்போம்!  
ராமநாமம் துதிப்போம்! !  
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...